Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்

May 23, 2019

suren-raghavan.jpg?resize=800%2C450வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தி திட்ட்ங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து பயணிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிடுள்ளார்.  யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  குறிப்பாக வடக்கில் நீர்ப்பிரச்சனை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்ச்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திடடமிடப்படுகிறது.

எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த திடடம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்பவாதிகளில் ஒருவர் கூட தன்னுடன் இது தொடர்பாக பேசவில்லை.

“மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனில் அக்கறை இன்ரி செயற்படுகின்றனர். தான் அரசியல்வாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திடடம் தொடர்பில் தன்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டள்ளார்.

இதேபோல, “அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் விடுதலைக்காக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்திரனாரும் இன்றுவரை ஓர் நன்றி என்ற வார்த்தை கூட தனக்கு சொல்லவில்லை.

நாட்டில் ஏற்படட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தது அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தமக்கு இதுவரை 4 மொடடைக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்படட இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொடடைக் கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார். #வடமாகாணஆளுநர் #சுரேன்ராகவன் #அபிவிருத்தி

 

http://globaltamilnews.net/2019/122484/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா உளப்பூர்வமா மக்களுக்காக பணி செய்பவர்கள் நன்றியை எதிர்பார்க்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது

அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.