Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

படங்கள் அழகாயிருக்கு அரவிந்தன்...!படங்கள் ஏன் சின்னதாகவும் பெரியதாகவும் கலந்து இணைச்சிருக்குறீங்க... ஒரே அளவா இணைச்சால் பார்க்க வடிவாயிருக்கும்....! :wub:

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாசித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அனிதா. நான் நியூசிலாந்து தொடருக்கு முன்பு எழுதிய வனு-அற்று தொடரில் படங்களை ஆரம்பத்தில் 800 * 600 அளவில் இணைத்தேன். அச்சமயத்தில் யாழ்கள நண்பர் ஒருவர் நான் படங்களைப் பெரிதாக யாழில் இணைக்கும் போது சில கணனிகளில் படங்கள் தோன்ற நேரமெடுக்கும் என்பதினால் சிறிய படங்களாக இணைக்கச் சொன்னார். அதனால் நான் படங்களைப் பெரும்பாலும் 320 * 240 அளவில் இணைத்து வந்தேன். அப்படி இணைக்கும் போது படங்களின் அழகு குறைவுள்ளதாகவும், சில முக்கிய காட்சிகள் தெளிவற்றதாகவும் காணப்பட்டன. இதனால் முக்கிய படங்களை 640 * 480 அளவிலும், மற்றைய பெரும்பாலான படங்களை 320 * 240 அளவிலும் இணைத்து வருகிறேன்.

நான் இருப்பது சிட்னியில் தான். சிட்னியில் இருந்து 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் பயணித்தால் நியூசிலாந்துக்கு செல்ல முடியும். நான் இருமுறை நியூசிலாந்துக்கு இலவசப் பயணம் செய்திருக்கிறேன். முதன்முறை சென்றபோது பார்த்தவற்றைத்தான் தற்பொழுது பதிந்து கொண்டிருக்கிறேன். இப்பதிவு முடிவடைந்ததும் 2வது முறை சென்றபோது பார்த்தவற்றை உங்களுக்கு சொல்கிறேன்.

ஓ சிட்னியில் இருகிறியளா?

அப்படின்னா என் தம்பி ஜம்முவை தெரியுமோ. உவர்கள் புத்துமாமா சுண்டல் அண்ணா கந்தப்பு தாத்தா பொன்னித்தாத்தா.... உவர்களாஇ எல்லாம் தெரியுமோ. சும்மா கேட்டனான் பாருங்கோ இவர்களையும் சந்திச்சால் இபப்டி நியுசிலாந்து பயணம் போல படங்களோடு இணைப்பீங்க என்ற ஒரு நப்பாசையில் தான். :(

உங்கள் நியூசிலாந்து இலவ்சப்பயணம் பற்றி அழகாகவும் தெளிவாகவும் விளக்கி நம்மளுக்கும் ஆசையை ஊட்டிவிட்டியமைக்கு நன்றிகள். ஹாஹா

2வது பயணத்தையும் பகிருங்கள். கேட்க பார்க்க ஆசையாக இருக்கு. அச்சோ இவ்வளவு வடிவான மலைகளா. அதைவிட முக்கியம் நல்ல சுத்தமாக இருக்குக்ன்கோ ரோட் எல்லாம் :( .

மின்மினிப்பூச்சிகள் நித்தா குழம்பிடும் என கதைக்காமல் இருந்ததாக சொன்னியளே. அதைவிட முக்கிய காரணம் ஏது தெரியுமா மின்மினிப்பூச்சி வாயுக்குள் போயிடாம இருக்க தான் கதைக்காமல் இருக்க்க சொலி இருக்கிறார்கள் போல நேக்கு தோன்றுகிறது :lol:

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றிகள் வெண்ணிலா. நான் சிட்னியில் இருக்கிறனான். நீங்கள் குறிப்பிட்ட அனைவரையும் அடிக்கடி சந்திக்கிறனான். நேற்று எல்லோரையும் ஒரு வீட்டில் சந்தித்தேன். தென் நியூசிலாந்து பார்ப்பதற்கு மிகவும் அழகானது. வீதிகள் மிகவும் துப்பரவாக இருக்கும். அழகாக இருந்தாலும் எம்மவர்கள் குறைவாக இருப்பதினால் இங்கு சுற்றுலா செல்வதினைத் தவிர வாழ்வதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஏற்ற நாடு அல்ல. தற்பொழுது முதலாம் பயணத்தின் 5 வது நாள் அனுபவங்களைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மொத்தமாக 7 நாட்கள் முதலாம் பயணத்தின் போது சுற்றுலா சென்றேன்.

