"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 113 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 113 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" புத்தர் பிறந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் சித்தார்த்தா அல்லது சித்தார்த்தர் [Siddhartha]. அவரது தந்தை சுத்தோதனர் [Suddhodana], தாய் மாயா [Maya]. அவரது மகன் ராகுல் [Rahul] பிறந்தபோது, அவர் தனது வீட்டை விட்டு, சத்தியம் அல்லது ஞானத்தைத் தேடிப் வெளியேறினார். சித்தார்த்தர் பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார், இருபத்தி ஒன்பது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மன்னன். எனவே இவர் ஒரு இளவரசன். என்றாலும் சித்தார்த்தர் அரண்மனையின் எல்லா ஆடம்பர வசதிகளையும் விட்டுவிட்டு, ஒருபோதும் அந்த முன்னிய வாழ்க்கைக்கு திரும்பி வரக்கூடாது என்ற எண்ணத்துடன், வீடற்ற ஒரு வாழ்க்கைக்குச் [homeless life] சென்றார். இருப்பினும், டாக்டர் அம்பேத்கர் [Dr. Ambeddkar] தனது 'புத்தரும் அவரது அறமும்' [‘Buddha and his Dhamma’ ] என்ற புத்தகத்தில், அந்தக் குடும்பம் ஒரு அரச குடும்பம் அல்ல, மாறாக ஒரு பெரிய மன்னனின் கீழ் நாட்டை ஆளும் உன்னத குடும்பங்களில் ஒன்றாகும் என்று கூறுகிறார். அவர் முப்பத்தைந்து வயதில் ஞானம் பெற்று புத்தரானார். கௌதமர் [Gautama] என்பது அவரது வம்சம் ஆகும். எனவே அவர் கௌதம புத்தர் என்று இன்று அழைக்கப்படுகிறார். இவர் அடுத்த நாற்பத்தைந்து ஆண்டுகள் இந்தியாவின் மத்திய கங்கை சமவெளியைக் குறுக்கும் நெடுக்குமாக கடந்து பிரசங்கம் செய்து இறுதியில் இறந்தார். அதாவது எண்பது வயதில் அவர் மகாபரிநிர்வாணத்தை அடைந்தார். இலங்கை மற்றும் ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவு (Jambudipa / இந்தியா) ஆகிய நாடுகளின் முக்கியமான மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் தேதியைக் குறிக்கும் வகையில், தீபவம்சமும் மகாவம்சமும் புத்தர் இறந்த நாளைக் கருத்தில் எடுத்து , அது சார்ந்து காலங்களைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, கிருஸ்துக்கு முன் அல்லது கிருஸ்துக்கு பின் என குறிப்பிடுவது போல, இங்கு புத்தர் இறந்த காலத்தில் இருந்து ஆண்டுகளைக் கணக்கிடுகின்றன. எனவே, புத்தரின் மரணம் தற்போதைய காலகட்டத்துடன், அதாவது பொது சகாப்தம் அல்லது கிறிஸ்தவ சகாப்தத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் [Culavamsa] கிடைக்கும் தகவல்கள் புத்தர் இறந்த ஆண்டாக கிமு 544 ஐக் குறிக்கின்றன. மேலும் விஜயன் மற்றும் அவரது எழுநூறு தோழர்களின் புராண வருகை கி.மு. 544 ஆம் ஆண்டு, அதாவது புத்தர் இறந்த நாளில் நடந்தது எனவும் இலங்கை நாளாகமம்கள் [chronicles] கூறுகின்றன. இதன் படி, புராண விஜயன் இலங்கையில் கால் வைத்த நாளில் இருந்து காலத்தை கணிக்கிறது என்றும் கூறலாம்? தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற இலங்கை வரலாற்று நூல்களில் பல கட்டுக்கதைகள், அற்புத நிகழ்வுகள், அசாதாரண தற்செயல் நிகழ்வுகள், உயிரியல் ரீதியாக சாத்தியமற்ற பிறப்புகள் மற்றும் காற்றில் பறப்பது, பூமியதிர்ச்சிகளை தான் நினைத்தபடி ஏற்படுத்துதல், விருப்பப்படி கடுமையான குளிர் மற்றும் வெப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற மனித ரீதியாக சாத்தியமற்ற சாதனைகள் புதைத்தும் பரவியும் உள்ளன. இவை அனைத்தும், இந்த நாளாகமங்களில், வரலாற்றை அழகாக்க embellishment செய்ய உருவாக்கப்பட்டவை என்று பொதுவாக கூறுகிறார்கள். ஆனால் எது உண்மை வரலாறு, எது கற்பனை என்பதைக் தெளிவாக எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை. இதுதான் இதன் முக்கிய குறை ஆகும். ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக புத்தரின் உண்மையான வரலாற்றை இந்தியாவின் வரலாற்று சான்றுகளுடன் அறிந்த ஒருவர், புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்தது வெறும் அலங்காரங்கள் என்று அவர் கூறினால், முழு பிக்கு சகோதரத்துவமும் கோபத்தில் எழுந்து புத்தரின் கொள்கைகளை முற்றிலும் மீறி அல்லது தூக்கி எறிந்து பழிவாங்கக் கேட்கும் என்பது நாம் அனுபவப்பட்ட இனக்கலவரங்கள் எடுத்துக் கூறும் உண்மைகள் ஆகும். இவை ஒத்த சம்பவங்கள் கடந்த காலத்தில் இலங்கையில் பல முறை நடந்து உள்ளது. புத்த பிக்குகள் மற்றும் புத்த அறிவுஜீவிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுக ஆதரவுகளுடன், இலங்கை பாதுகாப்புப் படைகளால் தமிழர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பெரும் பங்களித்தது எனலாம். அதாவது தமது முதல் பிரதிநிதியான புராண விஜயன் புத்தரின் மகாபரிநிர்வாண நாளில், புத்தரின் அனுசரணையுடன், இலங்கையில் புத்த மதத்தை வளர்த்து பாதுகாக்க, இலங்கைக்கு முதல் முதல் வந்ததாகவும், அங்கு அதற்கு முதல் எந்த மனித இனமும் இல்லை என்ற நம்பிக்கையும், தாமே நிலத்தின் முதல் குடி என்ற கண்மூடித்தனமான, வரலாற்று உண்மைக்கு எதிரான கருத்துக்களும் இவைக்கு காரணமாகும். மேலும் முன்னாள் தொல்பொருள் ஆணையர் எஸ். பரணவிதான மற்றும் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஜி.