Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்காவில் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனரா? 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


ஸ்ரீலங்காவில் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனரா? 

ராஜ் கொண்சல்கோரளே தமிழில் 

:எஸ்.குமார்
 


02.26.03.jpgஸ்ரீலங்காவில் சமீபத்தில் நிகழ்ந்த இழிந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுவது, சென். பீட்டர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பதின்ம வயதுகளின் மத்திக்கும் இறுதிக்கட்டத்துக்கும் இடையில் உள்ள ஒரு றகர் விளையாட்டு வீரருக்கு அவரது பயிற்சியாளர் பொதுமக்களின் பார்வையில் படும்படியான இடத்தில் வைத்து தொடர்ச்சியாகக் கன்னத்தில் பல முறை அறைந்ததுதான், இது எமது சமுதாயம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது அல்லது ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாகத் தெரியப்படுத்துகிறது. சந்தேகமில்லாமல் இந்த நிகழ்வு ஆதரவற்ற குழந்தைகள் பாடசாலையில் இருக்கும்போது அவர்களது ஆசிரியர்களாலும் மற்றும் வீட்டிலுள்ளபோது அவர்களது பெற்றோர்களாலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் இடம் பெற்ற ஒன்றாகும். அதேவேளை துஷ்பிரயோகம் என்பது இழிவான ஒரு செயல். அரசாங்கம் அல்லது அரசாங்கமல்லாத அமைப்புகளின்; சிறார்களைப் பாதுகாக்க இயலாத தன்மை, அதேவேளை குற்றம் இழைப்பவர்களை தண்டிக்காமல் சுதந்திரமாக விடுவது என்பன இன்னமும் மோசமானதாக உள்ளது.

சிறார்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதில் தேவையற்ற தயக்கத்தை கடைப்பிடிப்பதைத் தவிர, ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவது மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகளுக்கான நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையை அமைப்பதிலும் தோல்வியடைந்துள்ளது. பல்லில்லாத பூனையை போல செயற்படும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஒரு கேலிக்கூத்து மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு திமையான பொறிமுறை எதையும் அது வழங்கவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொழுத்த ஊதியம் வழங்கி இளைப்பாறும் இடமாக மாறியுள்ள அதிகாரத்துவ ஸ்தாபனமாக அது விளங்குகிறது. இந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் இணையத்தளத்தில் பொதுமக்களிடம் இருந்து அவர்களுக்கு எத்தனை தொலைபேசி அழைப்புகள் அல்லது முறைப்பாடுகள் கிடைத்தன என்பதைப் பற்றிய பதிவுகளோ , மேலும் அத்தகைய விண்ணப்பங்கள் கிடைத்ததும்; அதற்கு அவர்கள் என்ன நடவடிக்கைள் மேற்கொண்டார்கள் என்பதைப்பற்றிய எந்த விபரங்களும் பதியப்படுவதில்லை. தங்களுக்கு கிடைத்த புகார்களுக்கு தாங்கள் மேற்கொண்ட விசாரணைகள் ஏதாவது இருந்தால் அதன் விளைவுகளைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்படுவதில்லை. அத்தகைய தரவுகள் எதுவும் இல்லாதபோது, அது ஒரு கேலிக்கூத்து என்பதைத் தவிர பொதுமக்களால் வேறு என்ன முடிவுக்கு வரமுடியும்?

ஒரு பிள்ளைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடத்தையும் சிறுவர் துஷ்பிரயோகமாகும் (இந்த விடயத்தில் 18வயக்கு கீழ்ப்பட்ட ஒருவர்). அது உடலியல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ மற்றும் உணர்வு ரீதியானதாகவோ இருக்கலாம், அதேபோல அவர்களைப் புறக்கணிப்பது மற்றும் சுரண்டப்படுதல் போன்ற பல்வேறு வடிவங்களை அது மேற்கொள்ளலாம்.

