Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் படையினரே பொறுப்பாளிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் படையினரே பொறுப்பாளிகள்.

- பண்டார வன்னியன் Wednesday, 18 April 2007 08:59

தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை சிதைப்பதன்மூலம் இனவாத யுத்தம் ஒருபோதும் வெற்றி பெறாது என்ற வரலாறுகள் தரும் உண்மையினை புரிந்து,தமிழ் பேசும் மக்களின் மனித கௌரவத்தினை மதித்து நடக்குமாறு மாணவர்கள் சார்பாக படைகளை வேண்டி நிற்கின்றோம் என யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம்..

யாழ்ப்பாணக்குடாநாட்டில் கடத்தி காணாமல் போகவைக்கப்படும் செயற்பாடுகளுக்கும் கொலைகளுக்கும் யாழ் மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள படையினரும் அவர்களை வழிநடத்துபவர்களுமே காரணமாகும்.

கடத்தல் கொலைகள் என்பவற்றிற்கு முழுமையான பொறுப்பாளிகள் படையினரே என்ற உண்மை குடாநாட்டில் நிலைகொண்டுள்ள மனித உரிமை காக்கவென இருக்கும் அமைப்பினர்க்கும், மற்றும் சமூக சமயப்பெரியவர்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் ஆதாரமாக நிரூபிக்கப்படக்கூடிய சாட்சிகளுடன் நன்கு தெரியும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, அவர்கள் அவ்வுண்மையினை வெளியிடுவதனைத்தவிர்த்து வருகின்றனர்.

சர்வதேசம் அவர்களுக்கு உயிர் உத்தரவாதப்பிணை வளங்கி அவர்களைப் பாதுகாக்குமேயானால் வடகிழக்கில் இன்று மோசமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை உலகின் முற்றத்திற்கு கொண்டு வரலாம்.

சர்வதேசம் தனது அலட்சியப்போக்கை நீடித்து, தமிழர்களின் அவலக்குரல்களுக்குச் செவிசாய்க்காது இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால் அது தமிழ் மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகமாகவே அமையும்.

பெருமளவான இளஞ்சந்ததியினர் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர். இவ் அநீதிகள் வெளி உலகிற்கு கொண்டு செல்லப்படாதவாறு வியூகம் வகுத்து வருகின்றது அரசு. குடாநாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து தமது மக்களின் துயரங்களை சக மக்களே அறிய முடியாதவாறு செய்யும் கீழ்த்தரமான செயற்பாடுகளிலும் படைத்;தரப்பு ஈடுபட்டு வருகின்றது.

குடாநாட்டில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை என்கின்ற மாயையினை சர்வதேசத்தின் முன் தோற்றுவித்து மக்களைவாட்டி வதைப்பதே படையினரின் நோக்கமாகும். அவ் எண்ணத்திற்கு குடாநாட்டில் பணிபுரியும் அரச உயர் அதிகாரிகள் எவரும் துணைபோக வேண்டாம் என வேண்டுகின்றோம். தினமும் வாடி வதங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அதிகாரிகளுக்கு உண்டு.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை சிதைப்பதன்மூலம் இனவாத யுத்தம் ஒருபோதும் வெற்றி பெறாது என்ற வரலாறுகள் தரும் உண்மையினை புரிந்து,தமிழ் பேசும் மக்களின் மனித கௌரவத்தினை மதித்து நடக்குமாறு மாணவர்கள் சார்பாக படைகளை வேண்டி நிற்கின்றோம்.

மூடி மறைத்து விடலாம் என்றெண்ணி மேற்கொள்ளும் அராஜகங்கள் ஒருபோதும் மக்கள் நெஞ்சில் மறைந்து விடாது. உலகின் முன் தலை குனிந்து தமிழ்மக்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு இலங்கை அரசு பதிலளிக்கும் நிலை மிக விரைவில் உருவாகும்

-நன்றி-

நேற்று (17.04.2007) இந்த அறிக்கை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டது.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.