சி. மெண்டிஸ் [The former Archaeological Commissioner S. Paranavitana and the historian and the author G. C. Mendis] ஆகியோர் கி.மு. 544 ஆம் ஆண்டை புத்தரின் மகாபரிநிர்வாண ஆண்டாக பிடிவாதமாக கூறினர். அது மட்டும் அல்ல, இந்த நாளே, சிங்கள இனத்தின் முதல் பிரதிநிதி, புராண விஜயன் இலங்கைக்கு வந்த நாளாகவும் கருதினர். என்றாலும், தீபவம்சம், மற்றும் சூளவம்சம் அல்லது சூலவம்சம் போன்ற இலங்கை நாளாகமம் தவிர பிற மூலங்களிலிருந்து, குறிப்பாக புத்தர் பிறந்து, வளர்ந்து, இறந்த இந்தியா நாட்டு வரலாற்று மூலங்களிலிருந்து, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பல அறிஞர்கள் கி.மு. 544 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டறிந்துள்ளனர். Part: 113 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" The name given to the Buddha when he was born is Siddhartha. His father is Suddhodana and the mother is Maya. He left his home when his son, Rahul, was born in search of truth or enlightenment. Siddhartha married when he was sixteen and left home when he was twenty nine years of age. Suddhodana, Siddhartha’s father, was a king, and Siddhartha left the comforts of palace to the homeless life: never to return back. Dr. Ambeddkar, however, says in his book ‘Buddha and his Dhamma’ that the family was not a royal family but one of the noble families which rule in turn the country, under a major king. He attained enlightenment at thirty five years of age and became the Buddha. Gautama is his clan, and he is known as Gautama Buddha. He crisscrossed the Central Gangetic Plain of India by walking for the next forty five years preaching, and died, attained Mahaparinirvana, at the age of eighty years. The Dipavamsa and the Mahavamsa refer to the day on which the Buddha died, as the frame of reference to date the reigns of important kings of Lanka and Jambudipa (India). The death of the Buddha, therefore, needs to be related to the current time frame: the Common Era or the Christian era. The information available in the Culavamsa leads to the year 544 B.C. as the year on which the death of Buddha occurred. The legendary arrival of Vijaya and his seven hundred companions happened on the year 544 B.C., on the day of the Mahaparinirvana: the day on which the Buddha died. There are many fables, miraculous happenings, extra ordinary coincidences, biologically impossible births, and humanly impossible feats such as flying through air and causing earth quakes, causing extreme cold and heat at will in these chronicles. An escape statement is always made to consider these as embellishments to adorn the real history. However, it is never specified what to discard and what the real events are. If one suggests that the Buddha’s three visits to Lanka are just embellishments, then the entire Bikkhu fraternity would rise in anger asking for retribution totally in violation of the Buddha’s tenets. It happened many times in Ceylon in the past. The year of the Mahaparinirvana of the Buddha contributed immensely to the criminal acts against the Tamils by the Sri Lanka security forces, with the overt and covert supports of the Buddhist monks and the Buddhist intelligentsia. The former Archaeological Commissioner S. Paranavitana and the historian and the author G. C. Mendis dogmatically claimed the year 544 B. C. as the year of the Mahaparinirvana of the Buddha. Many scholars have found the year 544 B. C. to be untenable based on the information available from the sources other than the Ceylon Chronicles: the Dipavamsa, the Mahavamsa, and the Culavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 114 தொடரும் / Will follow துளி/DROP: 2054 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 113 https://www.facebook.com/groups/978753388866632/posts/33961834450131767/?
By
kandiah Thillaivinayagalingam · 13 minutes ago 13 min
Archived
This topic is now archived and is closed to further replies.