Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்

Featured Replies

  • தொடங்கியவர்

யாழ் டைகர் வானொலி எப்படி உருவாகியது........?

உலகத்தில் இருக்கும் எல்லா தமிழ் உறவுகளையும் இணைக்கவேண்டும் என்ற அவா என்னிடம் என்று சொல்வதைவிட

நம்மிடம் இருந்தது அதன் ஒரு கன்னி முயற்சி தான் டைகர்வானொலி,இதற்கு எல்லோரினதும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் டைகர்வானொலி உலக வானொலியாக யாழ்களத்தில் உலாவரும்

வானொலியை உருவாக்கும் போது பல சிக்கல்கள் பலரால் உருவாக்கப் பட்டது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....?

சிக்கல் இல்லாட்டி வாழ்கை புளிக்கும்,ஆகவே அவர்கள் எமக்கு தந்த சிக்கல் நம்மை இன்னும் நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தான் தூண்டியது.

ஜம்மு நீங்கள் சொன்னது போல் இன்று வானொலி புதிய தரத்துடனும் பொலிவுடனும் வளர்ந்துள்ளது இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...........?

  • Replies 160
  • Views 16.6k
  • Created
  • Last Reply

ஜம்மு நீங்கள் சொன்னது போல் இன்று வானொலி புதிய தரத்துடனும் பொலிவுடனும் வளர்ந்துள்ளது இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...........?

இதை வார்த்தகளால் சொல்ல முடியவில்லை,இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி படி என்பதில் அது வித மாற்றமும் இல்லை யாழில் நாம் சாதித்துவிட்டோம் எமது அடுத்த இலக்கு இளைஞர்களான நாம் தமீழிழத்திற்கு புரிய போகும் கடமை பற்றி அதனையும் இதை போல் வளர்த்து நாம் முதலிடம் பெற வேண்டும் என்பதே எனதும்,வனவில்லினதும் எங்கள் குடும்பத்தினதும் அவா என்றே கூறலாம்

டைகர் வெள்ளிமாலையில் நேயர்களின் ஆதரவு கூடியதன் காரணமாக இன்று வடிவேல் 007 ஆவர்களின் பேட்டி இடம்பெறவுள்ளது

வணக்கம் வடிவேல் 007 பல புலனாயிவு வேலைக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக மிக்க நன்றிகள்.

*யாழ்களத்தில் உங்கள் அறிமுகத்தை பற்றி எங்கள் நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ,அத்துடன் யாழுக்கு யாரால் அறிமுகமானீங்க அவரை பற்றியும் ஒரு சில வரிகள் சொல்வதோடு,வடிவேல் 007 என்ற பெயரை தெரிவு செய்தன் காரணம் என்னவென்றும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுவீங்களா?

1)நீங்கள் யாழுக்கு வந்த புதியதில் யாழ் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்குது என்று நீங்கள் நினைக்கிறீங்க?உங்கள் புலனாயிவு பணி புதிய யாழில் சிறப்பாக நடந்ததா அல்லது தற்போதைய யாழில் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதையும் எங்களுக்கு அறிய தாருங்கள்?

2)இப்போது அரட்டை பற்றி பல கருத்துகள் அதற்கு என்று பிறம்பாக டொபிக் திறந்து அரட்டையை தவிர்க்க வேண்டும் என்று பலர் அரட்டை அடிப்பதை நீங்கள் பார்த்தீருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

3)யாழில் சிலர் தாங்கள் வில்லங்கத்துக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று கருத்து சொல்லுவார்கள் அவர்களை பற்றி நீங்கள் நினைப்பது ?அவர்களில் சிலர் வேண்டுமென்றே தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லுவார்கள் அவர்கள் பற்றி உங்கள் பார்வையில் அவர்கள் யாழுக்கு தேவைதானா?

4)யாழில் இப்போது முந்தி வந்த பல உறவுகள் இப்போது வருவதில்லை அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?அத்தோடு யாழில் உங்கள் குரு யார்?நெருங்கிய உறவு யார்?

5)யாழில் றோயல் பமிலி என்று ஒரு பமிலி பல அட்டகாசங்களை செய்து கொண்டு யாழை தனது கையில் வைத்து பல சேட்டைகள் செய்தவை அது தற்போது டைகர் பமிலியால் அடக்கபட்டிருக்கிறது இந்த றோயல் பமிலிக்கு நீங்கள் சொல்லவிரும்புவது அத்தோடு தலைமறைவு வாழ்கை நடாத்தும் சின்னாவுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

  • தொடங்கியவர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

Edited by வானவில்

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)இன்னிசை துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

இடைவேளைக்கு பின் மீண்டும் வடிவேலுடன்

6)ஈழத்தில் நீங்கள் பாடசாலை அநுபவங்களை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள்முடியுமா?பாடசாலையில் நீங்கள் தான் முதல் பிள்ளையா?நீங்கள் பள்ளி பருவத்தில் காதல் பற்றி ?அப்பாட்ட வாங்கிய அடி பற்றி எல்லாம் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

7)புலத்தில் இருந்து தற்போது சுவிசில் இருக்கிறீங்க சுவிசில் வந்து இறங்கியவுடன் உங்களுக்கு எப்படி இருந்தது அந்த மொழியில் ஏற்பட்ட சிக்கல்கல் புது வித மனிதர்கள் அவர்களை எல்லாம் எப்படி சமாளித்தீங்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா?