  • தொடங்கியவர்

நியூசிலாந்துப் பயணத்தின் போது சில முக்கிய பயணங்களின் போது சுற்றுலாப் பயணிகளைத் தனித்தனியே அல்லது அவர்களுடன் வந்தவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பார்கள். அப்பயணம் முடிவடைந்து வரும் போது அப்புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். எங்களுக்குப் பிடித்தால் காசு குடுத்து வாங்கலாம். அப்படங்களுடன் அவர்களின் இணையத்தள முகவரியையும் தருவார்கள். அம்முகவரியில் நாங்கள் பிரயாணம் செய்த நாளை தெரிவு செய்து, அந்நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் எங்களது படங்களையும் தேடி எடுக்கலாம் அல்லது புகைப்படத்தின் இலக்கத்தின் மூலம் இலகுவாகப் புகைப்படத்தை இணையத்தில் இருந்து பெறலாம். நான் ஏற்கனவே விபரித்த குயின்ஸ்டவுனில் பிரயாணித்த இரு வேகப் படகுப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள், குயின்ஸ்டவுன் gondolaவில் எடுக்கப்பட்ட படங்களை இவ்வாறே பணம் குடுத்துப் பெற்றேன். பிறகு 7ம் நாள் பயணத்தின் போது கிறைஸ்ச் சேர்ச் gondolaவிலும் இவ்வாறே படத்தைப் பெற்றேன்.

p9290105sj2.jpg

மில் வேட் ஒலியில் கப்பலில் பிரயாணிக்கும் போது ஒரு சிறு வேகப்படகில் ஒருவர் எமது கப்பலை நோக்கி வேகமாக வந்தார். மில்வேட் ஒலி கப்பலில் ஏறும் பொழுது எங்களை புகைப்படம் எடுத்தார்கள். அப்புகைப்படங்களின் பிரதிகளைத் தருவதற்காகவே அவர் வேகமாக எங்களை நோக்கி வந்தார். நான் கப்பலின் மேல் தட்டில் இருந்ததினால் , பிரயாணம் முடியும் வரை இயற்கைக்காட்சிகளை இரசிக்க விரும்புவதினால் கீழ்த்தட்டுக்கு செல்ல விரும்பவில்லை. பயணம் முடிவடைந்து புகைப்படத்தைக் கேட்டால் நான் உடனடியாக வராததினால் எனக்கு புகைப்படம் வாங்க விருப்பமில்லை என்று தாங்கள் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், புகைப்படத்தை இணையத்தில் தேடிப்பார்த்து வாங்கும்படி கேட்டிருந்தார்கள். சிட்னி வந்ததும் இணையத்தில் தேடி ஒருவாறு கண்டு பிடித்து அப்படத்தை கணனியில் பிரதி எடுத்தேன். இலவசமாக எடுக்கக் கூடியதாக இருந்தது. தேவையில்லாமல் காசு குடுத்து மற்றைய புகைப்படங்களை மற்றைய பிரயாணத்தின் போது வாங்கி விட்டேனே என்று அப்பொழுது நினைத்தேன்.

  • தொடங்கியவர்

தொடர்ந்து மில்வேட் ஒலியில் கப்பலில் பிரயாணிக்கும் போது சில கடல் உயிரினங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

p9290106pb9.jpg

p9290107uc2.jpg

p9290108if1.jpg

  • தொடங்கியவர்

தொடர்ந்து மில்வேட் ஒலியில் பயணிக்கும் போது பார்த்த நீர்வீழ்ச்சி

p9290109re7.jpg

p9290111yr2.jpg

p9290112ej1.jpg

  • தொடங்கியவர்

கப்பல் நீரின் உள் இருப்பதைப் பார்க்கக்குடிய(underwater observatory ) இடத்தை அடைந்தது. அதற்கு நுளைவுச்சீட்டு வைத்திருப்பவர்களை அங்கே இறக்கி விட்டு கப்பல் பயணித்தது. நான் நுளைவுச்சீட்டினை வைத்திருந்ததினால் நீரின் அடியில் இருப்பதைப் பார்க்க சென்றேன். வட்டவடிவிலகா அமைக்கப்பட்ட அவ்விடத்தின் மேற்பகுதியில் இருந்து அடிப்பகுதிக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. படிக்கட்டின் ஊடாக அடியினை அடைந்ததும் நீருள் இருப்பதினைக் கண்ணாடியினூடாகக் காணக்கூடியதாக இருந்தது. நீர்த்தாவரங்கள், நீர் உயிரனங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

