Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தௌஹீத் ஜமாத்துடன் மேலும் சில அமைப்புக்களுக்கும் தடை – நாளை வர்த்தமானி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thowheed-jamath-Banned.jpg

தௌஹீத் ஜமாத்துடன் மேலும் சில அமைப்புக்களுக்கும் தடை – நாளை வர்த்தமானி!

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்பினையும் தடை செய்யும் வர்த்தமானி இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் குறித்த வர்த்தமானி நாளைய தினமே (திங்கட்கிழமை) வெளியாகும் என ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொடவிடம் வர்த்தமானிக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி செயலகம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் நாளைய தினம் வர்த்தமானி வெளியிடுவதற்கு தீர்மானம் எடுத்ததாகவும் செனவிரத்ன கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளார் என்றும் ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அமைப்புடன் வேறு சில அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் என புலனாய்வுதுறையினர் தெரிவித்தமையால், அந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அமைப்புகள் உட்பட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான விசேட அதிகாரத்தின் கீழ் இந்த அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏப்ரல் 27 அன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அத்தோடு இரு அமைப்புகளின் அனைத்து சொத்துகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும் இந்த அமைப்புக்களுடன் வேறு சில அமைப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற நாட்டில் புலனாய்வு பிரிவுகளால் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தௌஹீத்-ஜமாத்துடன்-மேலும்/

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்பினையும் தடை செய்யும் வர்த்தமானி இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இவைக்கு தடையெண்டால் கொழும்பு பெரியபள்ளியில் எப்படி பிறை மீட்டிங் வைப்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை?

அர­சாங்கம் அடுத்­த­வாரம் மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­க­வுள்­ள­தாக, மூத்த அர­சாங்க அதி­காரி ஒருவர் தகவல் வெளி­யிட்­டுள்ளார்.

 

அவ­ச­ர­காலச் சட்ட விதி­மு­றை­களின் கீழ், மேலும் 4 இஸ்­லா­மிய அமைப்­பு­களைத் தடை செய்யும் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவை எனக் கண்­ட­றி­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமி­யத்து மில்­லாது இப்­ராகிம் ஆகிய அமைப்­புகள் கடந்த வாரம் அர­சாங்­கத்­தினால் அவ­ச­ர­காலச் சட்ட விதி­களின் கீழ் தடை செய்­யப்­பட்­டன.

இந்த அமைப்­புகள் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருந்த மேலும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளே அடுத்த வாரம் தடை செய்யப்படவுள்ளன.

http://www.virakesari.lk/article/55368

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.