8)இப்போது காதலை பற்றி முதலாம் வகுப்பு மாணவனுக்கும் தெறியும் காதலை பற்றி நீங்க நினைப்பது என்ன?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?நீங்கள் யாரையும் காதலித்தனீங்களா அப்படியாயி அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?

9)சினிமாவில் உங்களுக்கு ஒரு கதாநாயகன் பாத்திரம் கிடைக்குது அசினோட நடிக்க அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் நடிப்பீங்களா அல்லது நடிக்கமாட்டீங்களா?

10)யாழ்களத்தில் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குது?அப்படியாயின் காரணம் என்ன?

11) ஈழத்தில் நீங்கள் அநுபவித்த ஒரு சில இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?உங்களுக்கு தற்போது இருக்கும் நாடு விருப்பமா அல்லது இலங்கையில் வசிப்பது விருப்பமா?

12)பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?பெண்களுக்கு கோபம் கூடுதலாக வருவதை பார்த்திருப்பீர்கள் அதை பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

13)நீங்கள் உங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்தால் என்ன செய்வீங்கள்?குழப்படி எல்லாம் செய்வீங்களா அப்படி செய்து தற்போது யாரிட்டையும் அடி வாங்கின சந்தர்ப்பம் இருக்குதா?

14)யாழில் தற்போது புதிய விதிகள் வந்துள்ளது,உதாரணத்திற்கு செய்தி பிரிவில் எல்லோரும் செய்தி போட முடியவில்லை இது சில உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை இதை பற்றி உங்கள் கருத்து என்ன?மோகண் அண்ணாவுக்கு நீங்க சொல்ல விரும்புவது?

15)யாழில் உங்களின் புலனாயிவுதுறை ஆற்றிய சேவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கு உறுதுணையா இருக்கிற உங்கள் தம்பி வடிவேல் பற்றியும் 008 பற்றியும் சொல்லுங்கோ?

  • தொடங்கியவர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

இவர்கள் பற்றி ஒரு வரியில்

[*]டண்-

[*]நெடுக்ஸ்

[*]மதன்

[*]ரசிகை

[*]ஜன்னி-

[*]பிரியசகி-

[*]வானவில்-

[*]மணிவாசகன்

[*]சித்தன் -

[*]சின்னா

[*]கு.சா-

[*]வடிவேலு-

[*]தூயவன் -

[*]அனிதா-

[*]சின்னா-

[*]இராவணன்

[*]விஷ்ணு

[*]வினித்

[*]நாரதர்

[*]ஜம்மு

1 யாழில் சேர்ந்திருப்பது

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது

3 யாழின் பலம்

4.யாழின் பலவீனம்

5.யாழில் மறக்க முடியாதவர்

6.யாழில் மறக்க கூடியவர்?

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு

Edited by Jamuna

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வடிவேல்007 பேட்டி இன்னும் சற்று வேளையில் மிகவும் சுவாரசியமாக பதில்களை தந்துள்ளார் அவருக்கு மிக்க நன்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் நேயர்கள் எதிர்பாருங்கள்

vadivel1smallmq6.jpg

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வடிவேல் 007 தவிர்க்கமுடியாத காரணங்களால் களத்திற்க்கு வந்து பதிலலிக்கவில்லை இதோ அவர் எமக்கு அஞ்சலில் அனுப்பிய பதில்கள்

ஜம்மு::

வணக்கம் வடிவேல் 007 பல புலனாயிவு வேலைக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக மிக்க நன்றிகள்.

*யாழ்களத்தில் உங்கள் அறிமுகத்தை பற்றி எங்கள் நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ,அத்துடன் யாழுக்கு யாரால் அறிமுகமானீங்க அவரை பற்றியும் ஒரு சில வரிகள் சொல்வதோடு,வடிவேல் 007 என்ற பெயரை தெரிவு செய்தன் காரணம் என்னவென்றும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுவீங்களா?

வடிவேல்007:

யாழ்களத்தில் நான் எப்படி அறிமுகம் ஆனேன் என்பது எனக்கு சத்தியமாக மறந்து போய்விட்டது. அநேகமாக எனது மோப்பா நாய் கூகிள் மூலமாக தான் இருக்க வேண்டும். எதையாவது தேடப்போய் கடசியா யாழ் தளத்தில வந்து விழுந்திருப்பன். கிட்டத்தட்ட ஒரு 5 வருசமா நான் யாழ் களத்தில இருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் வேறு பெயரில் வந்திருக்கின்றேன். எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும். எனவே தான் நான் என்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனது 18ஆவது வயதில் யாழ் களத்தில் கால் பதித்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன்.

வடிவேல் 007, இந்த பெயர் தெரிவு செய்ததிற்கு காரணம் நான் என்னை மற்றவர்களில் இருந்து வேறு படுத்தி பார்க்கவும், ஒரு விறுவிறுப்பான சுறுசுறுப்பான பெயரையும் முக்கியமாக வாழ்க்கையில் என்ன துன்பம் வந்தாலும் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனது பெயரை கேட்டால் மற்றவர்களின் முகத்தில் ஒரு இஞ்சி சிரிப்பு என்றாலும் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வைகைப்புயல் வடிவேல் அவர்களை எனக்கு ஒரு மனிதராக பெரிதாக தெரியாவிட்டாலும் நல்ல நகைச்சுசை நடிகராக அவரை எனக்கு பிடிக்கும். எனவே தான் அவரை தேர்ந்தெடுத்தேன்

ஜம்மு:

1)நீங்கள் யாழுக்கு வந்த புதியதில் யாழ் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்குது என்று நீங்கள் நினைக்கிறீங்க?உங்கள் புலனாயிவு பணி புதிய யாழில் சிறப்பாக நடந்ததா அல்லது தற்போதைய யாழில் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதையும் எங்களுக்கு அறிய தாருங்கள்?

