Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் இடமாற்றங்களில் மோசடி? தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஆபத்து!

Featured Replies

2016 ம் ஆண்டு 12 ம் இலக்க தகவல்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமைகளுக்கான சட்டத்திற்கு சவால் விடும் வகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிர்வாகம் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு தகவல் வழங்க மறுப்பு தெரிவிக்கும் அதிகாரிகள் தகவல் பெற விண்ணப்பித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள நான்கு முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகள் தவிர்ந்த ஏனைய தமிழ் பிரதேச செயலகங்களில் உள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் அன்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முஸ்லீம் பிரதேசங்களான கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் மட்டும் இடமாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

குறித்த இடமாற்றத்தில் மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல் வாதிகளின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இன்நிலையில் அது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முயன்ற சிலருக்கு தகவல்களை வழங்க மாவட்ட செயலகம் மறுத்துள்ளதுடன் இது குறித்து மேல் முறையீடு செய்த இளைஞர் ஒருவரின் விண்ணப்பங்களில் உள்ள கையெழுத்தில் வித்தியாசங்கள் இருப்பதாக கூறி அவரை விசாரணைக்கு உட்படுத்தி அச்சுறுத்த முயன்றுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவான நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்ட 2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவல்களைப் பெற்றிக்கொள்ளும் சட்டத்தின் ஊடாக

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலருந்து தகவல்களைக் கோரும் போது பெரும்பாலான விடயங்களில் குறித்த சட்டத்தின் பகுதி II 5(அ) 1 பகுதிக்கு அமைய குறித்த தகவல் நிராகரிக்க படுவதாக பதில் வழங்கும் செயற்பாட்டினையே மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இலங்கை கணக்காய்வு திணைக்களம் தொடக்கம் பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் கூட தங்கள் திணைக்களங்கள் அமைச்சுக்களுக்குரிய தகவல்கள் மற்றும் கணக்காய்வு அறிக்கைகளை கூட இணையத்தளம் ஊடாக பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்டு வரும் வேளையில்

மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிர்வாகம் மாத்திரம் இவ்வாறான ஒரு நிராகரிப்பினை மேற் கொள்வதன் நோக்கம் என்ன என்ற கேள்வி தகவல்களைக் கோரும் நபர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிர்வாக கட்டமைப்பு மாவட்டச் செயலகத்தில் செயற்பட்டுக் கொண்டுவரும் வேளையில் குறித்த சட்டம் சம்பந்தமாக பாமர மக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுக்கு பிரதேச செயலக ரீதியாக தெளிவூட்டல்களை மேற் கொண்டு வருவது எந்த வகையில் பொருத்தமான விடயமாக இருக்கும்

குறித்த சட்டத்தின் பகுதி II 5 அ I ல் கூறப்பட்டுள்ள நிராகரிப்பு விடயங்களுக்கு ஏற்றால் போல் நாட்டின் நீதி கட்டமைப்பு பாதுகாப்பு கட்டமைப்புக்கு பாதிப்பினை ஏற்படும் தகவல்கள் ஏதும் மாவட்டச் செயலகத்தில் நிர்வகிக்கப்படுகின்றதா என்ற அடுத்த கட்ட கேள்வியினை முன்வைக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் உள்ள யாரும் எந்த திணைக்களத்திலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறும் போது.

குறித்த சட்டத்தை குழப்பி தகவல் கோருபவர்களை அச்சுறுத்தலும் வகையில் செயற்படுவதன் நோக்கம் என்ன? இவர் இவர்கள் மாத்திரம்தான் தகவல்களை பெற முடியும் என்ற கட்டுப்பாடுகள் உண்டா? உள்ளிட்ட பல கேள்விகளுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் பெறுவோரை அச்சுறுத்தும் சட்டமாக மாறியுள்ளதா என்று அளவுக்கு போயுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121620

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.