Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை குண்டுவெடிப்பு:புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் பயிற்சி பெற்ற 160 தற்கொலை கொலையாளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு:புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் பயிற்சி பெற்ற 160 தற்கொலை கொலையாளிகள் …செய்தி தொகுப்பு…!!!

1-3.jpg

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (25) சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.இம் மாநாடு காலை 10 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குவதாகவும், குறித்த தாக்குதல்களில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.அவர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியின் மூலம் உரையாடும் போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கை எதனையும் அமெரிக்கா முன்கூட்டியே வழங்கியிருக்கவில்லை என ,இலங்கைக்கான அமரிக்கத்தூதுவர் Alaina teplitzCNN தொலைக்காட்சி செய்திக்கு கூறியுள்ளார்.அமெரிக்கா மற்றும் இந்தியா முன்கூட்டியே தாக்குதல் குறித்து எச்சரித்திருந்ததாக அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா கூறி இருந்ததாக செய்திகள் வெளியானது தொடர்பாகவே மேற்படி தூதுவர் கூறியுள்ளார்.

இதே போன்று- நியூசிலாந்து மசூதிகள் தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றதாக அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா தெரிவித்ததை மறுதலிப்தாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Andern அவர்களின் செய்தி அமைந்துள்ளது.
தமது புலனாய்வுத்துறை இவ்விதம் தவல்கள் எதையும் முன்கூட்டியே பெற்றிருக்கவில்லை, தற்பொழுது கருதவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அமைச்சரின் கருத்து குறித்து,பாதுகாப்புத்துறைசார் வல்லுனர்களும், நியூசிலாந்து தாக்குதல்களுக்கும்,இலங்கைத்தாக்குதல்களிற்குமிடையில் மிக குறுகிய கால இடைவெளியே இருப்பதனால்,அவ்வளவு விரைவாக
இலங்கையிலான தாக்குதல்கள் திட்டமிட்டருக்கப்பட்டிருக்க முடியாது என சுட்டிக்காட்டி உள்ளனர்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இலங்கை மற்றும் ஏனைய நாட்டை சேர்ந்தவர்கள் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்த சம்பவத்தினால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் கவலைக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் ஒன்றுக் கூடியிருந்த சிறுவர்கள் உள்ளடங்கிய குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இட்டு அமைப்பு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கும் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தது. தாக்குதலில் வளர்ந்தோரைப் போன்று சிறுவர்களும் காயங்களுக்கு உள்ளாகினர். இவர்கள் தற்பொழுது தமது உயிருக்காக போராடி வருகின்றனர். பல சிறுவர்கள் தந்தை அல்லது தாயை அல்லது பெற்றோரை இழந்துள்ளனர்.இவ்வாறான நிலையில் யுனிசெப் அமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டு அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்று வருகின்றது.

இவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதுடன் அந்த அமைப்பு மேற்கொள்ள உள்ள நிதி உதவிகள் குறித்தும் இவர்களுக்கான தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை. பின்திய தகவல்களின் படி தற்கொலைத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 9 பேரின் உடல்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும்,
இவர்களில் 1 பெண்ணும், வெளிநாட்டில் படித்துப்பட்டம் பெற்றவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் லத்தீப் ஜமீல் முகமது 2006/7 ம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் கல்விகற்றார் . கல்வியை முடிக்காமல் அவுஸ்திரேலியா சென்று,அங்கு படித்து பட்டம் பெற்ற பின் இலங்கை திரும்பியவர் என தெரிய வருகிறது.

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மறு சீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கைதுசெய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

හිටපු හමුදාපති ජෙනරාල් දයා රත්නායක මහතා නව ආරක්ශක ලේකම් ලෙස නම් කෙරෙයි.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Former Army Commander General Daya Ratnayake is appointed as the new Secretary of Defense.

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கின் முன்பாக நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் அதனை கண்டு மக்கள் அச்சப்பட அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிடுவதற்கே இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை, விசேட அதிரடிப் படையினர் இணைந்து வெடிக்கச் செய்ததாகத் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் வரக்காபொல பிரதேசத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்ட வாகனம் இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SGPH – 3779 வகையைச் சேர்ந்த கறுப்பு நிற கெரவன் வேன் கைப்பற்றப்பட்டிருக்கிறது. வரக்காபொல – அங்குவெல்ல மஸ்ஜித் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை சோதனையிடும் போது சந்தேக நபர்களும், வேனும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

144-2646 என்ற இலக்கத்துடன் கூடிய மோட்டார் சைக்கிள்களையும், நான்கு வோக்கிடோக்கி இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளுக்கு அமெரிக்காவின் FBI நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காத்தான்குடி – நாவலடி காயத்ரி அம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த களப்பில் இருந்து உருக் குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

புத்தளம் வனாத்தவில்லு பகுதியிலிருந்த 75 ஏக்கர் காணியில் பயிற்சி பெற்ற தவகீத் ஜமாத்தைச் சேர்ந்த தற்கொலை கொலையாளிகள் 160 பேருடைய விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் பாதுகாப்பு தரப்பிடம் சிக்கியுள்ளது.

