Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரணிக் கொள்ளைக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரணிக் கொள்ளைக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது

February 16, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

கொடிகாமம் வரணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது என்பது அந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் ஊடாக அறியக்கிடைத்துள்ளது என காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.

இயற்றாலைக் கொள்ளைச் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீடு தொடர்பில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபரே கொள்ளையர்களுக்கு வழங்கியுள்ளார். அதனால் அந்தச் சம்பவத்தில் பொதுமக்கள்ளால் பிடிக்கப்பட்ட நபரும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் காவல்துறையினா கூறினர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் ஊடாகவும் அவரது அலைபேசியில் பெறப்பட்டுள்ள தரவுகள் மூலம் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபருக்குள்ள தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறையினா குறிப்பிட்டனர்.

வரணி இயற்றாளையிலுள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. அந்த வீட்டில் சுமார் 10 பவுண் தங்க நகைகளையும் 57 ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட கொள்ளையர்களில் இருவர், மதுபோதையில் தடுமாறியதால் அகப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தப்பிச்சென்றவர் என்ற குற்றச்சாட்டில் பொது மக்களால் கடந்த சனிக்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் பிடிக்கப்பட்டார். அவரது வீடொன்றில் வைத்தே பிடிபட்டார்.

அவருக்கு கொள்ளையர்களுக்கும் தொடர்புள்ளது என்று குறிப்பிட்டே மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் அவரை கொடிகாமம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

‘மக்களால் நையப்புடைக்கப்பட்ட பின் ஒப்படைக்கப்பட்ட நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எதிராக எந்த முறைப்பாடோ குற்றச்சாட்டோ இல்லை. இயற்றாலைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வழங்கி வாக்குமூலத்திலும் இந்த நபரைக் குறிப்பிடவில்லை’ என்று காவல்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், அவரைத் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மேலும் சிலரைப் காவல்துறையினா தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

மக்களால் நையப்புடைக்கப்பட்ட பின் ஒப்படைக்கப்பட்ட நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எதிராக எந்த முறைப்பாடோ குற்றச்சாட்டோ இல்லை. இயற்றாலைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வழங்கி வாக்குமூலத்திலும் இந்த நபரைக் குறிப்பிடவில்லை’ என்று காவல்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், அவரைத் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மேலும் சிலரைப் காவல்துறையினா தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீலங்கா  காவற்துறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.