Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்பகுதி மீனவர்களால், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதி மீனவர்களால், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை….

April 8, 2019

vadamarachi-fisharis.jpg?resize=800%2C45

முல்லைத்தீவில் தங்கி இருந்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்பவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டு சேதமாக்க படுவதனால் தமது வாழ்வாதராம் கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவில் தங்கி நின்று கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமது தொழிலுக்காக நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த மீனவர்கள் முல்லைத்தீவில் இருந்த காங்கேசன்துறையை அண்டிய யாழ்.குடா கடல் பகுதிக்கு வந்தே கடலட்டை பிடிக்கும் தொழில் செய்கின்றனர். அவர்கள் தாங்கள் தங்கியுள்ள பகுதியில் இருந்து தொழில் செய்யும் பகுதிக்கு சென்று வரும் போது , வடமராட்சி கிழக்கு கடலில் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதமாக்குவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,

தென்னிலங்கை மீனவர்கள் , நாங்கள் தொழில் செய்யும் கடற்பரப்பில் தாறுமாறாக தமது படகுகளை செலுத்தி எமது வலைகளை சேதமாக்கு கின்றார்கள். அதனால் ஒவ்வொரு தொழிலாளிகளினதும், முரல் வலைகள் உட்பட வலைகள் 5 தொடக்கம் 10 வெட்டுக்கள் தினமும் விழுகின்றன.

இவ்வாறாக தினமும் தொடர்ந்து வலைகள் சேதமாக்கப்பட்டால் நாம் தொழிலை முழுமையாக கைவிட வேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே எமது வாழ்வாதாரத்தை பெருக்கவும் , தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கையை உரிய தரப்பினர் எடுக்க வேண்டும்.

கடலட்டை தொழில் செய்வோர் , அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்திலையே தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும் இல்லை எனில் வடக்கில் இருந்து கடலட்டை தொழில் செய்யும் தென்னிலங்கை மீனவர்களின் அனுமதிகளை இரத்து செய்து அவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழில் செய்வதற்கு கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் அனுமதிகள் வழங்கப்பட்டு உள்ளமையால் , அந்த விடயத்தில் தம்மால் தலையிட முடியாத நிலை காணப்படுவதாக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைகள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/117847/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.