Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தை வெல்வது சாத்தியமே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை வெல்வது சாத்தியமே? 

மரணத்தை வெல்வதென்றால் என்ன?

நீங்கள் உங்களுடைய அதே ஆளுமையுடன் அதே உருவத்துடன் சமகால நடப்புகளை எதிர்கொண்டு உரிய முறையில் அவற்றை முகாமைத்துவம் செய்வதுவும் , இதுவரை காலமும் உங்களுக்கு நடந்த , நீங்கள் பங்குபற்றிய  சகல விடயங்களையும் ஞாபகத்தில் வைத்திருந்து ( இது உங்களின் ஆளுமையின் பகுதி என்பதும் கவனிக்கத்தக்கது) செயலாற்றுவது தானே. அவ்வாறாயின் நீங்கள் மரணத்தை வென்று விட்டீர்கள்.  

வேறொன்றுமில்லை       Netflix  இல் நேற்று ஒரு படம் பார்த்தேன் , வெகு நன்றாக எடுத்திருக்கிறார்கள்.  கற்பனை வளத்தின் நேர்த்தியும் நிதர்சனத்துடன் அது ஒத்திசையும் வகையும் மெல்லிய மனித உணர்வுகளின் சங்கமமும் என - நன்றாக இருந்தது.

சுருக்கமாக ….

காதலில் திளைத்து அண்மையில் மணம்முடித்த  இளம் ஜோடி.  பையன் விபத்தொன்றில் இறந்து விடுகிறான்.

இறந்த வீட்டில் அவளது தோழி ஒருத்தி இறந்த பின்பும் கணவனுடன் கதைத்து உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யக் கூடிய அமைப்புகள் இருக்கின்றன - நீ ஏன் அந்த வசதியைப் பாவிக்கக் கூடாது என கேட்கிறாள்.  அந்த அமைப்புக்கு உரிய பணத்தை செலுத்தி  உறுப்பினராகி மொபைல் ஆப் மூலம் இது சாத்தியம் என்கிறாள். இவளோ அதனை சட்டை செய்யவில்லை.

இறுதிக்  கிரியைகளின் பின் இவள் வீட்டில் தனிமையில்.

 மொபைல்  போனில் தகவல் வருகிறது அந்த அமைப்பில் அவள் இப்ப உறுப்பினர் என.  தோழிக்கு போன் செய்து திட்டுகிறாள்,  ஏன் உனக்கு தேவையில்லாத வேலை என.

இவளுக்கு ஒரே வாந்தி , டெஸ்ட் பண்ணிப் பார்த்தால் pregnant.    

கணவனை மனம் தேடுகிறது.

தற்செயலாக மொபைல் இல் இருக்கும் அந்த App இல் புலன் செல்கின்றது அதை எடுத்து log  on  செய்கிறாள்.  அவளது கணவன் தொடர்பான இருக்கக்கூடிய மின்தரவுகள் - அவரது புகைப்படங்கள் , முகநூல் பதிவுகள் , குரல் பதிவுகள் , அவரின் அடையாள அட்டை விபரங்கள் etc  etc - அனைத்தையும் அணுகுவதற்கான அனுமதியை அது கேட்கின்றது , கொடுக்கிறாள்.      

சில நிமிடங்களில் போன் அடிக்கின்றது.  எடுக்கிறாள்.

“ Max  கதைக்கிறேன் Kate , எப்படி இருக்கிறாய்”  - அதே குறும்புக் குரலுடன் அதே ஏற்ற இறக்கங்களுடன் அவளது கணவன் போனில் கதைக்கிறான்.

 

( இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தில் இது 100% சாத்தியமானதொன்று    புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே - அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவதில்லை. நாங்கள் என்னடாவென்றால் பஸ்ஸில் பஸ் நாள் கொண்டாடி   கூண்டோடு விழுந்து தரையிலும் பெற்றோரின் அடிவயிற்றிலும் அடித்துக் கொண்டும்     , இருக்கும் அறிவை நேர் சீராக பாவித்து மற்றவைக்கு உபயோகமாக இருப்பதனை விடுத்து கரடு முரட்டுத் தன்மையில் தோசை மாவு பெண்மணியிடம் வம்புக்கு போயும் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறோம். ) .

 

அவள் சொல்கிறாள் " I am  pregnant "  என்று.  உடனேயும் அவன் வெகு சந்தோசமாக "oh I am going  to be a dad now, how sweet"  என்கிறான் .  Virtual Reality re-creating  real in real time.  

இது படத்தின் அரைப் பகுதி தான் , மிகுதியையும் ஊகித்திருந்திருப்பீர்கள் , ஆம் , அவளுடன் வாழுவதற்கு Max  வருகிறான் – fully capable Max in all its sense.   அவளுடைய உணர்வு சிக்கல்களை நன்றாக எடுத்திருக்கிறார்கள்.

நேற்று துணைவியாருடன் இருந்து இந்த படத்தை பார்த்தேன்.  எது எப்டியென்றாலும் எனக்கு முன்பதாக தான் போய் விட வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.  இப்பவும் அப்படித் தானோ என கேட்டேன்;  , பதில் முந்தின மாதிரி வெகு உசாராகக வரவில்லை.

வருங் காலத்தில் ஆணினத்தின் தேவை இல்லாமல் போய் விடக் கூடியவாறு கூர்ப்பின் வழி அமையும் என ஒரு விஞ்ஞான எதிர்வு கூறல் இருக்கின்றது.  அறிகுறிகள் நன்றாகவே தென்படுகின்றன !!. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.