Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு உணர்வுடன் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையவுள்ளன ; இறுதி முடிவு ஓரிரு வாரங்களில்

Featured Replies

கட்சிக் கோட்பாடுகளையும், சற்று தள்ளிவைத்துவிட்டு தமிழினத்தின் கட்சிகள், தமிழினத்தின் தேவைகளையும், தேசியப் பிரச்சனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு, தமிழினத்தின் கட்சிகள்  ஒன்று சேர இருக்கிறோம் என விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ.ணன் தெரிவித்தார்.

அத்துடன்  இந்த நாட்டில் வாழும் தமிழினத்தின் பிரச்சினைகள் தீர்வின்றி கிடப்பில் கிடக்கின்றன. அவைகளின் தீர்வுகளுக்கு நிதானத்தோடு கூடிய வேகம் அவசியம். அதற்காகவே தமிழினத்தின் கட்சிகள் தேசியப் பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு  ஒன்று சேர இருக்கிறோம். அது காலத்தின் தேவை.  அதற்கான இறுதிவடிவம் இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார்.

சமகால நிகழ்வுகள் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசியல் கட்சிகளும், அதனூடான மக்கள் பிரதிநிதிகளும் மக்களுடைய தேவைகளை இனம் கண்டு, அவைகளைத் தீர்த்துவைக்க வேண்டிய பாரியதொரு கடப்பாட்டை கொண்டிருக்கின்றன. ஆகையால் அவைகளை தீர்த்து வைக்க வேண்டிய உபாயங்களை நாமே உருவாக்க வேண்டும்.

இப்போது தமிழ்மக்கள், வடக்கு, கிழக்கு, மகாணங்களிலும், மலையகத்திலும் செறிந்தும், மற்றைய இடங்களில் பரவலாகவும் வாழ்கிறார்கள். 

தமிழர்கள் இந்த நாடடில் ஒரு தேசிய இனம். அவர்களுடைய பாரிய பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்படாமல்  இருக்கின்றபோது, புதிதுபுதிதாக பிரச்சனைகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. 

நாம் கொஞ்சம் அசந்துவிட்டால், மற்றைய இனங்கள் நமது இருப்பையே இல்லாமற் செய்துவிட முனைவதை நாம் கண்ணூடாக கண்டுவருகிறோம்.

இந்த அரசோ பிரச்சினைகளை தீர்பதற்கு பதிலாக அவைகளை சாட்டுப் போக்குச் சொல்லி காலத்தை நீடித்து தனது சிம்மாசனத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு பிரதேசத்தின் நிர்வாக அலகான ”பிரதேச செயலகத்திற்கு அந்தஸ்த்தை வழங்க 30 வருடகாலம் கடந்தும் முடிந்த பாடில்லை”. இதனை நாம் தமிழர்களுடைய தேசியப்பிரச்சினையாக பார்க்கிறோம். 

மலைநாட்டு மக்களுடைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் நாளொன்றுக்கு 50 ரூபா வீதம் இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. இத்தனைக்கும் இந்த அரசின் இருப்பை தக்கவைத்தவர்கள் தமிழ்ப்பிரதிநிதிகள். எங்கேயோ தவறிருக்கிறது. சரியான உபாயம் தேவைப்படுகிறது. இதுவே உண்மை.

சில வேளைகளில் எம்மிடையேயுள்ள அரியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்னொரு தரப்பினா் எமக்குள்ளே மூக்கை நுழைத்துவிடுகிறார்கள். இது ஒரு நல்ல சகுனமல்ல.

தேர்தல்காலம் வரும்போது மட்டும் நமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்ய நமது அரசியல் கட்சிகளை பயன்படுத்துவோம். அதற்கு அப்பால் உள்ள தேசியப்பிரச்சினைக்கு தமிழக்கட்சிகள் யாவும் ஒன்றணைந்து குரல் கொடுப்போம். இதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இடம்பெற்று இறுதிவடிவத்தை அடைந்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/59171

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

தமிழ்க் கட்சிகள்.... ஒரு உணர்வுடன்  ஒன்றிணையவுள்ளமைக்கான   இராதா கிருஷ்ணனின், முன்னெடுப்பு வரவேற்கத் தக்கதே.  
ஏற்கெனவே தந்தை செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், திருச் செல்வம், தொண்டைமான்... எல்லோரும்  1970 களிலேயே முயற்சி செய்தவர்கள்தான்.  
இம்முறை... இணையும் போது... சம்பந்தனையும், சுமந்திரனையும் கிட்ட நெருங்க விடாதீர்கள்.
இவர்கள் இருவரின் அரசியலும், பம்மாத்தும்.. தமிழ் இனத்துக்கு, இனியும் தேவையில்லை.

  • தொடங்கியவர்

’கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி சாத்தியமில்லை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒற்றுமையைக் காணவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில் மாற்று அணி என்பது எப்படி சாத்தியம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கூட்டமைப்பிலிருந்து புளொட் அமைப்பு வெளியேறி மாற்று அணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இதுவரைகாலமும் நாங்கள் பங்குபற்றினோம் என்பதை பகிரங்கமாக சொல்லலாம். அவ்வாறு பங்குபற்ற வேண்டியது எங்களுடைய கடமை. அந்தக் கடமையிலிருந்து விடுபட முடியாது. இந்த பேச்சுவார்த்தைகள் அரசமைப்பு நடவடிக்கைகள் முழுவதும் வெளிநாட்டு அழுத்தங்களால் நடைபெறும் விடயங்கள் தான்.

நாங்களாகவே அதை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் மீண்டும் சர்வதேசத்திடம் இதனைச் சொல்ல முடியாது. அரசாங்கம் பிழை விடுகின்ற போது அதை நாங்கள் எடுத்துக் கூறக்கூடிய விதத்தில் அரசாங்கம் தாங்களாகவே இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் இதனை சொல்வதற்கு எங்களுக்கும் இலகுவாக இருக்கும்.

கூட்டமைப்பு தவறு விடுகிற போது ஒரு மாற்று அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளைக் காணவில்லை. ஏனென்றால் இன்று கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக்கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒரு ஒற்றுமையை நான் காணவில்லை. அவர்களில் ஒருவரை ஒருவர் பேசுவதும். ஒருவரை மற்றவர் 'றோ' என்றும் அதற்காக வேலை செய்கிறார்என்பதும் நான் அப்படியில்லை. இவர்தான் சீனாவிற்காக வேலை செய்கிறார் என்பதுமாக நிலைமை இருக்கிறது. இப்படியான நிலைப்பாடு இருக்கிற பொது சரியான மாற்றுக்கூட்டு ஒன்று எப்படி சாத்தியம்.

சரியான ஐனநாயகமான சூழ்நிலை தமிழ் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். இப்போதைய நிலையில் அதற்காக ஒரு மாற்றை என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பிற்குள் பிழை இல்லாமல் இல்லை. கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல பிழைகள் இருக்கின்றன. ஆனாலும் இருப்பதை உடைத்துக் கொண்டு போகிற போது சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

அப்படியான சரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய வகையில் ஒரு மாற்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தான் இப்போதைக்கூ நான் கூறக்கூடிய விடயம் என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கூட்டமைப்புக்கு-எதிரான-மாற்று-அணி-சாத்தியமில்லை/71-234673

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.