Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழை ஏந்திய திருமகனார் -

Featured Replies

Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் -
        தடங்களை வரிக்கும் பெருங்கவிதை!
******-*****-******-******-******-*****-******
தாயகத்துப் பயணத்திலே
வழித்துணையாய் வாழ்ந்தவன்
தலைமகனுக்கோர் அண்ணனாகி
தனித்துவனாய் நின்றவன்!.

கருத்தினிலே கண்ணியத்தை
குருத்தினிலே கண்டதனால்
உருத்துடனே உத்தமனின்
உறவுமாகிக் கொண்டவன்!

பெருத்தவோர் வங்கியை
அழுத்தமாய் ஆண்டதால்
பொருத்தமாய்ப் பொறுப்பினை
விருத்தமாய்ப் பெற்றவன்!

நிதித்துறை என்றவோர்
நிகருயர் அலகினை
மதிப்புடன் ஆண்டிடும்
பொறுப்பினைப் பெற்றவன்!.
 
இரண்டு பவுண் தங்கத்தினால்
திரண்டு வந்த பங்களிப்பால்
இருண்ட எங்கள் கிழக்கினுக்கோர்
இன்பவொளி ஏற்றுவித்தான்!.

விதவிதமாய்ப் பாடுபட்டுச்
சதக்கணக்கில் சேர்த்தபணம்
வீண்விரையம் ஆகிடாமல்
வினைத்திறனாய்ச் சேகரித்தான்!.

பட்டகடன் தீர்த்துவைக்கப்
பகலிரவாய் உழைக்க வைத்தே
மீட்புநிதி மீளளிப்பில்
மீண்டுபெரு மூச்சு விட்டான்!.

வருவாய்க்கோர் பகுதியினை
பெருவாயாய் உருவாக்கி
வரியாலே நிதியீட்டும்
வளம்தன்னைக் காட்டுவித்தான்!.

ஆயத்தின் அலகுக்கோர்
ஆளுகையை அமைத்தன்று
ஆடம்பரம் அத்தனைக்கும்
ஆயத்தீர்வை விதிக்க வைத்தான்!.

வந்த வருவாயை வைத்து
சொந்தமாக உழைத்திடவே
அந்த நாளின் மன்னர்பேரில்
வாணிபங்கள் பலவும் வைத்தான்!.

காட்டு நிலம் பண்படுத்தி
மேட்டுநிலமாய்ப் பெருக்கி
வாட்டும்பசி வதையைப்போக்க
தோட்டங்களும் தோற்றுவித்தான்!

கால்நடைகள் வளம்பெருக்க
கால்நடையாய்க் காடலைந்து
கண்ணயர்வைத் தள்ளிவைத்து
பண்ணைகளைப் பெருக்குவித்தான்!

சதக்கணக்கும் சிதறிடாமல்
முழுக்கணக்கும் செவ்வையிட
அதற்கெனவோர் கணக்காய்வை
அழுத்தமாகத் தானமைத்தான்!.

கணக்கியலும் கணக்காய்வும்
நிதியாள்கைக் கொள்கையதும்
நுணுக்கங்களை ஆய்ந்தறியக்
கல்லூரிகள் தோற்றுவித்தான்!. 

நாமுழைத்த உழைப்பில்வந்த
நாலு தேட்டம் சேர்த்துவைக்க
நமக்கெனவோர் வைப்பகத்தை
நம்ம நாட்டில் தந்துவைத்தான்!.

சேரமன்னன் பேரினிலோ
செம்மையுறு வணிகம் வைத்தான்
சேர்ந்து பலர் பணிபுரிய
செயலுறநெல் ஆலைவைத்தான்!

சோழமக ராசன் பேரில்
சொந்தமாகக் கடைகளிட்டான்
சோற்றுப் பஞ்சம் தீர்த்துவைக்க
சோர்வுநீங்கி உழைக்கவைத்தான்!

பாண்டியனார் பேரில்நல்ல
பல்சரக்கைப் போட்டுவித்தான்
வேண்டியநம் தேவைகளை
ஒருகுடையில் வாங்கவைத்தான்!.

