Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்:சீ.வி.கே.சிவஞானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்:சீ.வி.கே.சிவஞானம் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30.1 மற்றும் 36.1 ஆகிய தீர்மானங்களை அமுல்ப்படுத்த வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமாகிய சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.cvk.jpg

யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். இதன் போது ஜெனிவாவில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலைலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அத் தீர்மானம் அமுல்ப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது. ஆகவே இலங்கைக்கு மீள கால அவகாசம் வழங்குவதோ,இல்லையோ என்பதை தீர்மானிப்பது நாங்கள் அல்ல. அது எங்கள் யாருடைய சிபார்சிலும் கொடுக்கப்படுவதுமில்லை. நாங்கள் கொடுக்கச் சொன்னதற்காக கொடுப்பதோ அல்லது நாங்கள் கொடுக்க வேண்டாம் என்றதற்காக கொடுக்காமல் விடுவதும் இல்லை,கால அவகாசம் என்ற பிரச்சனை வரவில்லை. அதனை நான் அவ்வாறு பார்க்கவும் இல்லை. ஏற்கனவே நான் கூறியது போல ஜெனிவாவில் முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற தீர்மானத்தை அமுல்ப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடாக இருக்கிறது.அதற்கமைய இருக்கின்ற தீர்மானத்தை வலிறுத்துவதாகவே எங்கள் நிலைப்பாடுகளாக இருக்கிறது.

இதேவேளை தற்போது அரசியல் கத்துக்குட்டிகள் அரசியல் கற்பிக்க முயல்கின்றன. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தீக்குள்ளிருந்து வந்தவன் நான். எனக்கு யாரும் அரசியல் கற்பிக்கத் தேவையில்லை. கத்துக்குட்டி அரசியல் வாதிகள் அரசியலைக் கற்றுக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் சிலர் என் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். ஆனால் என்னைப்பற்றி தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த ஊழல் அரசியல்வாதிகள் அல்ல. நான் என்ன செய்தேன். என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்பதை எங்களுடைய மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்.

அரசியல் தெரியாதவன் நான் அல்ல. எனக்கு யாரும் அரசியல் கற்பிக்கவும் தேவையில்லை. எமது மக்களுக்கு சகலதும் தெரியும். அவர்களே எல்லாவற்றையும் அறிந்து தீர்மானமெடுப்பார்கள். ஓவ்வொரு தேர்தல் நேரத்திலும் சகலதையும் அறிந்தும் தெரிந்தும் மக்கள் இறுதியாக முடிவெடுப்பார்கள். அவர்கள் புத்திசாலிகள். பகுத்தறிவுள்ளவர்கள். ஆகவே அனைத்தையும் மக்களிடமே விட்டுவிட்டு அவர்களின் முடிவை வரவேற்போம் என்றார்.

http://www.virakesari.lk/article/50893

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.