Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் எலும்புக்கூடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாசி 26, 2050 சனி (09.03.2019)

மன்னார் எலும்புக்கூடுகள்.

சிவசேனை 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கரி வகைகள் மூன்று. கரி12, கரி13, கரி14. இவற்றுள் கரி14 கதிர் சார்ந்தது. இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியாவது.

கரி14 + உயிர்வாயு = ஒற்றைக்கரியமிலம் அல்லது இரட்டைக் கரியமிலம்.

கரியமில வாயுவைத் தாவரங்கள் உள்ளீர்ப்பன, பச்சையத்தை ஊக்கியாக்குவன. சூரியனின் ஒளிக் கதிர் சேர்ப்பன. முதலுணவான சர்க்கரை தருவன. விலங்குகள் தாவரங்களை உண்பன.

உயிர் உள்ளவரை தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ளிருக்கும் கரி14, சூழலிருக்கும் கரி14 உடன் சமநிலையில்.

உயிரிழந்ததும் இச்சமநிலை கெடும். உயிரற்ற நிலையில் கரி14 அளவு குறையத் தொடங்கும். படிப்படியாக இற்றுப் போகும்.

இற்றுப் போகும் வேகம் காலத்தோடு தொடர்புடையது என்பதைக் ஆயந்தறித்து கொள்கையாகக் கூறியவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

ஓராண்டில் இவ்வளவுதான் இற்றுப்போகும் என்ற வரையைறை உண்டு.

உயிரிழந்த காலத்தில் சூழலில் கரி14 அளவு இதற்கு அடித்தளம். அச் சூழல் அளவைத் தெரிந்தால் அந்த அளவில் இருந்து இற்றுப் போன கரி14 அளவைக் கணக்கிடலாம்.

இன்றைய சூழலில் கரி14 அளவு, உயிரிழப்புச் சூழலில் கரி14 அளவு, உயிரற்றதில் கரி14 அளவு, இந்த அளவு மாற்றங்கள் காலக் கணக்கீட்டில் உதவுவன.

கடுவேகத் துகள் ஒளிமானி (Accelerator Mass Spectrometry technique) என்ற கருவியே இந்த அளவீட்டைத் தருகிறது.

உலகில் 46 கருவிகள் உள. இந்தியாவில் மும்பையில் 2018 தொடக்கம் ஒரு கருவி உண்டு. ஐரோப்பாவில் 22, அமெரிக்காவில் 9, ஆத்திரேலியாவில், யப்பானில் 8, ஆத்திரேலியா 3, நியுசிலாந்து 3, சீனா 1, கனடா 1, கொரியா 1.

ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுக்குக் கட்டணம் இலங்கை ரூ. 150,000 ஆகலாம்.

மருத்துவர் ஒருவரிடம் போகிறோம். நோய் ஈதென்கிறார். மற்றொரு மருத்துவரிடம் போனால் வேறொரு நோய் எனலாம். இரண்டாவது கருத்துக் கேட்டல், அனைத்துத் தொழில் சார் துறைகளிலும் வழமை.

மன்னார் எலும்புக்கூடுகள் தொடர்பாக இரண்டாவது கருத்துக் கேட்டலே பொருத்தமானது. இரண்டாவது ஆய்வுகூடமும் இதையே சொலின், தொல்லியலார், வரலாற்றாய்வாளருக்குப் பணியே அன்றி, ஊகிப்போரின் பணி அன்று.

கற்பனைகள் இன, மத மோதல்களைப் பெருக்கும். சைவ சமயிகளாகிய நாம் இலங்கையில் மதிப்புடனும் மாண்புடனும் வாழ் விழைகிறோம். அனைத்துச் சமயத்தவரின் நெறிகளையும் மதித்து நடப்போம்.

வேற்று மத்ததவர் இதை உணர்ந்து, சைவ சமயத்தை, சைவ சமயத்தவைரை, சைவ வாழ்வியல் நெறிகளை மதித்து வாழ்வாராக.

1 மத மாற்றத்தை ஏற்கோம். 
2 சைவ வழிபாட்டிடங்களில் வேற்று மத ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளை ஏற்கோம். 
3 சைவ வாக்காளர் வாக்களித்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சைவ சமயத்துக்கும் சைவர்களுக்கும் சைவ வாழ்வியல் நெறிகளுக்குமே மாற்றாக, எதிராக, இடுக்கண் தருவதை ஏற்கோம். 
4 சைவத்தைப் போற்றுபவர்களுக்கே தேர்தல்களில் வாக்களிக்குமாறும் சைவ வாக்காளரைக் கோருவோம்.

Image may contain: text
No photo description available.
No photo description available.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது! இங்கே சங்கிலியன் மதம் மாறிய முன்னாள் சைவர்களைக் கொன்ற சீன்  வந்ததும் சச்சிதானந்தம் ஐயாவுக்கு "ஊகம்" ஆபத்தானது என்று விளங்கி விட்டதாக நம்புகிறோம்! இவர் தானே பௌத்தர்கள் சைவர்களின் பூமியான இலங்கையில் வேற்று மதத்தவருக்கு இடமில்லை என்று முழங்கின சிங்கன்? 

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

எலும்புக் கூடுகள், உண்மை...பேசுமா??