வடிவேல்007:

1. எப்பொழுதுமே முதல் அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாத ஒன்று. முதல் காதல், முதல் முத்தம், முதல்… இப்படி முதல் அனுபவம் என்பது மறக்க முடியாத ஒன்று. எனவே தான் நான் யாழ் களத்திற்கு வந்த புதிதில் இருந்த களமே எனக்கு பிடித்திருந்தது.

ஜம்மு:

2)இப்போது அரட்டை பற்றி பல கருத்துகள் அதற்கு என்று பிறம்பாக டொபிக் திறந்து அரட்டையை தவிர்க்க வேண்டும் என்று பலர் அரட்டை அடிப்பதை நீங்கள் பார்த்தீருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

வடிவேல்007:

2. இதில் என்ன தவறு இருக்கிறது? ஊரில் அங்காங்கே சிரட்டை தேங்காய்க்கு அடிபடுகிறார்கள். இங்கே அரட்டைக்கு அடிபடுகிறார்கள்.

ஜம்மு:

3)யாழில் சிலர் தாங்கள் வில்லங்கத்துக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று கருத்து சொல்லுவார்கள் அவர்களை பற்றி நீங்கள் நினைப்பது ?அவர்களில் சிலர் வேண்டுமென்றே தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லுவார்கள் அவர்கள் பற்றி உங்கள் பார்வையில் அவர்கள் யாழுக்கு தேவைதானா?

வடிவேல்007

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒளிக்க முடியாது என்று ஒரு பாடலே உள்ளது. தீயரை கண்டால் தூர விலகு என்பது போல் இவர்களை கண்டால் விலகி நிற்பது நன்று. இவர்களை யாழ் களத்திலிருந்து விலத்தி வைப்பது தவறு. எமது தலைவரே சொல்லியுள்ளார் எமது தேசியக்கொடியின் கீழ் அணிவகுத்து, எமது சட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டு நடக்கும் எவரையும் நாம் வரவேற்க தயார் என்று. இவர்களின் துரோக்ச் செயல்கள் ஒரு பொழுதும் எமது போராட்டத்தை இல்லாதொளிக்கு முடியாது. இவர்களால் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த தான் முடியும். உலகமே பல்லாண்டு காலத்திற்கு பின் ஒரு ஒற்றுமையான இனத்தை பார்கின்றது என்றால் அது தமிழினம் தான்!! இதற்கு ஆதராம் தான் எம்மை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கும் இன்றைய அரசியல். உன்னைச் சுற்றி முற்றிலும் இடையூகள் உள்ளது என்றால் நீ முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்! நாம் எமது தலைவனின் வழியில் புதுயுகம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றோ

  • தொடங்கியவர்

ஜம்மு

ஈழத்தில் நீங்கள் பாடசாலை அநுபவங்களை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள்முடியுமா?பாடசாலையில் நீங்கள் தான் முதல் பிள்ளையா?நீங்கள் பள்ளி பருவத்தில் காதல் பற்றி ?அப்பாட்ட வாங்கிய அடி பற்றி எல்லாம் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்

புலத்தில் இருந்து தற்போது சுவிசில் இருக்கிறீங்க சுவிசில் வந்து இறங்கியவுடன் உங்களுக்கு எப்படி இருந்தது அந்த மொழியில் ஏற்பட்ட சிக்கல்கல் புது வித மனிதர்கள் அவர்களை எல்லாம் எப்படி சமாளித்தீங்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா

இப்போது காதலை பற்றி முதலாம் வகுப்பு மாணவனுக்கும் தெறியும் காதலை பற்றி நீங்க நினைப்பது என்ன?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?நீங்கள் யாரையும் காதலித்தனீங்களா அப்படியாயி அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா

வடிவேல்007:

ஈழத்தில் எனது பாடசாலை அனுபவங்களை உங்களிற்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையும். ஆனால் நான் அங்கு 3ஆம் ஆண்டு வரையுமே படித்துள்ளேன். இருந்தாலும் ஒரு சில சம்பவங்கள் உள்ளன. அப்பொழுது பாடசாலைகளில் சத்துணவு என்று சின்ன உருண்டையான பிஸ்கற் தருவார்கள். இது ஒருவருக்கு ஒரு கையளவு மட்டுமே தரப்படும். 3-4 பேர் வந்து ஒரு வகுப்பிற்கு தருவார்கள். அவர்கள் மேசையில் கொட்டி விட்டு போவர்கள். ஒரு தடவை ஒருவர் எனது மேசையில் போட்டு விட்டு போனார். நான் அதை உடனே எடுத்து எனது பையினுள் போட்டுவிட்டேன். எனக்கு போட்டவர் தள்ளி போனவுடன் மற்றவர் வந்து எனக்கு இன்னும் தரிவில்லையா என்றார். நானோ முழிச்சுக்கொண்டிருந்தேன். அவர் எனக்கு இன்னுமொரு முறை போட்டார். அப்புறம் என்ன தினமும் இதே விளையாட்டு தான்! மற்றும் நான் ஒட்டப்பந்தயங்களில் அங்கு முதலிடம் வந்ததும் மறக்க முடியாத ஒன்று.

