Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்குண்டு தாக்குதலின் எதிரொலி – அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கை வருகை!

Featured Replies

America.jpg

இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளுக்கு உதவ அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக  பாதுகாப்பு துறை செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ என அழைக்கப்படும் சமஸ்டி விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் விசாரணைகளுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்துலக காவல் துறையினர் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/

  • தொடங்கியவர்

இலங்கையின் பக்கம் கவனத்தை திருப்பும் அமெரிக்கா? இனி நடக்கப்போவது என்ன?

இலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவனமெடுத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி உரையாடியுள்ளார்.

பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்க என்றும் அமெரிக்கா உதவும் என அவர் உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றைய தினம் திட்டமிட்ட வகையில் பல்வேறு தேவாலயலங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முழுமையான ஆதரவினை வழங்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/118359

  • தொடங்கியவர்

இலங்கை குண்டு வெடிப்பு: புலனாய்வில் உதவ குழுவை அனுப்புகிறது இன்டர்போல்

தொடர் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் டீம்' என்ற குழுவை அனுப்புவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் என்கிறது இன்டர்போல் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு.

 

The #INTERPOL Incident Response Team being deployed to #SriLanka includes specialists with expertise in crime scene examination, explosives, counter-#terrorism, disaster victim identification and analysis. pic.twitter.com/sqfG5gLVEg

— INTERPOL (@INTERPOL_HQ) 22 ஏப்ரல், 2019

"தேவைப்பட்டால் டிஜிட்டல் தடயவியல், பயோமெட்ரிக்ஸ் ஆகியவற்றில் கூடுதல் நிபுணர்கள் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆய்வு செய்யும் நபர்களையும் அனுப்புவோம்" என்றும் இன்டர்போல் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.

இவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48008883

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.