Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் கையில் வளர்ந்த பிள்ளைகளின் அவல நிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் கையில் வளர்ந்த பிள்ளைகளின் அவல நிலை!

1d0b9ae528e3bfb13da7296f71dd8ec1?s=26&d=By ஈழவன் Last updated Feb 18, 2019
 
 
Share

வடக்கில் பெற்றோரை இழந்த சிறவர்களின் பராமரிப்பிற்காகவும் அவர்களின் வளர்ப்பிற்காகவும் தேசியத்தலைவர் அவர்களினால் செஞ்சோலை சிறுவர் இல்லமும்,காந்தறூபன் அறிவுச்சோலையும் நிறுவப்பட்டு தமிழர்தாயத்தில் யாரும் அனாதைகள் என்று இருக்கக்கூடாது என்பதற்காக இரண்டு இல்லங்களையும் நிறுவி அதன் ஊடாக பல் துறைசார்ந்த பல மாணவர்களை உருவாக்கி பல சமூக செயற்பாட்டாளர்களையும் உருவாக்கியுள்ளார்.

sensoli.jpg

பல திறமைகளை கொண்ட மாணவர்கள் தலைவர் அவர்களின் நேரடிக்கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார்கள்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட செஞ்சோலை பிள்ளைகள் பேரின் பின்னர் யாரும் அற்ற நிலையில் வதைமுகாம்களுக்கு சென்று பல்வேறு துன்பியல்களை அனுபவித்து தங்களுக்கு தெரிந்த உறவுகள் மற்றும் பொது சமூக அமைப்புக்களுடன் மீள தங்கள் வாழ்வினை கட்டி எழுப்ப முயன்றார்கள் பலபெண் பிள்ளைகள் சொல்லணா துன்பத்தினை அனுபவித்தார்கள்.

திருமண வயதினை அடைந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளமுடியாத நிலையில் பலர் காணப்பட்டார்கள் பலர் திருமணம் செய்து கொண்டார்கள் இவ்வாறு இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் செஞ்சோலை வளாகத்தில் வளர்ந்த பிள்ளைகள் காணப்படுகின்றார்கள்.

மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா அரச எடுபிடி  கே.பி.எனப்படும் குமரன் பத்தமநாதன் தன்னுடைய பணத்தினை பயன்படுத்திக்கொள்வதற்காக சிங்கள அரசுடன் இணைந்து செஞ்சோலை என்ற பெயரில் தாய் தந்தையர் உள்ள பிள்ளைகளை எடுத்து வளர்த்து வருகின்றார். இதனை செஞ்சோலை என பெயர்சூட்டி வெளிநாட்டு பணத்தினை சிங்கள அரசிற்கு எடுத்துக்கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

உண்மையில் இந்த செஞ்சோலையில் வளர்ந்தவர்கள் இன்று நிர்க்கதியான நிலையில் பல்வேறு துன்பியல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் செஞ்சோலை வளாகத்தில் நிலைகொண்ட சிங்களப்படையினர் அந்த வாளாகத்தினை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அந்த காணியினை பலர் அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் உண்மையில் அந்த காணியில் வளர்ந்த பிள்ளைகளுக்கே அந்த காணி உரித்து என்பதை கோரி செஞ்சோலையில் வளர்ந்த பிள்ளைகள் தங்களுக்கு அந்த காணியினை பிரித்து கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் தற்போது அங்கு தங்கியுள்ளார்கள்.

காணிஇல்லாத இந்த பிள்ளைகள் உதவிஇல்லாத இந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பங்கள் என்று இன்று பெருகிவிட்ட நிலையில் உண்மையில் அந்த காணியினை அரச அதிகாரிகள் அந்த பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று சமூக அமைப்புக்கள் கோரியுள்ளார்கள் ஆனால் மறுபக்கத்தில் அந்த காணியினை ஏப்பம்விட பல கும்பல் முனைந்துள்ளது.

இன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் செஞ்சோலை பிள்ளைகளின் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றார்கள் திருமணமாகி இரண்டு பிள்ளைகளை கையில் வைத்துக்கொண்டு தங்கள் காணி தங்களுக்கே உரிமை என்ற கோரிக்கையினை முன்வைத்து உதவிகளுக்காக காத்திருக்கின்றார்கள்

இவ்வாறான தலைவர் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகளுக்கு புலத்தில் உள்ள தமிழ் மக்கள் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

தாரகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.