இங்கு புலத்தில் நான் தொழற்கல்வி படிக்கும் கல்லூரியில் நிறைய நகைச்சுவையான விடயங்கள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்னுடன் மொத்தமாக 22 பேர் படித்தார்கள். அதில் என்னுடன் சேர்த்து 6 ஆண்கள் மட்டுமே. நான் போன nஐன்மத்தில் செய்த பாவமோ தெரியவில்லை. என்னுடன் படிக்கும் எந்ந பெண்ணுமே அழகாக இருந்ததில்லை. ஒன்று ஒல்லியாக இருக்கும், மற்றது குண்டாக இருக்கும், மற்றது கொஞ்சம் ஆண் போல் இருக்கும். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

பிரெஞ்ச் மொழியும் எமக்கு ஒரு பாடம். கிழமையில் 4 மணத்தியாலங்கள் எமக்கு அறுவரை நடந்தது. மிகவும் கண்டிப்பான ஒரு ஆசிரியை. 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் ஆண்கள் பற்றி அவரின் எண்ணத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இந்தப்பாடத்தில் 100க்கு 60 எடுப்பதே அனைவருக்கும் கடினமாக இருக்கும். எனவே இறுதிப்பரிட்சை வருவதற்கு முன் இதில் ஒரு 80 என்றாலும் எடுக்க வேண்டும் என்று ஆண்கள் முடிவு செய்தோம். எப்பொழுதுமே ஆசிரியை ஒரு சூட்கேஸ் கொண்டு வருவது வழக்கம். அதற்குள் தான் பரிட்சைப்பேப்பர்கள் எல்லாம் இருக்கும். ஆனால் அந்த சூட்கேஸ் திறப்பு போட்டு திறப்பது அல்ல. அது கோட் நம்பர் கொடுத்து திறப்பது எமக்கு சாதகமாக அமைந்தது. ஆசிரியை அதனை வகுப்பு தொடங்கமுன் திறப்பார். ஆனால் திறந்த பின் கோட் நம்பர் அப்படியே விட்டுவிடுவார். இதுவும் எமக்கு சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் 6 ஆண்களும் மாறி மாறி சந்தேகம் கேட்பது போல் ஆசிரியையிடம் சென்று அவரின் அருகில் உள்ள சூட்கேஸ் நம்பரை பார்ப்போம். இப்படி ஒரு மாதகாலம் எமது ஆராட்சி சென்றது. இறுதியாக இது தான் நம்பராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதில் எமக்கு சாதகமாக பிரெஞ்ச் வகுப்பின் இடையில் எப்பொழுதுமே ஒரு 15 நிமிடம் இடைவேளை விடப்படும். அப்பொழுது ஆசிரியை தனது சூட்கேஸை பூட்டிவிட்டு நம்பரையும் மாத்தி விட்டு சென்று விடுவார். இந்த 15 நிமிடத்தை நாம் பாவதித்தோம். நாம் அட்டாக் பண்ண போவது பெண்களிற்கு தெரியும் ஆனால் அங்கு யாரும் காட்டிக்குடுக்க மாட்டார்கள் (அவர்களிற்கும் பரிட்சைப்பேப்பரில் பங்கு உள்ளது). ஆசிரியர்களின் அலுவலகத்திலிருந்து எமது வகுப்பறை வரை ஆட்களை நிறுத்தி விட்ட பின் ஒருவன் கோட் நம்பறை திறந்து பரிட்சைப்பேப்பறை எடுத்துக் கொண்டு போய் எமது கல்லூரியின் முதலாவது மாடியிலுள்ள காப்பி அடிக்கும் மிசினில் அடித்துவிட்டு மறுபடியும் உண்மையான பரிட்சைப்பேப்பறை அதை சூட்கேஸ் உள் வைத்து பூட்டி விட்டான். அதன் பின் பரிட்சைப்பேப்பர் அனைவரிற்கும் எம்மால் வழங்கப்பட்டது. எமது ஆசிரியை எப்பொழுதுமே பரிட்சைப்பேப்பரின் பதில்களையும் அதனுடனே வைத்திருப்பார். அதனையும் நாம் காப்பி அடித்துக் கொடுத்து சமூக சேவை செய்தோம். ஆனால் யாருமே 90 புள்ளிகளிற்கு மேல் எடுக்க கூடாது என்று முதலே முடிவாக சொல்லி விட்டோம். இதுவரை யாரும் 90 எடுத்ததும் இல்லை. விதி இங்கு தான் விளையாட ஆரம்பித்தது. ஒரு கேள்வியில் „உங்களுடைய கருத்தை எழுதுங்கள் „ என்று வந்தது. நாம் காப்பி அடித்துக்கொடுத்த பேப்பதரில் ஆசிரியை தனது கருத்தையே எழுதியிருந்தார். எங்களில் ஒருத்தி அப்படியே ஆசிரியையின் கருத்தேய எழுதிவிட்டாள். இதை அவளும் கவனிக்கவில்லை. நாம் அடுத்த பரிட்சை சுடுவது பற்றி யோசித்துகொண்டே அடுத்த பிரெஞ்ச வகுப்பிற்கு சென்றோம். ஆசிரியை வழக்கம் போல் உள்ளே வந்தார். சிறிது நேரம் கழித்து ஆசிரியை ஒரு பெண்ணை (அவள் தான் ஆசிரியையின் கருத்தை அப்படியே எழுதியவள்) சற்று தன்னுடன் வெளியே வருமாறு அழைத்தார். தனது கருத்தை ஒரு சொல்லும் மாறாமல் எழுதியது எப்படி என்று அங்க புலன்விசாரனை நடந்தது. சூட்கேஸ் நம்பர் கண்டுபிடித்து இப்படி செய்தது கிறிமினல் குற்றம். உண்மையை சொல்லாவிட்டால் தான் பொலிசாரிடம் புகார் செய்ய வேண்டி வரும் என்று ஆசிரியை மருட்ட அவளும் பயந்து போய் எங்களை காட்டிக்கொடுத்து விட்டாள். விசயம் தலமை ஆசிரியர் வரை சென்றது. எமது கல்லூரி வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நாம் எண்ணியிருந்தோம் ஆனால் இறுதிப் பரிட்சைக்கு 6 மாத காலமே இருப்பதால் எம்மை தொடர்ந்தும் படிக்க விட்டார்கள். எமது ஆசரியை சொன்ன வசனம் எனது வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது „25 வருடமாக நான் இங்கே ஆசிரியையாக கடமை புரிகின்றேன். ஆனால் உங்களை மாதிரி ஒரு வகுப்பை நான் பார்த்ததில்லை „ என்றார். இன்றும் அந்த கல்லூரியில் எனதும், எனது நண்பர்கினதும் பெயர்கள் வரலாற்றில் இன்னும் பைல்களில் வீரகாவியமாக உள்ளன. இதை நினைத்து நான் எத்தனையோ தடவை வேலை இடத்திலும், தெருவில் நடந்து போகும் போழுதும் சிரித்திருக்கின்றேன்!

