Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

வாசித்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் வடிவேல் 007

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காஸ்ட்டில் இருந்து வனக்கா செல்லும் போது அழகிய மலைகளையும் நீர்னிலைகளையும் காணக்கூடியதாக இருந்தது.

p9270170xr7.jpg

p9270171et8.jpg

p9270172gw0.jpg

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணிக்கும் போது விதியின் அருகில் வனக்கா ஏரியினைக்( Wanaka Lake) காணலாம்.

p9270174gn5.jpg

p9270175hs7.jpg

p9270176md2.jpg

p9270177lf8.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மேலதிகப்படங்கள்

p9270179bh7.jpg

p9270180kc2.jpg

p9270181cy3.jpg

p9270182tz1.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

p9270183ii0.jpg

p9270185td8.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காஸ்ட்டில் இருந்து வனக்காவுக்கு செல்லும் போது வலதுபக்கத்தில் வனக்கா ஏரியைக்காணலாம். இதுவரை இணைத்த படங்களில் வனக்கா ஏரியை பார்த்திருப்பீர்கள்.

a164953jv2iu7.gif

கொஞ்சந்தூரம் செல்ல இடதுபக்கத்தில் Hawea எரியைக்காணலாம். இரு ஏரிகளும் நான் இணைத்த படங்களில் பார்ப்பதைவிட சென்று பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். பயணிக்கும் போது இடையிடையே மழைத்தூறல்களும் காணப்பட்டன.

p9270186np3.jpg

p9270187bc1.jpg

p9270188kt2.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

p9270189lx6.jpg

p9270190wz7.jpg

p9270191nr8.jpg

p9270192jd8.jpg

p9270193tp0.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

p9270198fb7.jpg

p9270199nm7.jpg

p9270200bk1.jpg

  • தொடங்கியவர்

p9270201my0.jpg

p9270202ex7.jpg

p9270203pg4.jpg

  • தொடங்கியவர்
p9270204gz1.jpg
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு மணியளவில் வனக்காவினை அடைந்தோம். பிரதான வீதியில் உள்ள Puzzling World டினை அடைந்தோம். இங்கே மாயத்தோற்றத்தில் (Illusion)அமைக்கப்பட்டுள்ள பல விடயங்களைக் காணலாம். விழுவதுபோல அமைக்கப்பட்ட சில கட்டிடங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.

p9270213rk9.jpg

  • தொடங்கியவர்

picture20381vs0.jpg

p9270212pq1.jpg

  • தொடங்கியவர்

அறை முழுவதும் அமைக்கப்பட்ட பிரபல்யமானவர்களின் முகங்களின் மாயத்தோற்றம்.

இந்த அறைக்குள் சென்றால் இங்குள்ள 168 முகங்களும் எங்களைப்பார்ப்பதினைக் காணலாம்.

faces01ox4.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

கீழே உள்ள அறைக்கு சென்றால் கீழே உள்ள படத்தில் தெரிவது போல அறையின் இடதுபக்கத்தில் இருந்து அறையின் வலதுபக்கத்துக்கு செல்லும் போது இடதுபக்கத்தில் நிற்கும் போது உயரமாகத் தோற்றமளித்தவர் தற்பொழுது உயரம்குறைந்தவர் போல தோற்றமளிப்பார். அவ்வாறே வலதுபக்கத்தில் இருப்பவர் இடதுபக்கத்துக்கு செல்லும்போது உயரம் குறைந்தவராக இருப்பவர் உயரம் கூடியவராகத் தோற்றமளிப்பார். இந்த மாயத்தோற்ற தொழில் நுட்பம் 'The Lord of the Rings' என்ற படத்தில் உபயோகிக்கப்பட்டது..

puzzle05thumbnail2xj2.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

கீழே படத்தில் உள்ள அறை 15 பாகை கோணத்தில் சரிவாகக் கட்டப்பட்டுள்ளது. உள்ளே வழமைபோலக் கட்டப் பட்டிருந்தாலும், உள்ளே செல்லும் போது விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

p9270209tp1.jpg

tilted01bh7.jpg

  • தொடங்கியவர்

உரோமர் காலத்து மலசல கூடத்தினை கீழே படத்தில் காணலாம். படத்தில் இருப்பவர்களில் சிலர் மனிதர்கள். சில சிலைகள்.

toilets01nx6.jpg

  • தொடங்கியவர்

காலையில் ஒழுங்காக உண்ணாத காரணத்தினாலும், Puzzling World ற்கு சென்று மாயத்தோற்றங்களைப் பார்த்தினாலும் தலை இடிக்கத் தொடங்க, 2 மணியளவில் வனக்காவில் உள்ள உணவு நிலையங்களுக்கு சென்றேன். கிறைஸ் சேர்ச்சில்(Christchurch) முதல் நாள் வெளிக்கிட்ட பின்பு, இங்கு(உணவு நிலையங்கள் உள்ள விதியில்) தான் அதிக மக்களையும், கடைகளையும் கண்டேன். வீதியின் ஒரு பக்கத்தில் ஏரியும், மறுபக்கத்தில் கடைகளும் இருக்கிறது.

p9270214jj9.jpg

ஆஹா.. நியூசிலாந்து மிக அழகா இருக்கிது.

