Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ்க்கு ஒரு நீதி லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஒரு நீதியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவிராஜ்க்கு ஒரு நீதி லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஒரு நீதியா? மறப்போம் மன்னிப்போம்! – சுமந்திரன்

0a765ae3bb289b44652e0b9938c7e08a?s=26&d=By Admin On Feb 16, 2019
 
 
Share

sumanthiran-300x200.jpg“யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. உண்மையை கண்டறிந்து, மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார். இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2009 இலிருந்து வலியுறுத்தி வருகிறது“

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரன்.

இன்று (16) யாழில் நடந்த தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்-

தமிழ் இளைஞர்களிடம் பேசும் பலர் பாதி உண்மையை மட்டும்தான் சொல்கிறார்கள். ஊடகங்கள் அதவிட மோசம். அவர்களும் பாதி உண்மையை மட்டும்தான் சொல்வார்கள். தமிழீழு விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என சுமந்திரன் சொன்னார் என்றுதான் சொல்வார்கள்.

யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. பேரென்றாலே கொடூமானது. உயிரை கொல்வது. மனிதநேயத்திற்கு எதிரானது.

சர்வதேச மேற்பார்வை உள்ளதால்தான், பிரதமர் கிளிநொச்சியில் அந்த கருத்தை சொன்னார். தென்னாபிரிக்காவை போல உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நிறுவி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையை சொல்லியிருக்கிறார். உண்மையை கண்டறிவோம், மன்னிப்போம், மறப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார்.

உண்மை கண்டறியப்படுவது அத்தியாவசியம். உண்மை கண்டறியப்படாமல், பேசப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரு காலமும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. இதை 2009 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகிறோம். உண்மை கண்டறியப்பட்டு, அந்த உண்மையின் அடிப்படையில் நீதி செய்யப்பட வேண்டும்.

முதன்முறையாக உண்மையை ஆணைக்குழுவின் முன்பாக வந்து உண்மைகளை சொல்லியுள்ளார். குற்றமிழைத்தவர்களே முன்வந்து, இதைஇதை செய்தோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். தென்னாபிரிக்காவில் நடந்தது அதுதான்.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு அமைத்தபோது, பொலிஸ், இராணுவ அதிகாரிகள் முன்வந்து உண்மையை சொன்னார்கள். முழுமையான உண்மையை சொன்னால் மன்னிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்பதே தென்னாபிரிக்கா கைக்கொண்ட முறைமை.

அப்படி விண்ணப்பித்த பலரது மன்னிப்பு விணணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முழுமையான உண்மையை சொல்லாத பலரது வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நேற்று பிரதமர் சொன்னதில் ஒரு தவறுள்ளது. தென்னாபிரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யவில்லையென்றார். அது தவறு. பலர் மீது வழக்குகள் உள்ளன. அது, அவர்கள் முழுமையான உண்மையை சொல்லாததால் தாக்கல் செய்யப்பட்டது.

படையினரும் குற்றமிழைத்திரக்கலாமென மஹிந்த சொன்னதையோ, கிளிநொச்சியில் பிரதமர் மறப்போம், மன்னிப்போம் என்று சொன்னதையோ ஆதரிக்க முடியாது. இதை பிரதமருக்கு தெளிவாக சொல்லிவைக்க விரும்புகிறோம். உண்மை கண்டறியப்பட வேண்டும்.

பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் அதேவேளை, எங்கள் தரப்பிற்கும் இதை சொல்லிக் கொள்ள வேண்டும். எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி, குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம்.

சட்டமா அதிபர் என்னிடம் கேட்டார், ரவிராஜ் கொலையாளிகளை தண்டிக்க வேண்டுமென நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள்தான் மேன்முறையீடு செய்கிறீர்கள். ஆனால் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கேட்கிறீர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி, இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதியா என கேட்டார். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்.

எல்லாம் மற்றவர்கள் செய்தவர்கள் என சொல்ல கூடாது. நாங்கள் சுயாதீன குழுவாக சென்று சர்வதேசத்திற்கு சென்று நியாயம் கேட்கும்போது, எங்கள் தரப்பிலிருந்து இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றியும் பேசுகிறோமா என்பதிலேயே அது வெற்றியடையுமா இல்லையா என்பது தங்கியிருக்கிறது.

தந்தை செல்வா- பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் செய்யபோது, அதில் சமஷ்டி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. செல்வா- டட்லி ஒப்பந்தத்திலும் சமஷ்டி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சமஸ்டி கட்டமைப்பிலான தீர்வை பற்றி ஒஸ்லோவில் உடன்பாடு எட்டப்பட்டபோது, சமஷ்டி என குறிப்பிடப்படவில்லை என்றார்.

தாரகம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.