Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக வளாக முன்றலில்- மாணவர்கள் பெரும் போராட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

IMG_7832.jpg?zoom=1.1024999499320984&resIMG_7837.jpg?zoom=1.1024999499320984&resIMG_7838.jpg?zoom=1.1024999499320984&resIMG_7841.jpg?zoom=1.1024999499320984&resIMG_7824.jpg?zoom=1.1024999499320984&resIMG_7828.jpg?zoom=1.1024999499320984&resIMG_7829.jpg?zoom=1.1024999499320984&res

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டி சாலையில் திலீபனின் படம் ஒட்டப்பட்டிருந்தது.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். சிற்றுண்டி சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார்.

மூவரும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://newuthayan.com/story/10/பல்கலைக்கழக-வளாக-முன்றலி.html

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு நாளையதினம் பிணை?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் ஒன்றை மீளப் பெற்றுக்கொண்டு ஏனைய 3 குற்றச்சாட்டுக்களிலும் மாணவர்களுக்கு நீதவான் நீதிமன்றின் ஊடாக பிணைவழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதனை மாணவர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் சீராய்வுமனுவைத் தாக்கல் செய்த சட்டத்தரணிகளும் உறுதிசெய்தனர்.

மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உபவிதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணைவழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்ட மா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் மாணவர்கள் இருவருக்கும் எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாளை வியாழக்கிழமை மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படும் போது கோப்பாய் பொலிஸார் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உள்ளனர் என அறியமுடிகிறது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை அடுத்தே இந்த முடிவுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் வந்துள்ளது என சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்தார். எனினும் அத்தனை குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதி மாணவர்கள் இருவரையும் விடுவிப்பதே தமது முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாணவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் அணைத்து இந்த வழக்கு கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சமர்ப்பணம் செய்தனர்.

மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. வழக்குத் தாக்கலில் உள்ள தவறுகள் சீர்படுத்தக் கூடியவை என்று வியாக்கியானம் வழங்கி மன்று மாணவர்கள் மீதான பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/120039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.