Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையில் கங்கை நதி சுத்தம் செய்யப்பட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உண்மை பரிசோதிக்கும் குழு பிபிசி
 
  •  
கங்கை புகைப்படம்படத்தின் காப்புரிமை twitter.com/VanathiBJP

கங்கை நதியை சுத்தம் செய்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது என்று தென் இந்தியாவில் சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

 

#5YearChallenge மற்றும் #10YearChallenge என்ற ஹாஷ்டாகுடன் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படமானது பகிரப்பட்டுள்ளது. கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அந்த சமூக ஊடக பகிர்வு கூறுகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனும் அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

 

கங்கை நதியின் மாற்றத்தை பாருங்கள். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போதும், 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் போது எப்படி உள்ளது என்று பாருங்கள் என்கிறது ட்வீட்.

வேறு சில தென் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

வலதுசாரி சமூக ஊடக குழுக்களான "The Fortified Indian" and "Right Log Dot In" குழுக்களும் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் பக்கங்களில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது rightlog.in

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது rightlog.in

"BJP for 2019 - Modi Mattomme," என்கிற கன்னட ஃபேஸ்புக் குழுவும் இந்த புகைப்படத்தை கடந்த வாரம் பகிர்ந்துள்ளது.

அதில், "இந்த மாற்றத்தை பாருங்கள். மீண்டும் நரேந்திர மோதி ஆட்சி வேண்டும் என்பதற்கு இந்த மாற்றங்களே போதும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி மேற்கொண்ட ஆய்வில், அந்த புகைப்படங்கள் உண்மைதான். ஆனால்,எந்த விவரிப்பில் பகிரப்படுகிறதோ அந்த விவரிப்பு உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.

அந்த குழுக்கள் இந்துக்களின் புனிதநகரமான வாரணாசியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளன.

ஆனால், அவை 2009 மற்றும் 2019 காலகட்டத்தை சேர்ந்த புகைப்படங்கள் அல்ல.

முதல் புகைப்படம்

ரிவர்ஸ் இமேஜ் தேடலில், 2009ஆம் ஆண்டு புகைப்படம் என கோரப்படும் அந்த புகைப்படம், அவுட்லுக் சஞ்சிகையால் 2015 - 2018 இடையிலான காலக்கட்டத்தில் கோப்புப் படம் என பல முறை பகிரப்பட்டு இருக்கிறது.

கங்கை புகைப்படம்படத்தின் காப்புரிமை JITENDER GUPTA/OUTLOOK

அவுட்லுக் சஞ்சிகையின் புகைப்பட ஆசிரியருடன் பேசினோம்.

அவர், "2011ஆம் ஆண்டு மத்தியில் கங்கை நதியின் நிலை குறித்து ஒரு புகைப்பட கட்டுரைக்காக நான் வாரணாசி சென்றேன். இந்த புகைப்படம் அந்தக் கட்டுரைக்காக எடுக்கப்பட்டது. பல முறை நாங்கள் பல்வேறு கட்டுரைகளுக்காக அந்த புகைப்படங்களை பயன்படுத்தி உள்ளோம்".

அது தொடர்பான இணைப்புகள்

2011 ஆம் ஆண்டு, காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது, பகுஜன் சமாஜ் உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்தது.

இரண்டாவது புகைப்படம்

இந்த படத்தை பகிர்ந்து தான் கங்கை வியக்க வைக்கும் அளவு மாறி உள்ளதாக கூறுகின்றனர்.

கங்கை புகைப்படம்படத்தின் காப்புரிமை KEN WIELAND/FLICKR

ரிவர்ஸ் தேடல் மூலம் ஆராய்ந்ததில் இந்த புகைப்படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவருகிறது.

வாராணாசி குறித்து செய்திகள் கொண்ட வட ஐரோப்பாவின் விக்கிபீடியா பக்கத்திலிருந்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை ஃப்ளிக்காருக்காக அமெரிக்க புகைப்பட கலைஞர் கென் வைலாண்ட் எடுத்தது என்கிறது விக்கிப்பீடியா.

இந்த புகைப்படம் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்கிறார் அவர்.

இந்த காலக்கட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி.

பாரதிய ஜனதா கட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.

கங்கையின் நிலை என்ன?

கங்கை நதியை சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை என்கிறது பாராளுமன்ற நிலைக் குழுவின் கடந்தாண்டு அறிக்கை.

கங்கையை சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய பசுமை ஆணையமும் அரசை குற்றஞ்சாட்டி உள்ளது.

கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தனது உண்ணாவிரத போராட்டத்தின் போது, "கங்கையை சுத்தம் செய்வது தொடர்பாக நான் எண்ணற்ற கடிதங்களை பிரதமர் அலுவலகத்திற்கும், நீர் வள துறைக்கும் எழுதினேன். ஆனால், அது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை" என்கிறார் அகர்வால்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோதி, வாராணாசியில் கங்கை சுத்திகரிப்பு குறித்து பேசினார்.

அவர், "நான் இங்கு நானாக வரவில்லை. வேறு யாரும் என்னை அழைத்து வரவில்லை. கங்கைதாய் அழைப்பின் பெயரிலேயே இங்கே வந்தேன்" என்றார்.

ஆட்சிக்கு வந்தப்பின்னும், கங்கை சுத்தகரிப்பில் தீவிரமான நடவடிக்கை எடுத்தார். கங்கை பாதுகாப்புக்காக அமைச்சரவையை உண்டாக்கினார்.

கங்கை சுத்திகரிப்புக்காக 2014 - 2018 இடையேயான காலகட்டத்தில் ரூபாய் 3,867 கோடி ஒதுக்கப்பட்டது என மாநிலங்களவையில் அமைச்சர் சத்யபால் சிங் கூறினார்.

எந்தளவுக்கு கங்கை சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான தரவுகள் இல்லை என்கிறது 2018ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவல் உரிமைச் சட்ட தகவல்.

https://www.bbc.com/tamil/india-47134383

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.