ஸ்ரீலங்காவில் ஒரு பிள்ளை துஸ்பிரயோகத்துக்கு ஆளானால் அல்லது அதைப்பற்றி யாருக்காவது தெரிந்தால் அவர்கள் யாரிடம் செல்ல வேண்டும். ஒரு பிள்ளைமீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தின் விளைவுகள் தீவிரமானதுடன் நீண்டகாலமாக நிலைத்திருக்கக்கூடியது. அந்த துஷ்பிரயோகம் கடந்தகாலத்தில் நடந்த ஒன்றாகவோ அல்லது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்றாக இருந்தாலும் சரி ஸ்ரீலங்காவில் உள்ள பிள்ளைகள் ஆதரவற்றவர்கள் மற்றும் அவர்கள் ஆலோசனைகளையோ நீதித்துறையை நாடவோ திறமையான மாற்று நடவடிக்கைள் எதுவும் கிடையாது.

சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன?

கீழ்வருவன இணையத்தளத்தில் காணப்படும் நிபுணத்துவு ஆய்வறிக்கைளை அடிப்படையாகக் கொண்ட சில தரவுகள்

துஷ்பிரயோக நடவடிக்கை என்பது ஒருவரை கொடூரமாக அல்லது வன்முறையாக நடத்துவது. அது அடிக்கடி ஒழுங்காக நடப்பது அல்லது திரும்பத்திரும்ப நடத்தப்படுவது ஆகிய எதுவாகவும் இருக்கலாம். துஷ்பியோகத்தைப் பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு பிரதான வடிவங்கள் உள்ளன:

1. உடல் ரீதியான துஷ்பிரயோகம்: ஒரு குழந்தைக்கு எதிராக தற்செயலான விபத்து காரணமாக அல்லாது உடல்ரீதியான வலிமையைப் பயன்படுத்தி காயங்களை உண்டாக்குதல். தாக்குவது, பலமாக அடிப்பது, தள்ளுதல், குத்துதல், கடித்தல், எரித்தல்,கீறுதல் நெரித்தல் அல்லது மூச்சுத் திணறடித்தல் போன்றவற்றை ஒரு பிள்ளைக்கு ஏற்படுத்தல் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான உதாரணங்கள்.

2. பாலியல் துஷ்பிரயோகம்: ஒரு பிள்ளைக்கும் மற்றும் ஒரு வயதுவந்தவருக்கும் இடையில் உள்ள எந்த வகையான பாலியல் ஈடுபாடு அல்லது தொடர்பு பாலியல் துஷ்பிரயோகம் ஆகும். பாலியல் துஷ்பியோகம் என்பது ஒரு பிள்ளையை உளவு பார்த்தல் அல்லது கண்காணித்தல், பாலியல் செயல்கள் புரிதல்; மற்றும் முறையற்ற சேர்க்கையில் ஈடுபடல் (குடும்ப அங்கத்தவர்களுடன் பாலியல் நடத்தை) என்பனவற்றை உள்ளடக்கியது. 3. உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்: ஒரு பிள்ளையின் அன்பை, ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை மறுக்கும் ஒரு முறை அல்லது ஒரு பிள்ளையுடன் வயதுக்கு வந்த ஒருவர் பேசுவது அல்லது நடக்கும் முறைகள். கொடுமைப்படுத்தல், சத்தம் போடுதல், விமர்சித்தல்,பயமுறுத்தல், அலட்சியப்படுத்தல் மற்றும் வெறுத்தல் போன்ற அனைத்தும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகங்கள் ஆகும்.

4. புறக்கணித்தல்: ஒரு பிள்ளை வளருவதற்கு தேவையான விஷயங்களான தங்குமிடம், உணவு, சுகாதாரம்,மேற்பார்வை, மருத்துவக் கவனிப்பு கல்வி மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை வழங்கத் தவறுதல் புறக்கணித்தல் ஆகும்.

சிறார்கள் ஏன் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்?

சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சில காரணங்களைத் தவிர தகுதியான துஷ்பிரயோகம் என்று ஒன்று இருக்கமுடியாது. சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடப்பதற்கான சில காரணங்கள்:

? சக்திவாய்ந்தவர் என்பதை உணர்த்துவதற்கான விருப்பம். ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் பாதுகாப்பற்ற சிறுவர்கள்மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதை நிரூபிக்க உள்ள விருப்பம்.

? ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் தங்கள் சொந்த ஏமாற்றத்தை பிள்ளைகள்மீது வெளிப்படுத்தல்.

