Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்: சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
sritharan-mp.jpg?zoom=1.2100000262260437
 
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில்  கிளிநொச்சி தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சிலர் நாகரீகத்திற்கு மாறாக நடந்துகொண்டமைக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இன்று(02-03-2019) கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
 
கடந்த 25ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தில் சில பிரதேச சபை உறுப்பினர்களும், மேலும் சில உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதம் தொடர்பில் செய்திகள், காணொளிகள் ஊடாக நாம் பார்த்தோம். அதன் படி குறித்த சம்பவம் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர்கள் அன்று நடந்து கொண்டமை தொடர்பில் தவறு என்பதை கண்டறிந்தோம். அதன்படி குறித் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேவேளை அன்று அவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும், பத்திரிகையாளர்களுடன் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என சிறிதரன் தெரிவித்தார்.
 
இதேவேளை குறித்த போராட்டத்தில் காணாமல் போனோர் விடயத்தில் பொறுப்பு கூறவேண்டியவர்களும் கலந்து கொண்டு கோபத்தை சீண்ட கூடிய வகையில் நடந்து கொண்டனர் எனவும், அதனாலும் இவ்வாறு இளைஞர்கள் சிலர் சீண்டப்பட்டு அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்களை விடுதலை புலிகள் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் உண்மையா என அவரிடம் வினவியபோது?
 
சம்பந்தன் அவர்களை விடுதலைபுலிகள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மை தொடர்பில் தெரியாது எனவு்ம, நான் ஒருபோதும் அவரை சுடுவதற்காக திரியவில்லை எனவும் தெரிவித்த அவர், மகிந்தராஜபக்ச அவர்கள் விடுதலை புலிகளின் சுடப்படும் பட்டியலில் தான் இருந்ததாக தெரிவித்தபோது அப்பட்டியலில் தானும் இருந்ததாக சம்பந்தன் ஐயாவே தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரை தலமையாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு விடுதலை புலிகள் தேர்தல் வெற்றியும் கண்டனர் எனவும் தெரிவித்தார்.
 
விடுதலை புலிகளும் குற்றம் செய்தனர் என்பது தொடர்பில் சுமந்திரன் அவர்கள் கூறி வருகின்ற விடயம் தொடர்பில் உண்மைத்தன்மை உள்ளதா என அவரிடம் வினவியபோது,
 
யுத்தம் இடம்பெறுகையில் எவரும் உண்மைதன்மையாக செயற்பட மாட்டார்கள். போராட்ட இயக்கங்களிடம் உண்மை தன்மை இருக்க வே்ணடும் என எதிர்பார்க்கவும் முடியாது. ஐநா அமர்வில் விடுதலை புலிகளும் 4 குற்றங்களை செய்துள்ளனர் என அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் படையினரே அதிகம் குற்றம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாிபதி, பிரதமர் உள்ள ஒரு நாட்டில் அவர்களால் இளைக்கப்பட்ட குற்றங்களு பிரதானமாக காணப்படும். அதேவேளை விடுதலைப்புலிகள் இளைத்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அவ்வமைப்பை வழிநடத்தியவர்கள் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்களிடம் விசாரணை செய்யட்டும் எனவும் தெரிவித்தார்.
 
ஒரு கட்டத்தில் 4 லட்சத்திற்கு மெல் மக்கள் அங்கு உள்ளனர் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர். பசில் ராஜபக்ச அவர்கள் மிக குறைவான ஆட்களே அங்கு இருந்தனர் என தெரிவித்தபோது ஆனந்தசங்கரி, ராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதென பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். கொத்து குண்டுகள், விமான தாக்குதல்களாலும் தாக்குதல்களை மூர்க்கமாக மேற்கொண்டனர். இவ்வாறான நிலையில் யுத்த குற்றம் தொடர்பில் அதிகம் பொறுப்பு கூற வேண்டியவர்கள் படையினரே எனவும் தெரிவித்தார்.
 
சுமந்திரன் அவர்கள் கூறிய கூற்று சரியானதா என மீண்டும் அவரிடம் வினவியபோது, சுமந்திரன் அவர்கள் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு இருக்கவில்லை. இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் அவருக்கு தெரியாது. வெறுமனே அவர் அறிக்கைகளை வதை்தே அவர் கருத்துக்களை தெரிவித்த வரலாம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.