Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா?

 

‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்).

ஒரு காலத்தில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந் நாடு தன் இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே (gold standard) இருந்தது. பின்னர் அமெரிக்கா தனக்கே உரித்தான நாட்டாண்மையைக் காட்டி உரியளவு தங்கம் இருக்கிறதோ இல்லையோ தனக்குத் தேவையான அளவுக்கு நாணயத் தாள்களை அச்சிட்டுவிடும். உலக நாடுகளின் நாணயமெல்லாம் அமெரிக்க நாணயத்தோடு ஒப்பிட்டே பெறுமதி பார்க்கப்படும். உலக வர்த்தகத்தில் பலருக்கு, குறிப்பாக எண்ணைவளமுள்ள நாடுகளுக்கு இது பெரும் தலையிடியாய் இருந்து வந்தது. இந்த அமெரிக்காவின் நாட்டாண்மையை உடைத்துக் காட்டுகிறேன் பார் என்று போராடப் புறப்பட்டதால் தான் சடாம் ஹுசைன், கடாபி போன்றோர் நாடுகளையும், உயிர்களையும் இழந்தார்கள்.

இந்த ‘நாணயம்’, ‘தங்கம்’ போன்றவைகளின் கையிருப்பும், கையாள்தலும் மன்னர்களிடமே இர்ந்து வந்தது வரலாறு. இதைச் சாமானியன் கைக்கு மாற்றவெடுத்த முயற்சியே எகிப்திலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குக் காரணம் என்பது ஐதீகம். கடன் கொடுத்தல், பணப்பரிமாற்றம், வட்டி, ஈடு என்ற விடயங்களில் அவர்கள் இன்றுவரை முன்னோடிகளாகவே இருக்கின்றார்கள். எகிப்திலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும், பின்னாளில் ஜெர்மனியிலிருந்தும் யூதர்கள் துரத்தப்படுவதற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட பணப் பரிமாற்றத்துக்கும் தொடர்பிருக்கிறது என்பதை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. சமகாலத்திலும் பெரும் வணிக வங்கிகளின் முதலீட்டாளர்கள் யூதர்கள் தான். அமெரிக்காவின் நிதி பரிபாலனத்தின் மேலாண்மையைத் தன்னிடம் வைத்திருக்கும் மத்திய றிசேர்வ் வங்கியின் உருவாக்கத்தின் பின்னால் உள்ளவர்கள் யூதர்கள் தான். பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளின் நிதிக்கொள்கையை நெறிப்படுத்துபவர்களில் பெரும்பாலும் யூதர்கள் இருப்பார்கள். இன ரீதியாக இதை அணுகுவது அறமற்றதெனினும் யூதருக்கும் பணத்துக்குமான தொடர்பையும் நிராகரிக்க முடியாது. ‘கடவுள்தான் எனக்குப் பணத்தைத் தந்தார்’ என்று கூறும் றொக்கெபெல்லர் ஒரு யூதர். மனிதகுலத்துக்குப் பல அரிய கொடைகளை அளித்தவர்களும் யூதர்கள் தான்.

உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒரு நாணயத்தைப் புழக்கத்தில் வைத்திருப்பது பற்றிய ஒரு திட்டத்தை யூதர்களின் மூத்தவர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னரே வகுத்திருந்தனர் என்றொரு கதை நீண்டகாலமாக இணையத் தளங்களில் உலாவுகிறது. ‘த ஜியோனிஸ்ட் புறொட்டோகோல்’ என்றதற்குப் பெயர். இதன் மூலம் பற்றிய உண்மை தெரியாவிடினும் இதை யூதர்கள் தான் எழுதினார்கள் என்று கூறி நாஜிகள் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரமாகவும் பாவிக்கிறார்கள்.

மின் நாணயத்தைக் காகித நாணயத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரும் முயற்சி 2009 இல் சடோஷி நாகமாட்டோவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. கணனி மொழியில், மின் நாணயம் (bitcoin) என்பது ஒரு computer file. நீங்கள் செய்த ஒரு வேலைக்கு ஊதியமாக ஒருவர் மின் நாணயத்தில் அவ்வூதியத்தைக் கணனி மூலம் உங்கள் ‘மின் பணப் பைக்கு’ (digital wallet) அனுப்பலாம். இப்படி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மின் நாணய மாற்றமும் ‘ப்ளொக்செயின்’ (blockchain) எனப்படும் பொதுவான பதிவேட்டில் பதியப்படும். நீங்கள் போதுமான அளவு சம்பாதித்து விட்டால் சேமிக்கப்பட்ட மின் நாணயங்களை சாதாரண தாள் நாணயங்களுக்கு மாற்றீடு செய்து வங்கிகளில் போட்டு விடலாம். இதற்காக Coinbase அல்லது Kraken போன்ற நாணய மாற்று நிறுவனங்கள் இயங்குகின்றன.