? அநேகமாக துஷ்பிரயோகம் மேற்கொள்பவர்கள் தாங்கள் சிறார்களாக இருந்தபோது துஷ்பிரயோகத்தை அனுபவித்திருத்தல்

? சிறுவர்களுக்கு உரிமைகள் உள்ளன என்பதை அவர்கள் அறியாதது

? பொருத்தமான துஷ்பிரயோகம் வாழ்க்கையின் ஒரு பகுதி என அவர்கள் நினைப்பது. சில பிள்ளைகளை நல்வழிக்கு கொண்டுவருவதற்கு ஒரு வகையிலோ அல்லது வேறுவகையிலோ அவர்களைத் தண்டிக்க வேண்டியது அவசியம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

சிறுவர் துஷ்பிரயோகத்தின் விளைவுகள்

ஒரு பிள்ளை துஷ்பிரயோகத்துக்கு ஆளானால், பின்வருவனவற்றை மேற்கொள்ள வழிவகுக்கும்:

? வெட்கம் மற்றும் சுய குற்ற உணர்வு

? துஷ்பிரயோகம் மேற்கொண்டவர் மீது கோபம்

? ஆட்களை நெருங்கவும் மற்றும் நம்பவும் பயம்

? சோகம், குழப்பம் மற்றும் சுயமரியாதைக் குறைவு

? கடந்த காலத்தைப் பற்றிய நினைவு, கனவுகள் 

மற்றும் துஷ்பிரயோகத்தை பற்றிய நினைப்பு ? நடந்தவற்றை மறுப்பது

? பாடசாலையில் புதிய விடயங்களைக் கற்பதிலும் மற்றும் மற்றவர்களுடன் சமூகமயமாகப் பழகுவதிலும் பிரச்சினை

சிறார் துஷ்பிரயோகம் மற்றும் சட்டம்

ஸ்ரீலங்காவில் சிறுவர் துஷ்பிரயோகம் உடல் ரீதியான தண்டனை வடிவத்திலோ அல்லது மேலே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள வடிவத்திலான துஷ்பிரயோகங்கள் பாடசாலைகளில் மேற்கொள்வது வெளிப்படையாகத் தடை செய்யப்படவில்லை. எங்கள் சமூகம் சில நலன் சார்ந்த குழுக்கள்,அரசியல் ஆதிக்கம் மற்றும் கலாச்சார ரீதியான பாரம் உண்மையில் நன்றாக பெரியவர்களின் பக்கம் நோக்கிச் சாய்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பயனுள்ள உதவிகளைத் தேடுவதற்கு தீர்வு இல்லை

உதவி பெறுதல்

வெளிநாட்டிலுள்ள இணையத்தளம் ஒன்று தெரிவிப்பது, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதன் விளைவுகளை ஒருவர் கையாள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன என்று,

? உங்களுக்கு நம்பிக்கையுள்ள ஒருவருடன் அதைப்பற்றிப் பேசுதல். அது ஒரு நண்பராகவோ அல்லது குடும்ப அங்கத்தினராகவோ இருக்கலாம். 

அது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி,மருத்துவர்,ஆலோசகர்,மனநலமருத்துவர், உளவியலாளர். நம்பகமான ஆசிரியர், வேறு குடும்ப அங்கத்தினர் அல்லது ஒரு சுகாதாரப் பணியாளராகவோ இருக்கலாம்.

? அது உங்கள் தவறு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வயதிலுள்ள சில பிள்ளைகளைப் பார்க்கும்போது, அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவராக இருந்தீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

? சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதன் விளைவுகளைப்பற்றி அறிந்து கொள்ளல்.

? சிறுவர் துஷபிரயோகத்தை அனுபவித்த மற்றவர்களுடன் பேசுங்கள். சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்கள், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு ஏற்ற ஒரு நல்ல இடம். இதை உங்கள் சொந்தப் பிரச்சினையாக நீங்கள் கையாளவேண்டிய அவசியமில்லை.