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் குடிநீர்க்குழாய் பொருத்துவற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புகள் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி தோண்டப்பட்ட போது 2015 வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக காணப்பட்ட நிலையில் அந்த புதைகுழி தோன்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றுவரை அந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதனிடையே இந்த எலும்புகளோடு Ak 47 துப்பாக்கி ரவையும் மீட்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த கட்டடம் உடைக்கப்பட்டு 'லங்கா சதொச'வுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற போது அந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆபரணங்கள் மனித எச்சங்களுடன் காணப்பட்டாலும் உடைகள் எதுவும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

அத்துடன் அந்த புதைகுழியில்அனைத்து உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக குவித்தே புதைகுழி மூடப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது. சில எச்சங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வின் போது பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில் 29 கூடுகள் சிறுவர்கள் உடையதாகும்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாக இருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க நம்முள் எழுகின்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை தான். விடையும் காணமுடியாதவை.

1) 500 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் அத்திவாரம் வெட்டும் ஆழத்தில் இருக்குமா??

2)திருக்கேதீஸ்வரத்தில் 55 எலும்புகளும் மன்னார் நகரில் 335 எலும்புகளும் மீட்கப்பட்ட நிலையில் வெறும் 6 என்புகள் மட்டும் அனுப்பி ஆய்வு மேற்கொண்டமை சரியா?

3) திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் Ak 47 ரவைகளும் மன்னார் நகர புதைகுழியில் 1996 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பிஸ்கட் பைக்கட்டும் இருந்துள்ளன. எனின் அவை பற்றி கருத்திலெடுக்காமை ஏன்??

4) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்படவில்லை??

6) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் கைவிலங்கு போன்றே உள்ளது. அப்படியாயின் 500 வருடங்களுக்கு முன்னரே விலங்கு போடும் நடைமுறை இருந்ததா??

7) மன்னார் நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் ஏற்கனவே சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதமாற்றிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனால் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட எலும்புகள் அந்த எலும்புகளாக ஏன் இருக்க முடியாது??

😎 ஆய்வுகளின் முடிவு சரியானது தான். ஆனால் அனுப்பப்பட்ட எலும்புகள் தொடர்பாக உரிய விவரங்கள் வெளியிடாததும் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டமை ஏன்??

9) உலோகம் கடலினுள்ளோ அல்லது பனிக்கட்டியினுள்ளோ உக்காமல் இருக்கும். ஆனால் மண்ணில் அது எவ்வாறு 500 வருடங்கள் உக்காமல் இருந்திருக்கும்??

10) 2017 கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் நகர புதைகுழி என்புகள் ஆய்வுக்கு அனுப்பியவர்கள் 2013 கண்டுபிடிக்கப்ப்பட்ட திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பாக ஆய்வுக்கு அனுப்பாது இழுத்தடிப்பது ஏன்??

11) 500 வருடங்கள் பழமையான புதைகுழி எனின் தோண்டப்படும் போது தொல்லியல் சான்றுகள் ஒன்று கூட மீட்கப்படவில்லை ஏன்??

12) மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் 500 வருடங்கள் எவ்வாறு உக்காமல் இருந்திருக்கும்???

13) மண்டை ஓடுகளில் துப்பாக்கி ரவை துளைத்த துளைகளும் உள்ளன. எனில் 500 வருடத்துக்கு முன்னர் துப்பாக்கி வைத்து கொலை செய்தவர்கள் யார்?

14) இன்னும் தோண்டினால் எலும்புகள் வரும் என்ற நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து ஆய்வுசெய்ய ஏன் முடியவில்லை..?

15) அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சரியானது என இலங்கை நீதித்துறை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டது??

16) 500 வருடங்களுக்கு முன்னரே Ak 47 பாவனையில் இருந்ததா?

17) சிறுவர்கள் கொல்லப்பட்டதாக 500 வருட வரலாற்று குறிப்புகள் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா??

இந்த கேள்விகளுக்கு விடை இறந்த எலும்புக்கூடுகள் எழுந்து பேசினால் மட்டுமே கிடைக்கும்.

மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் ஏமாந்திருப்பதையும் சேர்த்தால் இது வரை பல தடவைகள் ஆட்சியாளர்களிடமும் , சர்வதேசத்திடமும் நம்பி ஏமாந்து போனவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மட்டும் தான் உணர முடிகிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைக்கு எதிரான எந்த விடயமாக இருந்தாலும் அரசின் பக்கம் நின்று அரசைக் காப்பாற்றவே முனைகிறது. இவ்வாறு இருக்கும் போது நீதியான நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என நாம் எவ்வாறு நம்ப முடியும்.. இவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. மாறாக சிங்கள மக்கள் தான் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்...

மன்னார் புதைகுழி 500 வருட பழமையானது என கூறிய ஆய்வு முடிவுகள் நாளை அகழப்படப்போகும் புதிய புதைகுழிகள் கிறிஸ்துவிற்கு முற்பட்டது என்று வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது தான்.

ஏமாற்றமே தொடர்கதையாகி போன ஈழத்தமிழர் வாழ்க்கை மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது...
எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

நெல்லை நெல்லையான் and Perumaal Das shared a post.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.