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சால் நடத்த ஏற்பாடாகியிருந்த, குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான செயற்றிறன் பரீட்சையும் வைத்திய அதிகாரிகளுக்கான பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரநிலையைக் கருத்திற்கொண்டே, இந்தமாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த குறித்த இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படும் திகதி பின்னர்அறிவிக்கப்படுமென, சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.

போலீசாரால் தேடப்பட்டு வந்த இரு வாகனங்களும் வறக்காபொலயிலிருந்து அதிரடிப்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.வத்தளை பகுதியில் வசித்த தற்கொலைதாரி ஒருவர் மனம் மாறி தப்பி ஓடிய போதும் கண்டியில் வைத்து கைதாகியுள்ளார்.

வீசா இல்லாமல் இலங்கைக்கு வருகைதந்த எகிப்து நாட்டுப் பிரஜையொருவர் மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (24) காலை குறித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் நான்கு வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கு வந்துள்ளதாகவும், எனினும் அவரிடமிருந்து கடவுச்சீட்டு, வீசா ஆகிய ஆவணங்களேதும் இல்லையெனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நபர், குறித்த பகுதியில் அமைந்துள்ள அராபி பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருவதாகப் பொலிஸாரிடம் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, அடுத்த விமானத்திலேயே வெளியேறி செல்வதாகவும் கட்டுநாயக்க விமானநிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள விசா வழங்கும் நிலையங்கள் பல மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான விசா வழங்கலை முன்னெடுத்துவரும் ஐ.வி.எஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு விசா வழங்கலை முன்னெடுத்துவரும் வீ. எப்.எஸ் குலோபல் நிலையம் என்பன இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

அத்துடன், மலேசியா, தாய்லாந்து, சீன தூதகர அலுவலகத்துக்கு இணையான விசா சேவை நிலையங்கள் என்பனவும், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.

http://www.tibworld.com/2019/04/25/1VP5LVlD/?fbclid=IwAR3FCOoUfCauis5N5JVw00JN8kipd7QuDZbqRUk3LvqQxJ-pM2QoUTNu_nk

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கைக்குள் 130 - 140 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள்'

26.04.2019 மு.ப 10.30

படைத்தரப்புப் புலனாய்வுத்துறையை, தற்போதைய அரசாங்கம் பலவீனமாக்கியுள்ளது என்றும் அதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும், இவ்வாறான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டார்.  

ஊடகப் பிரதானிகளுடனான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில், இன்று (26) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சுக்கான புதிய செயலாளரை, விரைவில் நியமிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து, பூஜித் ஜயசுந்தர, இன்றைய தினம் பதவி விலகுவார் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி, அவர்களை நாம் பாதுகாக்க வேண்டுமென்றும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்பேற்ற வேண்டுமென்றும் கூறினார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் காரணங்காட்டி, வெளிநாட்டுப் படையினர் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பளிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, ஆனால், தந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு, வெளிநாடுகளின் உதவிகள் பெறப்படுமென்றும் கூறினார்.

நட்பு நாடொன்று, இந்தத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வழங்கி, தாக்குதல் எவ்வாறு நடக்குமெனக் கூறினாலும், அது தொடர்பான தகவல்கள் வெ ளிவரவில்லை என்றும் பொறுப்பைத் தட்டிக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் ஐ.எஸ் அமைப்புக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி சூளுரைத்தார்.

புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இலங்கையில் சுமார் 130 -140 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாமெனச் சந்தேகிப்பதாகவும் அவர்களைக் கைது செய்து, அந்த இயக்கத்தை முற்றாக ஒழிப்பதாகவும் கூறிய ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம், தௌஹீத் ஜமாஅத்தைத் தடைசெய்யக்கூடிய வரையறைகள், இல்லையென்றும் இதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுமென்றும் கூறினார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

26.04.2019 மு.ப 10.15

நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, இன்று வௌ்ளிக்கிழமை (26) இடம்பெறும் ஜும்ஆ தொழுகையை இடைநிறுத்துவதற்கு, முஸ்லிம் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

25.04.2019 மு.ப 07.45

உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களெனக் கருதப்படும் “குப்பு” பள்ளி மற்றும் “அவுலியா” மஸ்ஜித்துகள் மீது, மத அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதல்களை நடத்தப்படலாமென, பாதுகாப்புத் தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புகள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய பள்ளிவாசல்களை இலக்கு வைத்து, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு திட்டமிட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று வெள்ளிக்கிழமை புனித ஜும்ஆ தினத்தன்று, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்றுகூடும் வேளையில், பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, குப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்காக உள்ளதாகத் தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால், பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.

குப்பு அல்லது அவிலியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி, பொலிஸ் மா அதிபரின் அலுவலகப் பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்த தகவல்களின் பிரகாரம், விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக, பொலிஸ் தலமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

http://www.tamilmirror.lk/topnews/232129/இலங்கைக்குள்-130-140-வரையான-ஐ-எஸ்-தீவிரவாதிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.