Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொச்சிக்கடை தேவாலய குண்டுதாரியின் இரு சகோதரர்களும் சகோதரியும் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடை தேவாலய குண்டுதாரியின் இரு சகோதரர்களும் சகோதரியும் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் தற்கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய அலா­ஹுதீன் அஹமட் முவாத் எனும் தற்­கொலைக் குண்­டு­தாரி, கிங்ஸ்­பெரி நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் முபாரக் மொஹம்மட் அசாம் பய­ணித்த வாக­னத்தில் சென்­றுள்­ளமை விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 

kochikade_1.jpg

குறித்த வேனே கொச்­சிக்­கடை தேவா­ல­யத்­துக்கு அருகில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த போது பாது­காப்பு தரப்­பி­னரால் பின்னர் வெடிக்­க­வைக்­கப்­பட்­ட­தா­கவும் கொழும்பு பிர­தான  நீதி­வா­னுக்கு நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.  

இது தொடர்பில் சி.ஐ.டி.யின் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுக்கும் விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்படுத்தப்பட்ட­தாக  நேற்று கொழும்பு பிர­தான நீதிவான்   லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 இந்த விடயம் தொடர்பில் தற்­போது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 ஆம் அத்­தி­யா­யத்தின் ஈ,உ, 3 ஆம் அத்­தி­யாயம் தண்­டனை சட்டக் கோவையின் 296,300,315,317,408 ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழும் 1996 ஆம் ஆண்டின் அபா­ய­க­ர­மான ஆயு­தங்கள் சட்­டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் குற்றம் ஒன்றை புரிந்­துள்­ள­தாக கருதி விசார­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. 

அத்­துடன் 2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஆகி­ய­வற்றின் ஊடாக திருத்­தப்­பட்ட 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவா­தி­க­ளுக்கு நிதி உதவி அளிப்­பதை தடை­செய்யும் இணக்கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் விசாரணைகள் இடம்­பெ­று­கின்­றன.

கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் தற்­கொலை தாக்­கு­தலை நடாத்­திய குண்­டு­தா­ரியின் சகோ­த­ரர்கள் இருவர் மற்றும் சகோ­தரி ஒரு­வரைக் கைது செய்து விசா­ரித்­து­வ­ரு­வ­தாக சி.ஐ.டி. நேற்று நீதி­வா­னுக்கு தெரி­வித்­தது. 

இதே­வேளை, கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடத்­திய அலாவுதீன் அஹமட் முவாத்தின்  சகோ­த­ரர்­க­ளான அலா­வுதீன் அஹமட் முஸ்கின், அலா­ஹுதீன் அஹமட் முஸ்தாக் மற்றும் அவர்­களின் சகோ­த­ரி­யான பாத்­திமா சுமையா அலா­ஹுதீன் ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவினர் மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இவர்­களை எதிர்­வரும் 23 ஆம் திகதி கண்­கா­ணிப்பின் நிமித்தம் மன்றில் ஆஜ­ராக்­கு­மாறும் கொழும்பு பிர­தான  நீதவான் லங்கா ஜயரத்ன சி.ஐ.டி.க்கு உத்­த­ர­விட்­டுள்ளார். மட்­டக்­குளி பகு­தியில் வைத்து அவர்­களைக் கைது செய்­த­தா­கவும், பாது­காப்பு செயலாளரிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தடுப்­புக்­காவல் உத்தரவிற்கு அமைய, சந்­தேக நபர்­களைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் விசாரணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றப்புலனாய்வுத் திணைக்­க­ளத்­தினர் நீதி­வா­னுக்கு தெரிவித்தனர்.

குறித்த மூன்று சந்­தே­க­ந­பர்­களும் இந்த தாக்­கு­த­லுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­க­ளூ­டாக கண்டறியப்பட்டுள்ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேவா­ல­யத்தில் தற்­கொலை தாக்­கு­தலை நடாத்­திய குண்­டு­தாரி,  கிங்ஸ்­பரி ஹோட்டல் தாக்­கு­தல்­தா­ரிக்கு சொந்­த­மான குறித்த வாகனத்தை தேவா­ல­யத்­திற்கு 75 மீட்டர் தொலைவில் நிறுத்தவிட்டு  தேவா­ல­யத்­திற்குள் சென்­றுள்­ளமை சி.சி.டி.வி.   காணொ­ளி­க­ளூ­டாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றப்புலனாய்வுப் பிரி­வினர்  குறிப்­பிட்­டனர். 

அத்­துடன் ,செய­லி­ழக்கச் செய்ய முடி­யா­த­வாறு தயாரிக்கப்பட்டிருந்த குண்டு வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னத்தை பாது­காப்புத் தரப்­பினர் வெடிக்கச் செய்­த­தா­கவும் அவர்கள் சுட்டிக்காட்­டினர். 

அதன்­படி அந்த  வாக­னத்தின் பாகங்­களை அரச இர­சா­யனப் பகுப்பாய்­விற்கு உட்­ப­டுத்தி அறிக்கை ஒன்றைப் பெறு­மாறு பிரதான  நீதவான் லங்கா ஜயரத்ன சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

 தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தற்கொலை குண்டுதாரியை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55646

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.