கடந்த பத்து வருடங்களாக இந்த மின் நாணய முயற்சி முன்னெடுக்கப் பட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாமல் இன்னும் திண்டாடும் நிலையில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் பெரும் வணிகவங்கிகள் தமது கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் இழக்க விரும்பாதது தான்.

இப்பொழுது களத்தில் இறங்குபவர்கள் முகனூல் தனவந்தர் சக்கர்பேர்க்கும் ஊபர் நிறுவனத்தின் பெரும்பங்கின் உரிமையாளர் கலனிக் என்பவரும். இருவருமே வணிக வங்கிகளுக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்களோடு இன்னும் சில பெரும் தனவந்தர்கள் சேர்ந்து ஒரு கவுன்சில் ஒன்றை உருவாக்கி அதன் பெயரில் சுவிட்சர்லாந்தில் வங்கி ஒன்றில் பெரும்தொகையான பணத்தை இருப்பில் வைத்துக்கொள்ளப் போவதாகவும் அதற்கு சமமான மின் நாணயத்தைப் பொதுமக்கள் தமது கணனிகள், தொலைபேசிகள் மூலம் வாங்கித் தமது அன்றாட பண்டங்களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது மின் நாணயத்துக்குப் பெயர் ‘லிப்ரா’. இதை ஒரு ‘உலக நாணயமாக்க’ வேண்டும் என்பதே இக் குழுவின் நோக்கம்.

கடந்த செவ்வாயன்று இவ் விடயம் பகிரங்கப்படுத்தப் படுவதற்கு  முன்னர் ஒரு வருடமாக முகனூல் நிறுவனத்தில் இதற்கான தயாரிப்புகள் நடைபெற்று வந்ததெனவும் அறியப்படுகிறது.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பண்டங்களை வாங்குவதற்கு தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினால் சரி. அதற்குரிய பெறுமதியுள்ள மின் நாணயம் மாற்றம் பெற்று பண்டம் உங்கள் கைகளுக்கு இலகுவில் (ஊபர் டிலிவரி மூலம்?) வந்து விடும்.

மின் நாணயப் பரிமாற்றத்திலுள்ள பிரச்சினைகள் பல. ஒன்று – இப் பரிமாற்றங்களையெல்லாம் விரைவாகவும் திறனுடனும் பதிவு செய்யவல்ல ‘புளொக்செயின்’ ஒன்றை உருவாக்குவது. தற்போதுள்ள மின் நானயப் பரிமாற்றம் எதிர்பார்த்த அளவுக்கு நம்பகத்தனமான ப்ளொக்செயின் உருவாக்கப்படாமை. இரண்டு – இந் நடைமுறையைப் பயங்கரவாதிகளும், குற்றச் செயல் செய்பவர்களும் இலகுவாகத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்திவிடலாம் என்ற அச்சம்.

இதுவரை இந்த மின் நாணயப் பரிமாற்றத்தைப் பரிசோதித்தவர்கள் ஒரு வகையில் பெருந்தன ஆதரவற்ற, ஆரம்ப நிலை நிறுவனங்களும் சில புத்திக்கூர்மையுள்ள கணனி விற்பன்னர்களும் தான். பெரும் தனவந்தர்களும், வணிக, நிதி நிறுவனங்களும் ஓரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களின் வெற்றி தோல்விகள், பலங்கள், பலவீனங்கள் போன்றவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்களது நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் பணபலத்துடனும், மூளை பலத்துடனும் தயாராக உள்ளார்கள். இதுவரை இருந்த தடைக்கற்களை இலகுவாக விலக்க அவர்களிடம் வழிகளுமிருக்கிறது, பணபலமுமிருக்கிறது.

 