64423864rp5.png

p9290114ii2.jpg

p9290115gh0.jpg

p9290116lb8.jpg

  • தொடங்கியவர்

p9290117wf3.jpg

p9290118vr9.jpg

p9290119jo0.jpg

p9290120wb3.jpg

p9290121pp8.jpg

  • தொடங்கியவர்

p9290122gp7.jpg

p9290124et4.jpg

p9290125gz1.jpg

p9290127wh9.jpg

p9290128hp0.jpg

p9290132cv0.jpg

p9290133ur4.jpg

p9290134fa9.jpg

p9290135sp7.jpg

அருமை :D

  • தொடங்கியவர்

நீருனுள் பார்த்து முடித்தபின்பு படிகளினூடாக மேலே வந்து கப்பலுக்காகக் காவல் இருந்தோம். சில நிமிடங்களில் கப்பல் ஒன்று வந்தது. கப்பலின் மேல் தளத்துக்கு சென்று இயற்கைக்காட்சிகளை இரசித்தேன்.

p9290136ze9.jpg

p9290138wg8.jpg

  • தொடங்கியவர்

கப்பல் பயணம் முடிவடைந்ததும், மில்வேட் ஒலியில் காலை உண்ட இடத்தில் சான்ட்வீச்சினை வாங்கி உண்டபின் குயின்ஸ்டவுனை நோக்கிப் பயணித்தேன். அன்றைய இரவு குயின்ஸ்டவுனில் 3ம் நாள் பயண முடிவில் தங்கியிருந்த விடுதியில் தங்குவதற்கு பதிவு செய்ததினால் உடனே புறப்பட்டேன். மில்வேட் ஒலியில் இருந்து ரி-அனவு செல்ல 2 மணித்தியாலம் எடுக்கும். மேலும் 2 மணித்தியாலம் ரி-அனவில் இருந்து குயின்ஸ்டவுன் செல்ல 2 மணித்தியாலம் தேவை. ஆக மொத்தம் 4 மணித்தியாலம் தேவை.தென் நியூசிலாந்தில் பெரும்பாலான இடங்களில் இருள முதல் பயணிப்பது நல்லது. மலைகளினூடாக இருளில் பயணிப்பது நல்லதல்ல. வந்த பாதையினால் தான் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதினால் இந்த 4 மணித்தியாலம் பார்த்தவை ஏற்கனவே நான் இங்கு விபரித்ததினால் இங்கு நான் மறுபடியும் விபரிக்கவில்லை.

p9290139lq3.jpg

p9290141gg6.jpg

மாலை 6 மணியளவில் குயின்ஸ்டவுனை அடைந்தேன். குயின்ஸ்டவுனில் அன்றைய இரவு இந்திய உணவகமொன்றில் உண்டபின்பு, விடுதிக்கு சென்றேன்.

  • தொடங்கியவர்

அருமை :wub:

உங்களின் கருத்துக்கு நன்றிகள் தூயா.

  • தொடங்கியவர்

6ம் நாள் பயணம்

குயின்ஸ்டவுனில்[Queenstown ] இருந்து ஒமரமாவுக்குOmarama] செல்ல 2 மணித்தியாலம் எடுக்கும்.

w722703ks3.gif

ஒமரமாவில்[Omarama] இருந்து டுவைசலுக்கு[Twizel] செல்ல 30 நிமிடங்கள் எடுக்கும். டுவைசலில் உள்ள விடுதியில தான் அன்று இரவு தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தேன்.

w140173gh3.gif

டுவைசலில்[Twizel] இருந்து குக் மலை கிராமத்துக்கு[Mt Cook Village] செல்ல 45 நிமிடங்கள் எடுக்கும். சென்று திரும்பிவர 1.30 நிமிடங்கள். அன்றைய மொத்தப் பிரயாணத்துக்கு 4 மணித்தியாலம் எடுக்கும்.

l717633zw0.gif

கடலுக்கடியில் பார்த்து ரசித்ததை புகைப்படமாக்கி நாமளும் பார்க்க இங்கு பதிந்தமைக்கு நன்றிகள்.

உங்கு போக பயமில்லையோ அரவிந்தன் :rolleyes:

  • தொடங்கியவர்

கடலுக்கடியில் பார்த்து ரசித்ததை புகைப்படமாக்கி நாமளும் பார்க்க இங்கு பதிந்தமைக்கு நன்றிகள்.

உங்கு போக பயமில்லையோ அரவிந்தன் :rolleyes:

பயமில்லை. எனென்றால் வட்ட வடிவிலான அறை ஒன்றினுள் கண்ணாடி வழியாக நீரில் இருப்பதினைப் பார்க்கலாம். நான் இணைத்த படங்களில் முதலாவது படத்தில் ஒரு சிறுமி இவ்வறையிலிருந்து கண்ணாடி வழியாகப் நீரினுள் இருப்பதைப் பார்ப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

