Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா?

போதைப்பொருள், ஆள்கடத்தல் ஒழிப்பு தொடர்பாக புதிய திட்டத்திற்கு இந்திய -இலங்கை இணக்கம்

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியா வழங்கும் பயிற்சிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது, இந்திய பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போதைப்பொருள், ஆள்கடத்தல் ஒழிப்பு தொடர்பாக புதிய திட்டத்திற்கு இந்திய -இலங்கை இணக்கம்

இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக இந்திய பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரண்டு நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சத்து ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-47855281

எப்போ இருந்து போதை பொருள் போதை மருந்தானது?!

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு மரணதண்டனை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின்  அதிரடி அறிவிப்பால் இந்திய ரோ உளவுப்பிரிவு உட்பட இந்திய அரசு கிலிகொண்டுள்ளது.

இதனால்  இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு அனுப்பப்படும் போதைவஸ்து  விற்பனையில் கிடைக்கும் வருமானம் பெரும்பகுதி முடக்கப்படும் ஆபத்து உள்ளது.  

இலங்கைக்கு போதைவஸ்தை வினியோகித்துவரும் வர்த்தகப் பெரும்புள்ளிகளின் தலையீட்டினால் இலங்கை ஜனாதிபதியுடன் மரணதண்டனை தவிர்ந்த மாற்றுத்திட்டங்கள் பற்றி  உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. 

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.