பெரும் வணிக வங்கிகளின் அதிகாரிகள் (லண்டன் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி) போன்றவர்கள் உள்ளூர லிப்ரா போன்ற மின் நாணயத்தின் வரவை எதிர்த்தாலும் தங்கள் கைகளை மீறி இது உலகைக் கைப்பற்றி விடலாம் என்கிற அச்சத்தால் அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டித் தள்ளப்பட்டுள்ளார்கள். எப்படி அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் உருவாக்கத்தைத் தடுக்க முடியாமல் (அப்போது அரசுக்குத் தேவையான கடனுதவிகளைத் தனிப்பட்ட சில வங்கிகளே வழங்கி வந்தன. இதனால் அவர்களுக்குள் போட்டி வந்தது. இப் போட்டியைத் தவிர்த்து தமது இலாபத்தை அதிகரிக்கவே இத் தனிப்பட்ட வங்கிகள் இணைந்து மத்திய றிசேர்வ் வங்கியை உருவாக்கின) அரசு அதை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டி வந்ததோ அதே போன்று இப்போதும் லிப்ரா என்ற இந்த மின் நாணயத்தை உலக வணிக வங்கிகளும், இயல்பாகவே அரசுகளும், ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டியே ஏற்படும். காரணம் இந்தத் தடவை மின் நாணயத்தின் பின்னால் இருப்பது அரச ஆணைகளையே உதாசீனம் செய்யும், பணத்தையும் அதிகாரத்தையும் குவித்து வைத்திருக்கும் முதலைகள்.

வழக்கம் போல முகனூல் போன்ற நிறுவனங்கள் அபிவிருத்தியடையாத நாடுகளின் ‘கண்ணீரைத் துடைபதற்காகவே’ இந்த முயற்சிகளை மேற்கொள்வதாக முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள். உலகில் 1.7 பில்லியன் மக்கள் வங்கிக் கணக்கே இல்லாமல் இருக்கிறார்களாம். அவர்கள் தமது உறவினர்களுக்குப் பணம் அனுப்புவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்களாம் என்று முகனூல் கண்ணீர் வடிக்கப் புறப்பட்டு விட்டது. கூகிள், அப்பிள், அமசோன் என்று இன்னும் பல நிறுவனங்கள் தம் பாட்டுக்கு துயரப்படும் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் கைகளில் இலவச ஸ்மார்ட் போன்களைக் கொடுத்து (கருணாநிதி இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுத்தது போல) அரசியல்வாதிகளுக்கு இலஞ்சத்தைக் கொடுத்து 5ஜி கோபுரங்களையும் எழுப்பிவிட்டு வரப்போகிறார்கள்.

அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாது. இந்த ‘உலகமயமாக்கலில்’ அவர்களுக்கும் ஏதாவது சிதறும் என்ற நம்பிக்கையில் கைகளை ஏந்திக்கொண்டே இருப்பார்கள்.

எப்படி கிறெடிட் கார்ட் மக்கள் மீது திணிக்கப்பட்டதோ அவ்வாறுதான் மின் நாணயமும் எம்மீது திணிக்கப்படுகிறது. விரைவில் உலகில் ஒரே ஒரு உலக நாணயம் தான் இருக்கும்.

‘அவ்ர்கள்’ கனவு பலிக்கப் போகிறது.

http://marumoli.com/முகநூல்-நாணயம்-ஒரு-குடை-உ/

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள மக்கள் அனைவரினதும் அசையும் அசையா சொத்துக்கள் முழுவதின் மொத்த மதிப்பு அண்ணளவாக 240 திரிலியன் அமெரிக்க டாலர்கள். இந்த செல்வத்தில் ஏறத்தாள அரைவாசியை அதாவது 120 திரிலியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்கள் உலக சனத்தொகையில் 1%  என்பதுதான் ஆச்சரியம். மேற்சொன்ன சொத்தின் முதல் ஒரு விழுக்காட்டுக்கு (2.4 திரிலியன் டாலர்கள்) உரிமையானவர்கள் வெறும் 85 பேர் இவர்களில் தற்போதைய கணக்கெடுப்பின்படி முதலிடத்தில் இருப்பவர் அமேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸ். 

3 hours ago, nunavilan said:

எப்படி கிறெடிட் கார்ட் மக்கள் மீது திணிக்கப்பட்டதோ அவ்வாறுதான் மின் நாணயமும் எம்மீது திணிக்கப்படுகிறது. விரைவில் உலகில் ஒரே ஒரு உலக நாணயம் தான் இருக்கும்.

கடன் மட்டை நிறுவனங்கள் சிலதே இருந்தாலும், அவை அனைத்தும் உள்ளுர் வங்கிளுடன் இணைந்தே அது அந்தந்த நாட்டு மக்களுக்கு தருகின்றன. எனவே, இதனால் அந்த நாட்டு மத்திய வங்கி தன் தனது பண ஆண்மையை இழக்கவில்லை. ( நாட்டின் எல்லையும் பொருளாதாரமும் ( அதன் சுய பணமும் ) அதன் இறையாண்மைக்கு இன்றியமையாதது).    

அது போலவே மின்னாணயம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை ஒரு நாட்டில் உள்ள எல்லோரும் பாவிக்கும் நிலைமை இலகுவில் வர அந்தந்த நாடுகள் விட மாட்டா.   

காரணம் தனது பணத்தின் வட்டி வீதத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.