Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைல் நதியிலிருந்து 40 பேரின் சடலங்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நைல் நதியிலிருந்து 40 பேரின் சடலங்கள் மீட்பு

சூடானின் நைல் நதிக் கரையிலிருந்து சுமார் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Locals block a street to stop military vehicles entering their neighborhood in Khartoum on June 4.

சூடான் நாட்டு தலைநகர் கார்டோமை ஊடறுத்து செல்லும் நைல் நதியிலிருந்தே குறித்த 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவை கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களில்  பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்களுள் 60 பேர் வரை கொல்லபட்டிருக்கலாம் என்றும் தற்போது 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சூடான் மத்திய வைத்திய குழு the Central Committee of Sudan Doctors (CCSD) தெரிவித்துள்ளது

 இந்நிலையில் துணை இராணுவக் குழு Rapid Support Forces (RSF) ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக வைத்திய குழுவிடம் தெரிவித்துள்ளது.

Sudanese protesters close Street 60 with burning tyres and pavers as military forces tried to disperse a sit-in outside Khartoum's army headquarters on June 3, 2019. (AFP Photo)

இதையடுத்து குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஆளும் இராணுவ சபை தெரிவித்துள்ளது.

சூடானில் சிவில் ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற நிலையில், அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/57626

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு எதிரான போராட்டம்; 46 பேர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்ளும் சூடான் அரசு

 
சூடான்படத்தின் காப்புரிமை சூடான்

சூடானில் மக்களின் போராட்டங்களின்போது சூடான் ராணுவம் குறைந்தது நூறு பேரை கொன்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தவறானது என மறுத்த ஒரு சூடான் அதிகாரி, அதிகபட்சம் 46 பேர் போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர் என ஒப்புக்கொண்டார்.

புதன்கிழமையன்று ராணுவத்துக்கு எதிராக போராடியவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் குழு, சூடான் தலைநகர் கர்டூமில் குறைந்தது நூறு பேர் கொலை செய்யப்பட்டனர் எனக் கூறியது.

தலைநகரில் நைல் நதியில் இருந்து 40 சடலங்கள் கடந்த செவ்வாயன்று மீட்கப்பட்டன.

ஆரம்பத்தில் இவ்விவகாரம் குறித்து அதிகாரிகள் அமைதி காத்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 46 என சுகாதார துறை அமைச்சக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமையன்று கூறியுள்ளார்.

சூடானின் போராட்டக்காரர்கள் நாட்டின் ராணுவ கவுன்சிலோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துப்பட்ட நிலையில் ராணுவ கவுன்சிலோடு பேச்சுவார்த்தை என்பது நம்பக்கூடாத ஒன்று எனத் தெரிவித்திருக்கின்றனர்.

சூடான் தலைநகரில் அச்சத்துடன் வாழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

Sudan Demonstratorsபடத்தின் காப்புரிமை AFP

வன்முறையை அடக்கவே நடவடிக்கை எடுத்ததாக ராணுவ கவுன்சிலின் துணைத் தலைவர் கூறியுள்ளார். மேலும் போராட்டக்காரர்களிடையே வன்முறை சக்திகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான போதை மருந்து விற்பவர்கள் கலந்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைக்கு காரணமென்ன?

சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலம் மூன்று ஆண்டுகள் என ராணுவம் அறிவித்தது.

ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன. ராணுவத்தின் தலைமையகம் முன்பு போராட்டக்காரர்கள் அமர்ந்தனர். மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் ராணுவ கவுன்சிலோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மூன்று வருடத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

Omar al-Bashirபடத்தின் காப்புரிமை AFP Image caption ஒமர் அல்-பஷீர்

ஆனால் கடந்த திங்களன்று இந்த சதுக்கத்தில் ஆயுதமற்ற போராட்டங்கள் மீது பாதுகாப்பு படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின.

