Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி!

10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலும், மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரினவாத்ததால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் மக்களும் அமைப்புக்களும் இந்த வாரம் முழுவதும் எழுச்சிவாரமாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம் மற்றும் இரத்ததானம், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் என பல நிகழ்வுகளில் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பிரதான நிகழ்வாக இன்று பிரித்தானியாவின் Greenpark இல் இருந்து Westminister நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பிரித்தானியா நேரப்படி மாலை 2 மணிக்கு ஆரம்பித்து 6 மணிவரை நடைபெற்றது

இதில் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுக்காக சர்வதேசத்திடம் நீதி வேண்டி பங்கேற்றிருந்தனர்.

Mulluvaikkal-Remembarance-in-UK-1.jpeg

 

http://athavannews.com/சர்வதேசத்திடம்-நீதிவேண்/

 

 

  • 2 weeks later...

இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"பிரபாகரன் நடத்திய நிர்வாகம்"

 

இலங்கை அரசுப்படைகளுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போரின்போதோ அல்லது போர் முடிவுற்ற பிறகோ, உயிர் பிழைத்துக் கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகவும், பணிவாய்ப்பு மற்றும் கல்விக்காகவும் புலம்பெயர்ந்தனர்.

இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் தகவல் நடுவம்' என்ற அமைப்பின் உறுப்பினரான ரோஷிணியிடம் பேசினோம்.

"இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருந்தோம்.

தமிழர்களின் இன்பம் மற்றும் துன்பகரமான நிகழ்வுகளின்போது தவறாது இடம்பெற்ற இசைக்கருவியான 'பறை'யின் அருமை, பெருமைகளை இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தியதுடன், பயிற்சி பட்டறையையும் நடத்தினோம்.

குறிப்பாக, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் விளக்கியிருந்தோம்" என்று ரோஷிணி மேலும் கூறினார்.

இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறுகிறார் அந்த அமைப்பை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ஆரதி ராஜாந்த்.

"மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

முள்ளிவாய்க்கால் நினைவலைகள்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின.

"போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்று கூறுகிறார் ரோஷிணி.

https://www.bbc.com/tamil/global-48410310

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.