பள்ளிப்பருவத்தில் எனக்கு நிறையவே காதிலிகள் இருந்திருக்கிறார்கள். எனது 17-21வயது வரை பெண்கள் விடயத்தில் எனது மார்க்கட் சூடுபிடித்திருந்த காலம். இதை படித்துவிட்டு நீங்கள் தப்பாக நினைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனவே நீங்கள் என்னை திட்ட வேண்டும் என்றால் நன்றாக திட்டலாம். பார்ப்பதற்கு நல்ல உடம்பும், எவரையும் எனது பேச்சுத்திறன் மூலம் மயக்கும் திறனை நான் சிறுவயது முதலே வளர்த்துவந்ததால் கல்லூரிப்பருவத்தில் இது எனக்கு மிகவும் உதவியது. எனது சக தமிழ் நண்பர்களை விட நான் சற்று உயரம் அதிகம். இருந்தாலும் எனது அப்பாவின் மீது உள்ள பயத்தினால் நான் பெண்கள் விடயத்தில் அடக்கியே வாசிப்பேன். ஆனால் எனது நண்பர்களோ ஆளுக்கொன்றுடன் சுற்றினார்கள். இங்கு லண்டன் கனடா போல் தமிழ் பெண்கள் அதிகமல்ல. ஆனால் சுவிசிலயே நாங்கள் அந்தக்காலத்தில் அடிபாடு என்றால் பெயர் போனவர்கள். நிறைய பெண்களிற்கு எங்களின் பெயர் தெரியும் ஆனால் எங்களை பார்த்ததில்லை. நானும் எனது நண்பர்களும் எங்கு சென்றாலும் ஏனைய மாநில பொடியளுடன் கொhழுவி பெண்களை எமது பக்கம் கவர்வது வழக்கம். ஆனால் நாங்கள் அடிபட்டது மிகவும் குறைவு. மற்றவர்களை வாயாலயே வெருட்டி போடுவம். இப்படி தான் எனது பெயரும் எனது நண்பர்கள் பெயரும் சுவிசில் உள்ள இளம் பெண்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. அப்பொழுது கைத்தொலைபேசி எல்லாம் எங்களிடம் இல்லை. ஒரு பேஐர் வாங்கி இடுப்பில கொழுவி பிலிம் காட்டுறது தான் எங்கட வேலை. அப்பொழுது தான் சற் எல்லாம் வளர்ந்து வந்த காலம். நானும் சற் போய் பெண்களை பிடித்து ஈமெயில் எழுதி சந்திக்கிற வரைக்கும் போனன். முதல் தடவையே நான் ஒருத்தில சிரியசா லவ் பண்ணினன். ஏனக்கு 18 அவளுக்கு 16. 6 மாசத்துக்குப்பிறகு அவள் வேலையை காட்டிட்டாள். பிறகு என்ன அதுக்குப்பிறது அம்பியா இருந்த நான் அந்நியனா மாறினன். மாறி மாறி கதைக்கிற பொட்டையள் எல்லாரோடையும் டேட்டிங் தான். எண்ணிக்கையே இல்லை. ஒரு தடவை இரண்டு நண்பிகளையும் ஒரே நேரத்தில வச்சிருந்த அனுபவம் மறக்கவே முடியா. ஆனா எந்த ஒரு பெண்ணின் கற்போடையும் நான் விளையாடவில்லை. அப்படி எண்ணம் அப்பொழுது இருந்த இளைஞர்களிடத்தில் மிகவும் குறைவாக இருந்தது. இப்பொழு அது கொஞ்ம் மாறியுள்ளது. இதை கலாச்சார சீரழிவு என்று எப்படி கத்தினாலும் இயற்கையின் மாற்றத்தை எம்மால் நிறுத்தவே முடியாது.