வன்னியனின் வளப்பெயரால்
வலைத்தளத்தை வளர்த்துவிட்டான்
வன்னியரின் தேவைக்கேற்பத்
தோலைபேசித் தொடர்புமிட்டான்!.

இளவேனில் என்றபெரு
விருட்சமொன்றை நாட்டுவித்தான்
அதனடியில் அந்தரித்தோர்
இழைப்பாற இடம்கொடுத்தார்!.

தாயகத்தில் தனித்துவமாய்
தங்கநகைத் தளங்களிட்டான்
தரம்குறையாத் தங்கங்களைத்
தக்கவிலைக் குவந்தளித்தான்!.

வன்னியெங்கும் வலம்வரவே
வசுவண்டிச் சேவையிட்டான்
ஆக்கபூர்வச் சேவையாகப்
போக்குவரவுக் கழகம் வைத்தான்!.

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை
பெருந்திரளாய் நாட்டிவைத்தான்
பெருந்தோட்டப் பகுதியினால்
பெரும் இலாபம் ஈட்ட வைத்தான்!.

வணகவள நலன் பெருக்க
நலன்பேணல் நிருவகித்தான்!
வாணிபத்தால் வளம்பெருக்க
ஒன்றியத்தை ஒருங்கமைத்தான்!.

நாட்டில் நல்ல வளத்தையாக்கி
நாலுடைமை சேர்த்துவைத்தான்
கடமையினில் கண்ணைவைத்தே
உடமைப் பகுதி தோற்றுவித்தான்!.

நிலங்களெங்கும் பரந்தபேர்க்குத்
தேவைகளைத் தீர்த்துவைத்தான்
வளங்களதைப் பகிர்ந்தளிக்க
வழங்கல் பகுதி ஆக்கிவைத்தான்!.

தரிசுநிலத் தரையிலெல்லாம்
தக்கபயிர் விதை விதைத்தான்
தெரிவுசெய்த நிலத்திலெல்லாம்
போகப் பயிர் பலவளர்த்தான்!.

காசுப் பயிர் கண்டாய்ந்து
காரியத்தை முன்னெடுத்தான்
"கயூ" மரத்தில் காடுவைத்தே
காசுழைக்க முனைப்பெடுத்தான்!

வேப்பமர விலையறிந்து
வேப்பங்காடும் வளர்த்தெடுத்தான்
புளியமரப் பயனறிந்து
புளியங்காடும் புனரமைத்தான்!.

தேக்குமரத் தேவைதீர்க்கத்
தெருவில்கூடத் தேக்குவைத்தான்
பூக்குமரத் தரவையெங்கும்
பயன்மரத்தை ஊக்குவித்தான்!

தாய்நிலத்தில் தன்நிறைவாய்ப்
பல்மரத்தை நாட்டுவித்தான்
தன்வாழ்வில் துணையுமின்றித்
தனிமரமாய்த் தனித்துநின்றான்!.

தமிழ்விந்தில் பிறந்தவர்க்குத்
தமிழ்ப்பெயரைச் சூட்டு என்றான்
தமிழிச்சி பால்குடித்தால்
தமிழ்பேசிப் பழகென்றான்!.

தமிழர் நாம் அறிந்திருக்காத்
தமிழ்ச் சொற்கள் காட்டுவித்தான்
தமிழ்மொழியில் பிறமொழியின்
கலப்படத்தை நீக்குவித்தான்!.

நிதித்துறையில் ஓய்வுபெற்றே
படைத்துறையில் பணியை ஏற்றான்
தனித்துவமாய் படைத்துறையில்
செயலரெனச் சேவையிட்டான்!.

தமிழையேந்தித் தாய்நிலத்தில்
தனிப்பெருமை நாட்டி நின்றான்
தமிழுக்காக வாழ்ந்து இன்று
தமிழ்வரலாறாகி வீழ்ந்தான்!.
               - நன்றி -
        வன்னியூர்- வரன்
              10/03/2019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.