ஸ்ரீலங்காவில் உள்ள யதார்த்த நிலை என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பொறிமுறைகள் எதுவும் பயனுள்ள வழியில் இங்கு இல்லாததுதான் துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளை ஆலோசனையோ அல்லது சிகச்சையோ பெறுவதற்கு அவர்களின் பெற்றோருடன் தொடர்பு உள்ளவர்களைத் தவிர வேறு எங்கும் செல்வதற்கு வழியில்லை. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் தொடர்பு கொள்வதற்கு ஹொட் லைன் எனப்படும் அவசர இணைப்பு ஒன்றைக் கொண்டுள்ளது, ஆனால் அது சூடாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லாததால், வழக்கமான அடிப்படையில் தொடர்பு கிடைக்காமலோ அல்லது யாரும் பதிலளிக்காமலோ இருந்துவருகிறது போலத் தெரிகிறது

சிறுவர் கொடுமைகளை நிறுத்து 

(www.stopchildcruelty.com) என்கிற அமைப்பின் முன்முயற்சி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையைப் போன்று இன்னமும் ஒரு முறையான அமைப்பாக ஆகாவிட்டாலும் கூட அது ஒரு ஹொட்லைன் வசதியை கொண்டுள்ளது பல பெற்றோருக்கு தொடர்புகொள்ளும் வசதியை வழங்கியுள்ளதுடன், சிலருக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. ஹொட்லைன் இலக்கம் 0779497265 (24ஃ7) அல்லது அவர்களின் முகப் புத்தகப் பக்கத்துக்கோ அல்லது info@stopchildcruelty.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம். சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பு சட்ட ஆலோசனை, நன்னடத்தை ஆதரவு மற்றும் கடிதங்கள் எழுதுவதற்கான செயலக வசதிகள் போன்றவற்றை வழங்குவதுடன் சில சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்கு பெற்றோர்களும் உடன் வருவதுண்டு. மேலும் இந்த அமைப்பு பாடசாலைகளில் சாத்தியமான மாற்று ஒழுக்கம் என்பது பற்றிய விழிப்புணர்வுபயிற்சியை விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளதுடன் மற்றும் ஆலோசனை சேவைகளை நிறுவும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

ஆசிரியர்கள் நியாயமாக இருக்கவேண்டும் என்றால், அவர்களுக்கு தவறான சிறார்களையும் மற்றும் குறைபாடுள்ள சிறார்களையும் எவ்வாறு நடத்தவேண்டும் என்பது பற்றிய அறிமுகப் பழக்கமுள்ள படிப்போ அல்லது பயிற்சியோ அவர்களுக்கு அரிதாகவேனும் வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அப்படியான பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. இதைத் தவிர வகுப்பறையின் அளவு சிலவேளைகளில் 50 மாணவர்களை விட அதிகமாகக்கூட இருக்கிறது, சிறந்த வகையான ஆசிரியர்கள் கூட இந்தத் தொகையைச் சமாளிப்பதற்கு மிகவும் சிரமம் அடைகிறார்கள். இதில் நினைவில் கொள்ள வேண்டியது, ஆசிரியர்களும் கூட மனிதர்கள் என்பதையும் மற்றும் சாதாரண மனிதத் தவறுகளையும் மற்றும் வாழ்க்கையில் அவர்களின் சவால்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதை ஆசிரியர்களுக்கு உயர்ந்தபட்சம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை.

எப்படியாயினும், பிள்ளைகள் ஆசிரியர்களின் ஏமாற்றங்களைச் சகித்துக்கொள்பவர்களாக இருக்கமுடியாது என்பதையும் மற்றும் எந்தவிதமான சூழ்நிலை இருந்தாலும் உடல் ரீதியான தண்டனை மற்றும் வேறு எந்த விதமான துஷ்பிரயோகமும் பிள்ளைகளின் மீது நடத்தப்படக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

