Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுவெடிப்பின் தாக்கம் – உறவுகளை இழந்தனர் 200 குழந்தைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-12-720x450.jpg

குண்டுவெடிப்பின் தாக்கம் – உறவுகளை இழந்தனர் 200 குழந்தைகள்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாகவும் சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனரென்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டதோடு குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் உளவியல் முதலுதவி தேவைப்படுகிறதென்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேதனையுடன் அவர்கள் புதிய சவால்களை சந்திக்க தயங்குவார்கள் என்பதால், உளவியல் முதலுதவி அளிப்பதன் மூலம், அவர்களின் ஆரம்பகட்ட மன உளைச்சலை தணிக்க முடியும் என்றும் செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், பாதுகாப்பு சோதனையும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/குண்டுவெடிப்பின்-தாக்கம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.