ராணுவ கவுன்சிலின் தலைவர் ஜெனெரல் அப்டெல் ஃபத்தா அல்-புர்ஹான் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது மட்டுமின்றி ஒன்பது மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

இருப்பினும் புதன்கிழமையன்று எந்தவித நிர்ப்பந்தமுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என ஜெனெரல் புர்ஹான் அறிவித்தார். இதை போராட்டக்குழு நிராகரித்தது.

சூடான் மக்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என பஷீருக்கு எதிராக போராட்டங்களை தலைமையேற்று நடத்திய ஸ்பா எனும் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அம்ஜத் ஃபரீத் தெரிவித்தார்.

''இந்த இடைக்கால ஆட்சி நடத்தும் ராணுவ கவுன்சில் மக்களை கொல்கிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மக்கள் தயாராக இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

''நாங்கள் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுப்போம்'' என புதனன்று ராணுவ கவுன்சிலின் துணைத்தலைவர் முஹம்மது ஹமதான் தெரிவித்தார்.

வன்முறைபடத்தின் காப்புரிமை Getty Images

கர்டூமிலிருந்து வரும் பல்வேறுசெய்திகளும் அங்கே துணை ராணுவ படைகள் வீதிகளில் ரோந்து சென்று குடிமக்களை குறி வைத்துத் தாக்குவதாக கூறுகின்றன.

ஆர்.எஸ்.எஃப் எனும் இந்த துணை ராணுவப்படை ஏற்கனவே 2003-ல் மேற்கு சூடானில் டர்ஃபர் பிரச்சனையில் கொடூரமான அட்டூழியங்களை நிகழ்த்தியதற்காக அவப்பெயரை சம்பாதித்திருந்தது.

அங்கு வசிக்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சூடான் மருத்துவர்களின் மத்திய குழு ஒன்று நைல் நதியிலிருந்து வெள்ளிக்கிழமையன்று 40 சடலங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அக்குழுவின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், மருத்துவமனைகளில் நேரில் பார்த்து உறுதி செய்ததன் அடிப்படையில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது நூறு பேர் என்றனர்.

ஒரு முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தனக்கு தகவல் தெரிவித்திருப்பதாக சேனல்-4 ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் ட்விட்டரில் ஒரு குறிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பலர் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்; பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

''இது நிச்சயம் ஒரு படுகொலை'' என ஒருவர் தெரிவித்தார்.

Sudanபடத்தின் காப்புரிமை Reuters

''நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில் நாங்கள் பாதுகாப்பு படைகளால் கொல்லப்படக்கூடும் என பயத்தில் இருக்கிறோம்,'' என ஒரு கர்ட்டூம்வாசி தெரிவித்துள்ளார். மேலும் பெயர் குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மற்றொருவர், ''ஆர்எஸ்எஃ ப் குழு எனது காரில் இருந்து என்னை இழுத்து தலையிலும் உடலின் பின்பகுதியிலும் கடுமையாக அடித்தது'' என்கிறார்.

ஆர்.எஸ்.எஃப் குழு மக்கள் சிகிச்சை பெறுவதை தடுக்கும் வகையில் தலைநகரில் மருத்துவமனைகளை மூடி வருவதாக மருந்தாளுனர் தெரிவித்துள்ளார்.

சுலைமா என்ற பெண் பிபிசியிடம் பேசியபோது துணை ராணுவ படை கர்டூம் முழுவதும் நிறைந்திருப்பதாக தெரிவித்தார்.

''அவர்கள் முழுமையாக நிறைந்திருக்கிறார்கள். மக்களை மிரட்டுகிறார்கள். ஆயுதங்களை பிரயோகிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு படை மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம்'' என்றார்.

சூடானின் இரண்டாவது பெரிய நகரான கர்டூமிலிருந்து நைல் நதி குறுக்கே அமைந்திருக்கும் ஓம்டர்மென் நகர வீதிகளில் கடும் ஆயுதம் ஏந்தியிருக்கும் படைகள் பெரிய அளவில் நிறைந்திருக்கின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/global-48539570

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.