Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரிடம் விருதுபெற்றவரே தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரிடம் விருதுபெற்றவரே தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர்

 

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் 359 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

12602894-6950613-Burials_for_the_dead_be

அந்தவகையில் கொழும்பு, நீர்க்கொழும்பு, உட்பட இலங்கையின் பிரபல்யமான ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

12542062-6950613-A_view_of_St_Sebastian_

பிரதான தற்கொலைத் தாக்குதல்களில் இலங்கையிலுள்ள பிரபல்யமான வர்த்தகரின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளமை எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியுள்ளது.

12661120-6955605-Inshaf_Ibrahim_pictured

12661104-6955605-His_brother_Ilham_Ibrah

எட்டு இடங்களில் நடந்தேறிய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் தற்கொலைதாரிகளாக ஒரு பெண் உட்பட 7 ஆண்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்ஷாப் மற்றும் இல்ஹாம் என்ற இரு சகோதரர்கள் கொழும்பு சினமன் ஹோட்டல் மற்றும் சங்கரில்லா ஹோட்டலில் நடந்த தாக்குதலின் முக்கிய தற்கொலைதாரிகளில் பிரதானமானவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.

12631416-6950223-image-a-50_155605147129

இவர்களின் இந்த கொடுரமான தாக்குதல்கள் கிறிஸ்தவ ஆலங்கள் மீதும் பிரபல்யமான ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்டது.

இதில் 40 க்கும் மேற்பட்ட குழந்தைகளும்  40 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தற்கொலையில் ஈடுபட்டவர்களில் இரு சகோதரர்கள் எனவும் அவர்களின் தந்தையார் பிரபல வர்த்தகரெனவும் தெரியவந்துள்ளது.

தற்கொலைதாக்தலில் ஈபட்ட இரு சகோதர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் குறித்த தற்கொலைதாரிகளில் ஒருவர் தனது தந்தையுடன் வர்த்தகவிருதொன்றையும் பெற்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.

12668474-6955605-image-m-34_155612385585

190425082440-ibrahim-exlarge-169.jpg

இன்ஷாப் இப்ராஹிம், தனது தந்தை யூசுப் மொஹமட் இப்ராஹிமுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் ஏற்றுமதிக்கான விருதை பெற்றுக்கொள்ளும் புகைப்படமொன்று சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அத்துடன் 38 வயதான இன்ஷாப் இப்ராஹிம் தனது மனைவி, 4 பிள்ளைகளுடன் கொழும்பு நகரில் 1.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான வீட்டில் வசித்து வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொலிஸாரின் தேடுதலின் போது, அவர்களுக்கு சொந்தமான தொழிற்சாலையொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தற்கொலைக்கு பயன்படுத்திய குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

12623260-6955605-The_depot_is_believed_t

தற்போது தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 5 வீடுகள் பொலிஸாரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தெஹிவளை ,பாணந்துறை சரிக்காமுல்ல,கொள்ளுப்பிட்டி ,வத்தளை ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் விசாரணைகளின் பொருட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்கொலை தாக்குதல் மேற்மேற்கொண்ட இரு சகோதரர்களின் தந்தையான தெமட்டகொடையில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் மொஹம்மட் யூசுப் இப்ராஹிம், விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களையும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பல பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

D429Q_bWkAAFIgW.jpg

இந்நிலையில், வர்த்தகர் இப்ராஹிமின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/54662

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.