இவ்வறைக்குச் செல்ல உட்புறமாகப் படிக்கட்டுக்கள் இருக்கிறது. நான் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் நியூசிலாந்துப் பயணத்தை 2005ல் சென்றிருந்தேன். அதன் பிறகு 2006ம் ஆண்டு வனு-அற்று நாட்டுக்கு சென்றேன். வனு-அற்றுப் பயணம் பற்றி ஏற்கனவே நான் யாழில் எழுதி முடித்திருக்கிறேன். அப்பயணத்தின் போதும் கடலில் அடியினுள் உள்ளவற்றைப் பார்த்ததினைச் சொல்லி இருக்கிறேன். நியூசிலாந்துப் பயணத்தில் வட்ட அறையினுடாகக் கடலின் அடியினைப் பார்த்தேன். ஆனால் வனு-அற்றுப் பயணத்தில் ஒடும் படகின் கண்ணாடியிலான அடித்தள அறையில் இருந்து கடலின் அடியினைப் பார்த்தேன். இரண்டு பயணத்திலும் வனு-அற்றில் கடலினுள் இருப்பதைப் பார்த்தது என்னை மிகவும் கவர்ந்தது.

  • தொடங்கியவர்

6ம் நாள் காலை விடுதியில் உணவினை உண்டபின் (இவ்விடுதியில் தான் 3ம் நாள் தங்கி இருந்தேன். இவ்விடுதியில் தங்குபவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கினார்கள்) எனது பயணத்தினை டுவைசலை நோக்கி ஆரம்பித்தேன். விடுதியில் இருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் ஒரு பாலம் வருகிறது. அப்பாலத்தில் இருந்து சிலர் இருந்து கால்களைக் கையிற்றினால் கட்டப்பட்ட நிலையில் கீழே பள்ளத்தாக்கினுள் குதித்தார்கள்(Bungy Jump)

. பள்ளத்தாக்கினுள் எரி ஒன்று ஒடிக் கொண்டிருந்தது. கால்கள் கையிற்றினால் கட்டப்பட்டு இருப்பதினால் தலை கீழாக விழ வேண்டும்.

p9300142jz8.jpg

p9300143qy6.jpg

p9300144ko9.jpg

p9300145lw3.jpg

இவ்விடத்தில் தான் தென்னிந்தியத்திரைப்படமான குஷியில் நடிகர் விஜய் ஒரு பாடலுக்கு குதிக்கிறார். அவர் குதிப்பதைப் பார்க்க

http://www.youtube.com/watch?v=HoiggDXmz7g

  • தொடங்கியவர்

மீண்டும் டுவைசலை நோக்கிப் பயணித்தேன்

p9300146rm0.jpg

  • தொடங்கியவர்

சில நிமிடங்களில் குரொம்வெல்(Cromwell) என்ற இடத்தை அடைந்தேன். அங்கு அப்பிள் போன்ற பழங்களின் சிலைகள் வீதியில் கண்டேன். அங்கே உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் குரோம்வெலில் பார்க்கக்கூடிய இடங்கள் எவை என்று கேட்க, அங்கே பொதுவாக வைன் தோட்டம் இருப்பதாகவும் வைன்(Wine -திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்படும் குடிவகை) தோட்டத்திற்கு சுற்றுலா செல்லலாம் என்று சொன்னார்கள். வேறு அவ்விடத்தில் பார்க்கக்கூடிய இடங்கள் இல்லை என்பதினாலும் சிட்னிக்கு வெளியே உள்ள கன்றவழி(Hunter Valley)யில் ஏற்கனவே பெரிய வைன் தோட்டங்களையும் பார்த்ததினால் டுவைசலை நோக்கிப் பயணித்தேன்.

p9300147zf3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்
cromwell1gu7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணிக்க அழகிய ஏரி(Lake Dunstan) ஒன்றினை வீதி ஓரத்தில் கண்டேன்.

p9300148uh0.jpg

p9300149eo1.jpg

p9300150sm8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அச்சமயத்தில் அங்கு பறந்து வந்த உலங்குவானூர்தி ஒன்று வாழியினால் ஏரியில் இருந்து நீரைப் பெற்று மலை உச்சிக்கு சென்று நீரை உற்றியது. இவ்வாறே தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. மலை உச்சியில் உள்ள தாவரங்களுக்கு நீரைப் பாச்சுவதற்காகவா இவ்வாறு உலங்குவானுர்தி செயல் பட்டது?.

p9300151ns0.jpg

Edited by Aravinthan

அருமையான பயணக்கட்டுரையை வழங்கிய தம்பி அரவிந்தனுக்கு என் வாழ்த்துக்கள்

மேலும் எதிர்பார்க்கிறோம்...... வாழ்த்துக்கள்....

:wub: உங்கள் வனுஅற்று பயண அனுபவங்ளையும் விரும்பிப்படித்தேன் அருமை

தொடருங்கள் :wub:

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சின்னப்பு.

Edited by Aravinthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.