Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து இலங்கை பதிலளிக்கவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
March 19, 2019

reply-all.png?resize=720%2C451

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடுபற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற் அறிக்கை ஒன்றின் ஊடாக கருத்து தெரிவித்திருந்தார்  இவை தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உயர்ஸ்தானிகர் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி, இலங்கை பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வெளியுறவுச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்ற ஜென்ரல் ஏநெறின்புள்ளே ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைபற்றி பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் பேரவையில் தீர்மானம் சமர்ப்பித்திருந்த நிலையில் குறித்த விடயங்களை அமுலாக்குவதற்கு இரண்டு வருடகால அவகாசம் கோரும் யோசனையை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்போவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2019/116395/

  • கருத்துக்கள உறவுகள்

 ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அறிக்கைக்கு நாளை இலங்கை பதில்

 

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அறிக்கைக்கு நாளை இலங்கை பதில்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை பற்றி இலங்கை அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. 

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடுபற்றி உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற், அறிக்கையின் ஊடாக பிரஸ்தாபித்திருந்தார். 

இந்த மூன்று துறைகளிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உயர்ஸ்தானிகர் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி, இலங்கை பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வெளியுறவுச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்ற ஜென்ரல் ஏநெறின்புள்ளே ஆகியோர் ஜெனீவா சென்றிருக்கின்றார்கள். 

அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைபற்றி பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் பேரவையில் தீர்மானம் சமர்ப்பித்திருந்தன. இதற்கு அமைய குறித்த விடயங்களை அமுலாக்குவதற்கு இரண்டு வருடகால அவகாசம் கோரும் யோசனையை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்போவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகிறது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.