டொச் மொழியின் இலக்கணம் என்பது எனது மண்டைக்குள் எப்பொழுதுமே ஏறாத ஒன்று. சுவிசில் உள்ள வரை வெளி உலகம் தெரியாது. வேறு நாடுகள் சென்று பார்த்தவுடன் தான் தெரிந்தது சுவிஸ் ஒரு சொர்க்கு பூமி என்று.

காதல் என்பது காலத்ததிற்கு காலம் மாறு பட்டுக்கொண்டே போகும். இது இயற்கை. சுpல பெரிசுவள் இதைதான் கலாச்சாரச்சிரிழிவு என்டு சொல்லுதுவள். இயற்கையை நாம் செய்கையால் மாற்ற முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே முடியும்.

எனது திருமணம் காதல் திருமணமா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனக்கு பெண்ணாசை என்பது போய்விட்டது. அந்த வயதை தான்டி நான் வந்துவிட்டேன். இப்பொழுது திருமணம் என்பதில் ஆசையில்லை

ஜம்மு

9)சினிமாவில் உங்களுக்கு ஒரு கதாநாயகன் பாத்திரம் கிடைக்குது அசினோட நடிக்க அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் நடிப்பீங்களா அல்லது நடிக்கமாட்டீங்களா?

வடிவேல் 007

விஐய் கோவிப்பாரே நான் அசினை எடுத்திட்டா து அப்படி நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அதில் வரும் அனைத்து பணமும் எமது ஈழத்திற்கே செல்லும். ஆனாலும் அசினை சைற்ரில வச்சிருபன்

ஜம்மு:

10)யாழ்களத்தில் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குது?அப்படியாயின் காரணம் என்ன?

வடிவேல்007

யாழ்கழத்தில நான் ஒருவருடனும் பெரிதாக நட்பு வைக்கவில்லை. யமுனா மட்டும் கொஞ்ச நாள் ஈமெயில் போட்டா. பின் அவரை எனது புலநாய்வுதுறையில் சேர்த்துக்கொண்டேன். ஆனால் அவரோ என்னை அண்ணா என்று விட்டார்

வானவில்: :rolleyes:

  • தொடங்கியவர்

ஜம்மு

11) ஈழத்தில் நீங்கள் அநுபவித்த ஒரு சில இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?உங்களுக்கு தற்போது இருக்கும் நாடு விருப்பமா அல்லது இலங்கையில் வசிப்பது விருப்பமா?

வடிவேல்:

ஈழத்தில் நான் வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. எனது 8வது வயது வரை ஈழத்தில் இருந்தேன். அப்பொழுது நடந்த எதுவும் எனக்கு நினைவிலில்லை

ஜம்மு

12)பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?பெண்களுக்கு கோபம் கூடுதலாக வருவதை பார்த்திருப்பீர்கள் அதை பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

வடிவேல்007

பெண்களை பற்றி... (எல்லா தாய்க்குலங்களும் மன்னிச்சிருங்க)

கடவுள் முதலில் பெண்ணை படைத்தான் (ஒரு சாம்பிள் மாதிரி). பெண் என்ற தனது படைப்பு தோல்வியில் முடிந்ததை உணர்ந்த கடவுள், தனது முதற் படைப்பான பெண்ணிடம் இருந்த குறைகளை சரி செய்து ஆணை படைத்தான்

அதிகமாக கோவப்படும் பெண்களிற்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது: அதிகமா கோவப்படுற பொம்பிளையும் அதிக ஆசைப்படுற ஆம்பிளையும் நல்லா இருந்ததா சரித்திமே இல்லை

ஜம்மு

13)நீங்கள் உங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்தால் என்ன செய்வீங்கள்?குழப்படி எல்லாம் செய்வீங்களா அப்படி செய்து தற்போது யாரிட்டையும் அடி வாங்கின சந்தர்ப்பம் இருக்குதா?

வடிவேல்007:

இந்தக் கேள்விக்கு பதில் எழுத வேண்டுமானால் 1000 பக்கங்களை தாண்டும். அந்தந்த வயசில பண்ண வேண்டிய எல்லாம் எனக்கும் எனது நண்பர்களிற்கும் அந்தந்த வயசிலயே பண்ண முடிந்தது. எனது இளமைக்காலத்தில் அது செய்யவில்லையே இது செய்யவில்லையே என்று நான் வருந்தியதில்லை. ஏனைய மாநில தமிழ் பொடியளுடன் தகராறுகளில் ஈடுபடுவது, அவர்களின் மாநில பெட்டையளுடன் சுத்துவது (அது அவர்களிற்கு மூஞ்சையில் அடித்தாற்போல் இருக்கும்), தமிழ் கடைகளிற்கு முன் „சும்மா“ நிற்பது, புறோக்கிறாம்களில் திக்கற் எடுக்காமல் மலசலகூடத்தின் யன்னல்கள் வழியாக தாவி உள்ளே போவது, புறோக்கிறாம் போய் ஒரு கோலா ரின் வாங்கி அதையே புறோக்கிறாம் முடியிற வரைக்கும் கன்ரினில நின்டு போஸ் குடுத்துக்கொண்டு குடிக்கிறது, ஒரு பக்கத்தால பெட்டையளுக்கு போன் பண்ணி இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதீங்க என்டு புத்திமதி சொல்லுவான் ஒருத்தன் மற்ற பக்கத்தால ஒருத்தன் டேட்டிங் போவான், பெட்டையளின்ர ரகசிங்கள் (எங்க எவனோட சுத்தினது போன் விபரங்கள்) தெரிஞ்சு வச்சுக்கொண்டு அதுவள அழ வைக்கிற, இப்படி ஏராளமான விசயங்கள் இருக்கு.