அளவுக்கு மீறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சந்தேகமில்லாமல், பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதுடன் மற்றும் வேறு வடிவங்களிலான துஷ்பிரயோகங்களையும் மேற்கொள்கிறார்கள். நல்ல பெயரையும் மற்றும் மதிப்பையும் பெறும் இரக்கமுள்ள ஆசிரியர்கள் மீதுகூட அவர்களது சக ஆசிரியர்கள் சிலர் சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புள்ள தண்டனைகளை பிள்ளைகளுக்கு வழங்கும்போது களங்கம் ஏற்படுகிறது. இந்தப் பின்னணியில், பெரும்பான்யினரும் கூட தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனை மற்றும் வேறு வடிவங்களிலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் முயற்சியில் இணையவேண்டும். அவர்களும் கூட இந்தப் பிரச்சாரத்தில் இணைந்து அதேபோல அவர்களது சவால்களைப் பற்றிக் குரல் எழுப்பும்போது. பொதுமக்கள் அவர்களது சவால்கள்மீது பச்சாத்தாபப்படுவார்கள் மற்றும் அந்தப் பிரச்சாரம் பெரிய அளவில் வலுவடைந்து சிறுவர்கள்மீது துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு பெருந் தடையாக இருக்கும்.

இது தொடர்பாக சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பின் முன்முயற்சிகள் லங்கா ஆசிரியர் சங்கத்தின் அதரவை வென்றிருப்பதுடன், பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனை மற்றும் இதர வடிவங்களிலான துஷ்பிரயோகம் என்பனவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறது.

சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பின் பிரச்சாரம்,2018 செப்ரம்பர் 30ல் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வுடன் முறையாக ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, இந்த நிகழ்வின்போது ஒரு ஐந்து அம்ச முன்மொழிவுகள் (பென்டகன் முன்மொழிவு) இயற்றப்பட்டு அவை அதி மேதகு ஜனாதிபதி சிறசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது, அவர் இந்த நிகழ்வுக்கு அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் இந்தப் பிரச்சாரத்துக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார். இந்த அமைப்பு இதுவரை என்ன சாதித்துள்ளது என்பதை முழுமையாக அறிந்திராத வாசகர்கள் இருந்தால், அவர்கள் தங்கள் முகப் புத்தகத்தில கீழ்வரும் பக்கத்தில் பர்வையிடுவது (https://www.facebook.com/stopchildcruelty/) பயனுள்ளதாக இருக்கும், 2018 செப்ரம்பர் 30 முதல் இந்தப் பிரச்சாரம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் மற்றும் அதன் வளர்ச்சியைப் பற்றிய ஒரு அறிவையும் அவர்களால் அறியமுடியும்.

அது வளர்ச்சியடைந்துள்ள பகுதிகளின் மத்தியில் வெற்றிகரமான முயற்சியாக ஐக்கிய இராச்சிய கல்வியாளர்களில் ஒருவரான பியர்சன் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட புகார் கொள்கைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கை அமைந்துள்ளது. சர்வதேசப் பாடசாலைகள் பிரதானமாகவும் ஐக்கிய இராச்சிய பரீட்சைகளையே பின்பற்றுகின்றன. அந்தப் பாடவிதானம் முக்கியமாக இரண்டு பிரதான கல்வியாளர்களான ஒன்றில் பியர்சன்ஃஎட்எக்ஸல் அல்லது கேம்பிரிட்ஜ் ஆகியோரால் வழங்கப்படுகிறது. ஒரு சில பாடசாலைகள் அமெரிக்க பாடத்திட்டத்தை வழங்குகின்றன, உதாரணம்: கேட்வே இரண்டு பாடத்திட்டங்களையும் வழங்குகிறது, லைசியம் கேம்பிரிட்ஜை வழங்குகிறது மற்றும் ஓவர்சீஸ் சர்வதேசப் பாடசாலை அமெரிக்கப் பாடத்திட்டத்தை வழங்குகிறது. பியர்சன் உடன் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தை அவர்களை புகார் கொள்கைகள் மற்றும் சிறுவர் பாதகாப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்த அவர்களை இணங்கச் செய்தது. இவைகள் அவர்களின் எந்தவொரு மையத்திலும் பின்பற்றப்பட வேண்டிய பியர்சனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நிலையான தேவைகள் ஆகும். அவர்களின் பாடத்திட்டத்தை வழங்கும் பாடசாலைகளை அவர்கள் மையங்கள் என அழைக்கிறார்கள். ஸ்ரீலங்காவிலுள்ள சர்வதேசப் பாடசாலைகள் (ரி.ஐ.எஸ்.எஸ்.எல்) இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதுடன் சிறந்த நடைமுறைகளை உறுதி செய்யமுடியும் என ஒருவரால் நம்பமுடியும்.