உரோமர் காலத்து மலசல கூடத்தினை கீழே படத்தில் காணலாம். படத்தில் இருப்பவர்களில் சிலர் மனிதர்கள். சில சிலைகள்.

toilets01nx6.jpg

இப்பிடி மலசலகூடம் எங்கட வீடுகளிலையும் அமைக்கலாம் போல இருக்கிதே? பஞ்சி எண்டால் இதில படுத்து இருந்து கொண்டும் மலசலம் கழிக்கலாம் போல இருக்கிது. உரோமர் நல்ல சோம்பேறிகள் எண்டு இந்த மலசலகூடத்த பார்க்க தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

உரோமருக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இல்லை போலிருக்கு! இல்லாவிட்டால் ஒரு அலுமாரியில கொஞ்சப் புத்தகங்களும் வைத்திருக்கலாம். தேவையான இடமிருக்கு. :D:(

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் கலைஞன், சுவி. உரோமர் காலத்து மலசலகூடத்தைப் பார்த்தீர்கள். நான் முன்பு எழுதிய தொடரான வனு-அற்று என்ற நாட்டின் சுற்றுலா சென்றபோது அவர்கள் உபயோகிக்கும் மலசலகூடத்தைப் பார்க்க.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=233995

(இலங்கை, இந்தியாவில் இருப்பது போல)

நன்றி அரவிந்தன். முக்கியமான விசயங்கள விபரமா அறிஞ்சு வச்சு இருக்கிறீங்கள். விபரமான ஆள்தான். வாழ்த்துக்கள்! :unsure::wub: உணவு, உடை மாதிரி மலசலகூடமும் ஒரு அடிப்படைத்தேவை.

நேரில் போனது போலவே இருக்கு....:lol:

  • தொடங்கியவர்

சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலனவர்கள் குளிர்காலங்களில் வனக்கா, குயின்ஸ்டவுண் ஆகிய இடங்களுக்கு பனிக்கட்டிகளில் விளையாட விரும்பிச் செல்வதுண்டு. பனி படர்ந்த மலைகளில் பனிகளில் சறுக்கிக் கொண்டு விளையாடுவார்கள். அத்துடன் மலை உச்சியில் அமைக்கப்பட்ட ஏற்றி ,இறக்கிச் செல்லும் கதிரைகளில் (Chair lift)செல்வார்கள்.

deckxq0.jpg

trebleconequadchairliftvp2.jpg

  • தொடங்கியவர்

உணவை உண்டதும், அருகில் உள்ள எரிப்பக்கம் நடக்க நினைத்தாலும் அன்று இரவு குயின்ஸ்டவுனில் தங்குவதற்கு விடுதியில் பதிந்ததினால் குயின்ஸ்டவுனுக்கு பிரயாணம் செய்யத்தீர்மானித்தேன். அத்துடன் அருகில் இருக்கும் ஏற்கனவே குறிப்பிட்ட பனிகளில் , உயரச் செல்லும் கதிரைகளில் சென்று வரவிரும்பினேன். நேரம் கிட்டத்தட்ட மணி 3 இருக்கும். குயின்ஸ்டவுன் செல்ல ஒரு மணித்தியாலம் தேவை. குயின்ஸ்டவுனுக்கு வனக்காவில் இருந்து செல்வதற்கு 2 வீதிகள் இருக்கிறது. ஒன்று பிரதான வீதி. மற்றைய வீதியினால் சென்றால் தான் உயரச் செல்லும் கதிரை(Chair lift ) இருக்கும் இடம் வரும்.அதனால் அவ்வழியைத்தீர்மானித்தேன். அவ்வீதி பிரதான வீதியல்ல. போகும் போது வலது பக்கத்தில் தெரிந்த மலைப்பகுதியில் தான் உயரச் செல்லும் கதிரை இருப்பதாக வீதி அறிவுருத்தலில் சொல்லப்பட்டதினால் வலதுபக்கத்திற்கு எனது மகிழுந்து சென்றது. மலையைச்சுற்றிச் சுற்றி பாதைகள் இருப்பதை அவதானித்தேன். அவ்வீதி புளுதி படிந்த தார் பூசப்படாத வீதியாகும்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

நேரில் போனது போலவே இருக்கு....:mellow:

உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களது முந்தைய பதிவில் நீங்கள் நியூசிலாந்து சென்றதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் இங்கு பதிந்த இடங்களுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.