ஜம்மு

14)யாழில் தற்போது புதிய விதிகள் வந்துள்ளது,உதாரணத்திற்கு செய்தி பிரிவில் எல்லோரும் செய்தி போட முடியவில்லை இது சில உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை இதை பற்றி உங்கள் கருத்து என்ன?மோகண் அண்ணாவுக்கு நீங்க சொல்ல விரும்புவது?

வடிவேல்007:

யாழின் விதிமுறைகள் இவ்வளவு காலமா இருக்கிற எனக்கே தெரியாது. யார் யார் என்ன பண்ணலாம் என்பதை தீர்மானிப்பவர் மோகன் அண்ணா. எனவே இதை அவரிடமே விடுவது சிறந்தது

ஜம்மு

15)யாழில் உங்களின் புலனாயிவுதுறை ஆற்றிய சேவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கு உறுதுணையா இருக்கிற உங்கள் தம்பி வடிவேல் பற்றியும் 008 பற்றியும் சொல்லுங்கோ?

இந்த கேள்விக்கு பதிலழிக்கப்படவில்லை

  • தொடங்கியவர்

இவர்களைப்பற்றி ஒரு வரியில்

டண்- Dish Asia Network

நெடுக்ஸ்- குருவிகள், பறவைகள்

மதன்- மொட்டை மதனா இல்லை மன்மதனா?

ஐன்னி- போடா பண்ணி

வானவில்- கலர்புல் மனிதரா?

மணிவாசகன்- நான் ஆனந்த விகடன் வாசகன்

சித்தன்- சித்தி சீரியல் பெண்களிற்கு, சித்தன் ஆண்களுக்கா?

சின்னா- சரி நீங்க சின்னாவோ அமெரிக்காவே. நான் தமிழீழம்.

கு.சா- எங்கயப்பா மிச்சப் பெயர்?

வடிவேலு- 23வது பலிஆடு

தூயவன்- தூ"ஈ"அவன்

இராவணன்- காட்டுக்குப்போகாம இங்க என்ன பண்ணுறீர்?

விஷ்ணு- பூலோகத்தில் என்ன செய்கிறீர்?

வினித்- ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வருவது

நாரதர்- றொம்ப நாறுது

ஐம்மு- அப்ப க~;மீர் எங்க?

இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

யாழில் சேர்ந்திருப்பது- துரோகியும்-எதிரியும்

யாழில் மட்டுனருக்கு பிடிக்காதது- இங்கு செய்தி சுட்டு வெளியில் போடுவது

யாழின் பலம்- நான்

யாழின் பலவீனம்- வேலைவெட்டி இல்லாம இதைப்படிக்கிற நீங்க தான்

யாழில் மறக்கமுடியாதவர்- ம்ம்ம்ம்…சொறி மறந்து போச்சு.

யாழில் கொப்பி பேஸ்டுக்கு-யாழில மட்டும் இல்லை எங்கயுமே கொப்பி பேஸ்ட்டுக்க Ctrl+C தான்

யாழின் வால்கள்- தலை நான் இருக்கும் போது வால் ஆடிக்கூடாது. சோ ஒட்ட நறுக்கீட்டன்.

ஆசைக்கு- வேல்,வடிவேல்007

அறிவுக்கு-என்ன நக்கலா?அதான் பக்கத்தில இருக்கிறமுல்ல அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு

Edited by வானவில்

பல சிரமங்களுக்கும் மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்த வடிவேல் 007 க்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாகவும் நான் பேட்டி எடுக்கும் போது கூடவே இருந்து ஒத்துழைப்பு வழங்கிய வானவில்லுக்கும் மிக்க நன்றிகள்.

vadivel1smallmq6.jpg

Edited by Jamuna

  • தொடங்கியவர்

எங்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்தமைக்கு வடிவேல்007க்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=2192

வடிவேல் 007அவர்களின் பேட்டியை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம் இன்று இன்னொருவரினது பேட்டி இருக்குது காணதவறாதீர்கள்

அடுத்த பேட்டி இளம் யாழ் அறிமுகம் இன்னிசையுடன் காணதவறாதீர்கள்

757675483413b3edbe4a01tz6.jpg

Edited by Jamuna

வணக்கம் இன்னிசை பலத்த வேலைகளுக்கும் மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த உங்களை டைகர் வானொலி சார்பாகவும் டைகர் குடும்பம் சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறோம்

யாழ்களத்தில் உங்களை அதிக பேருக்கு தெறிய வாய்பிருக்காது ஆகவே உங்களை பற்றி சில வரிகளை சொல்லுங்கோ?