இந்தப் பிரச்சாரம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கூட தொடர்பு கொண்டுள்ளது மற்றும் கல்வியமைச்சின் 12/2016 இலக்க சுற்றுநிருபத்திற்கு இணங்க கல்வி வட்டாரத்தில் மனித உரிமைகளை பேணுவதில் தோல்வியடைந்துள்ளதைப் பற்றி கலந்துரையாட கல்வியமைச்சரைத் தொடர்பு கொள்ளுவதற்கான சாத்தியம் உள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையற்ற தன்மை தொடர்பான பிரச்சினையை நீதியமைச்சருடன் எழுப்ப உள்ளது.

சிறார்களுக்கான உடல் ரீதியான தண்டனைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்துலக முன்முயற்சி அமைப்பால் (ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டது) அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீலங்காவிலுள்ள ஒரே இயக்கம் சிறுவர் கொடுமையை நிறுத்து இயக்கம் ஆகும். எமிரேட்ஸின் சட்டப் பேராசிரியரும் மற்றும் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தருமான சாவித்திரி குணசேகரா இந்த உலகளாவிய அமைப்பின் ஒரு குழு உறுப்பினரும் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

ஜெனிவாவிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபைக்கு ஸ்ரீலங்காவிலுள்ள நிலமைகள் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது மற்றும் அது ஸ்ரீலங்காவிலுள்ள குழந்தைகளின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக அறிந்து கொள்ள ஒரு விசாரணை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது.

சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பின் பல முயற்சிகளின் விளைவாக தேசிய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஸ்ரீலங்காவிலுள்ள நிலமைகள் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்புக்கு பல பங்காளர்கள் உள்ளனர், அவர்கள் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையையும் மற்றும் வேறு வடிவங்களிலான சிறுவர் துஷ்பிரயோகத்தையும் நிறுத்துவதற்கான பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்கள், அவர்கள் மத்தியில் யுனிசெப்,சர்வோதயா,அரிகாட்டு.சர்வதேச லயன் அமைப்பு, உளவியலாளர் கல்லூரி, த பவுண்டேசன் ஒப் குட்னஸ்,லீட்ஸ், கிராஸ்றூட் ட்ரஸ்ட், எம்பார்க் போன்றவை உள்ளன.

இந்த அமைப்பின் முயற்சிகளுக்கும் மற்றும் அதன் சளைக்காத உயிரோட்டமுள்ள சக்திமிகு சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பின் தலைவரான கலாநிதி. துஷ் விக்கிரமநாயக்காவுக்கும் தான் நன்றி சொல்லவேண்டும், ஸ்ரீலங்காவில் இப்போது உள்ள சிறார்கள், 30 செப்ரம்பர் 2018க்கு முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள். ஸ்ரீலங்காவில் சிறுவர் துஷ்பிரயோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் திறமையான செயற்பாடுகளுக்கு தடையாக அமைந்துள்ள வேலியினை உடைப்பதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் சிறுவர்கள் பாடசாலைகள் மற்றும் வீடுகள் ஆகிய இரண்டிலும் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பாக இல்லை, அவர்களுக்கும் உரிமை உள்ளது என்பதற்கான அங்கீகாரம் சிறிதும் இல்லை. சிறுவர் கொடுமையை நிறுத்து அமைப்பு இந்த பரிதாபகரமான நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளது. நியாயமான எண்ணம் கொண்ட குடிமக்கள் அனைவரும் அனைத்து விதமான சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அனைத்து வடிவத்திலான சிறுவர் துஷ்பிரயோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு வழங்க வேண்டும். காயப்பட்ட சிறுவர்கள் காயப்பட்ட பெரியவர்களாகவே வளரும்போது அது எங்கள் முழு சமூகத்தையும் காயப்பட்ட தேசமாகவே மாற்றும்.

http://www.elukathir.lk/NewsMain.php?san=23779

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்துக்கு மிகவும் பிரயோசனமான கருத்துக்கள், நன்றி நுணா ......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.