Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம் – மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
February 28, 2019

Mannar-UN-Protest1.jpg?zoom=1.2100000262

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு,தமது கோரிக்கை இடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதையச்சந்திரா தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மனித புதை குiழி அகழ்வுப் பணிகள் இடம் பெறும் பகுதியை சென்றடைந்தது.

அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதிக்கு முன் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் காவல் நிலைய வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இச் சூழலில் மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம், இலங்கை அரசாங்கத்தை நீதிப்பொறிமுறையில் இருந்து தப்ப வைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திராவினால் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலம் குரூஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.

Mannar-UN-Protest2.jpg?zoom=1.2100000262Mannar-UN-Protest3.jpg?zoom=1.2100000262Mannar-UN-Protest4.jpg?zoom=1.2100000262Mannar-UN-Protest5.jpg?zoom=1.2100000262Mannar-UN-Protest7.jpg?zoom=1.2100000262

http://globaltamilnews.net/2019/114735/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.