Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
பௌத்த மாநாடுபடத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/AFP/GETTY IMAGES Image caption கோப்புப்படம்

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது.

பௌத்த துறவிபடத்தின் காப்புரிமை North Governor Media

வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுக் கொள்வதே இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

அத்துடன், வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தில் தமிழர்கள் செரிந்து வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகள் அனுமதியின்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

வடக்கு பகுதியில் பௌத்த விஹாரைகளில் சில நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ள போதிலும், பௌத்த மாநாடொன்று இதுவரை காலமும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பின்னணியிலேயே, வட மாகாண ஆளுநரின் தலையீட்டில் இந்த பௌத்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-47184969

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?

 

kilinochchi-buddha-statue-1-300x200.jpgவடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

வடக்கில், இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடத்தப்படாத நிலையில், பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன், வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த ஆளுநர்கள் பதவியில் இருந்த போதே, இத்தகைய மாநாடு நடத்தப்படாத நிலையில், தமிழரான ஆளுநரின் தலைமையில், பௌத்த மயமாக்கல் குறித்து குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இத்தகைய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர், அரச செயலகங்களில் மும்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், சுரேன் ராகவன், பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்கள மொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/02/10/news/36334

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்கள மொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்ர கள்ள வேலையை யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காகவே. இவரை தமிழர்  என்று மைத்திரி எங்கட காதில பூச்சுத்தினவர். சிங்களவன் தமிழருக்கு காெடுக்கும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அது கருக்குமட்டையாகத்தானிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.