1)யாழ்களத்துக்கு நீங்கள் எவ்வாறு அறிமுகமானீங்கள்,யாரால் அறிமுகபடுத்து பட்டீர்கள் என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?இன்னிசை என்ற பெயர் உங்கள் பெயரா அல்லாவிடில் அந்த பெயரை நீங்கள் தெரிவு செய்த்தன் காரணம் என்ன?அத்துடன் யாழில் நுழையும் போது எவ்வாறான மனநிலையில் இருந்தனீங்க?

2)நீங்கள் ஒரு புதிய உறுப்பினர் உங்களை எவ்வாறு பழைய உறுப்பினர்கள் வரவேற்றார்கள்?அவர்களில் நீங்கள் மிகவும் நெருங்கிய உறவாக நினைப்பது யாரை அவர்களை பற்றி சில வரிகள் சொல்லுங்கோ?நீங்கள் யாழில் குருவாக நினைப்பது யாரை?

3)இப்போது டைகர்பமிலி பற்றி பலதரபட்ட விமர்சங்கள் வந்தபடி உள்ளது அதை பற்றி உங்கள் கருத்து என்ன?அரட்டையும் தற்போது பலதரபட்ட விமர்சனத்திற்கு உள்ளாகபட்டுள்ளது இதை பற்றி உங்கள் கருத்து என்ன?அரட்டை அடிக்க வேண்டாம் என்று பக்கம் திறந்து அரட்டை அடிப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

அத்தோடு ஜமுனாவும்,வானவில்லும் யாழிற்கு தேவையில்லை என்ற தொணியில் சில அன்பர்கள் இன்று கதைத்தார்கள் நீங்களும் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

4)யாழில் இப்பொது வரும் பழைய உறுப்பினர்கள் தங்களுக்கு ஒருபக்கத்திலும் எழுதமுடியவில்லை என்று மோகண் அண்ணாவோடு சண்டை பிடிப்பதை பார்த்திருக்கலாம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?அவர்கள் செய்வது சரியா அல்லது பிழையா உங்கள் பார்வையில்?

5)சிலர் யாழில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை வைப்பார்கள் அல்லது வில்லங்கமான கருத்துகளை வைப்பார்கள் இவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?இவர்களுக்கு நீங்க சொல்வது என்ன?இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவை தானா?

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)சகி துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

  • தொடங்கியவர்

இதோ என்னும் சில விநாடிகளில் பேட்டி தொடரும்

சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் இன்னிசையுடன்

6)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

7)தற்போது நீங்கள் அவுஸ்ரெலியாவில் இருக்கிறீங்க உங்களை கேட்டா அவுஸ்ரெலியா நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?அவுஸ்ரெலியாவிற்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?எவ்வாறு அவுஸ்ரெலியர்கள் உங்களுடன் பழகினார்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

8)அடுத்தது காதல் எல்லாருக்கும் காதலை பற்றி தெரியும் உங்கள் பார்வையில் காதல் என்றா என்ன?அந்த அநுபவம் இருக்கா?இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?

9)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க அதற்கான காரணம் என்ன?

10)உங்கள் முன் கடவுள் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டா நீங்கள் என்ன கேட்பீங்க?அதற்கான காரணம் என்ன?

11)ஈழத்தில் நீங்கள் அநுபவித்த இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?தற்போது நம் தலைவன் விமானம் ஓட்டுகிறார் அதை பற்றி என்ன சொல்லுறீங்க?

12)பெண்களுகு இப்ப சமைக்க தெறியாது என்று பலர் சொல்லினம் தாங்கள் எப்படி?உங்களுக்கு சமைக்க தெறியுமா?ஆண்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

13)நீங்கள் உங்கள் தோழிகள் எல்லாம் சேர்ந்தா என்ன குழப்படி எல்லாம் செய்வீங்கள்?அப்படி செய்து யாரிட்டையும் அடி அல்லது திட்டு வாங்கிய சந்தர்ப்பம் இருந்தா எங்கள் நெயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

14)யாழில் புலத்தில் பிறந்தவர்கள் (இளைஞர்கள்) வருவது மிகவும் குறைவு அவர்களை யாழுக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீங்க?

15)உங்களுக்கு எத்தனை பேர் இதுவரை காதல் கடிதம் தந்தவை அவைக்கு நீங்கள் சொன்ன பதில் என்ன?யாராவது அடி வாங்கிய சந்தர்ப்பங்களும் உண்டா? அப்படியாயின் அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?

இவர்கள் பற்றி ஒரு வரியில்

  1. டண்-
  2. பொன்னி -
  3. குட்டிஸ்-
  4. சோணு
  5. ஜன்னி-
  6. பிரியசகி-
  7. வானவில்-
  8. புத்தன்
  9. சித்தன் -
  10. சுண்டல்

  11. கு.சா-
  12. வடிவேலு-
  13. தூயவன் -
  14. அனிதா-
  15. லீசா-
  16. மோகண்-
  17. வெங்கட்-
  18. யாழ்ரவி-
  19. யாழ்கவி-
  20. யாழ்பிரியா-
  21. தூயா-
  22. ஜம்மு-
இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது

3 யாழின் பலம்

4.யாழின் பலவீனம்

5.யாழில் மறக்க முடியாதவர்

6.யாழில் மறக்க கூடியவர்?

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.