Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றல்

முல்லைத்தீவு பழைய செம்மலை  நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

07.jpeg

இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது. 

இந் நிலையில் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து.கடந்த 05.06.19 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை இப்பகுதியில் முன்னெடுத்துள்ளார்கள். இன்னிலையில் கடந்த 11.06.19 அன்று அமைச்சர் மனோகணேசன் அவர்களும் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

07.jpeg

இந்த இடத்தில் குருகந்த ரஜமகாவிகாரை என பௌத்த துறவியாலும் நீராவியடிப்பிள்ளையார் என கிராம மக்களாலும் பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது. 

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர்பலகைகளில் ஒரு  பெயர்பலகைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டு  அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஒரு பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை.

06.jpeg

மற்றைய இந்த பெயர்பலகை  அந்த இடத்தில் நாட்டுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி தேவை என்ற நிலையில்  (14.06.19) இன்று குறித்த இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமகாவிகாரையின் பெயர் பலகையினையும்,நீராவியடிப்பிள்ளையார் ஆலய ஒரு பெயர்பலகை ஒன்றினையும் அகற்றியுள்ளார்கள்.

05.jpeg

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலிசார்,மற்றும் நீதிமன்ற அதிகாரிகள்,மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்திற்கு குறித்த இரண்டு பதாகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/58285

 

சட்டம்  இன்னும் முழுமையாக சாகடிக்கப்படவில்லை என ஒரு தோற்றம் தரப்பட்டுள்ளது. 

தொடரும் இவ்வாறான அடாவடித்தனத்திற்கு என்ன நிலையான மற்றும் தற்காலிக பதில் என தமிழ் இந்து/சைவ  சமூகம்  தேடல் வேண்டும். 

#1: புலம்பெயர்ந்த மக்களின் இந்து/சைவ அமைப்புக்கள் ஒரு வித விழிப்புணர்வை தங்கள் பக்தியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம் 


#2: தாயக மக்கள் இந்த அடாவடித்தங்களை சட்டரீதியாக சந்திக்க ஒரு  அறக்கட்டளையை உருவாக்கலாம். அதன் மூலம் உள்ளூர் சட்டத்தரணிகள் ஊடக நடவடிக்கை எடுக்கலாம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அனுராதபுரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் !

பழைய செம்மலை நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பஸ்களிலிருந்து சிங்கள மக்கள்  அழைத்துவரப்பட்டட்டுள்ளனர்.

IMG_7505.JPG

பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

IMG_7511.JPG

IMG_7517.JPG

அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகளால் உரையாற்றப்பட்டது . அதாவது இந்த பகுதியில் பிள்ளையார் ஆலய இருந்ததாக  தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது .

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கபட்டுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்கள் பௌத்த பிக்குகளால் போதிக்கப்பட்டுள்ளது .

 

https://www.virakesari.lk/article/58333

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.