Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட தமிழ் பெண்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட தமிழ் பெண்கள்..!

கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இராணுவ முகாமில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா்.

யஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களால்,

அமெரிக்காவில் மத்திய மாவட்டத்துக்கான மாவட்ட நீதிமன்றில் 10 புதிய நட்டஈட்டு
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மற்றும் இராணுவ முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமாக மீறல்களை அவர்கள் விவரித்துள்ளனர்.

சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டுள்ளனர். கேபிள்களால் அடிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோலில் நனைத்த பினாஸ்ரிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு பேர் திரும்பத் திரும்ப பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களில் எட்டுப் பேர் தமிழர்கள். இரண்டு பேர் சிங்களவர்கள்.

இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும்,

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமக்கு நடந்த சித்திரவதைகளில் இலங்கையின் முக்கிய பொலிஸ் விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான

பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என வழக்குத் தொடுநர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

வவுனியா ஜோசப் முகாம், தலைநகர் கொழும்பு மற்றும் புல்மோட்டையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு நிலையம்

உட்பட்ட இராணுவ முகாம்களில் 2008 ஆம் ஆண்டுக்கும் 2013 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற சித்திரவதைகள்

பற்றிய விரிவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. – என்றுள்ளது.

 

https://www.thaarakam.com/news/76727?fbclid=IwAR07d5zpDhnmJstX31dtCyR9BWbcHyfwDltKacVqql56cYcSLM5_YD1T3AU

கடந்த வருட செய்தி, ஆனால் தொடர்புபட்டது

“சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறையினுள் வந்தார். ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. இறைச்சி சந்தையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி போல் நாங்கள் இருந்தோம். சுற்றிப்பார்த்த அவர் என்னைத் தெரிவு செய்தார். என்னை இன்னுமொரு அறைக்குள் கொண்டு சென்ற அவர் அங்கு வைத்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.”

https://maatram.org/?p=5592

“இரண்டு பெண்கள் விளக்கும்போது தங்களை ஒரு குழுவாக அறையொன்றில் தடுத்துவைத்திருந்ததாகவும், எந்த இராணுவமும் வந்து தெரிவுசெய்து அருகிலிருந்த அறைக்கோ அல்லது கூடாரத்துக்கோ பாலியல் வல்லுறவுக்காகக் கொண்டு சென்றதாகவும் கூறினார்கள். 3ஆவது பெண், ஆறு மாதங்களாக மிக இருட்டான கூண்டொன்றில் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால், அருகில் உள்ள அறைகளில் ஏனைய பெண்கள் அலறும் சத்தம் கேட்டதாகக் கூறினார். இரு சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியாக மாத்திரைகள் அல்லது ஊசி மருந்து கொடுக்கப்பட்டாகக் கூறினார்கள்” – இவ்வாறு ITJPஆல் ஐ.நாவுக்கு சம்ர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்” - வழக்கறிஞர் ஸ்கொட் கில்மோர், இந்த வழக்கினை தாக்கல் செய்த கோஸ்பீல்ட் நிறுவனத்தின் மனித உரிமைகள் வழக்கறிஞர். 

இந்த வழக்கிற்கு முன்வந்த றோய் இனதும் மற்றும் ஆண்கள் பெண்கள் என புதிய பத்து வழக்குத்தொடுநர்களினதும் மிகப் பெரிய துணிச்சலுக்கு நான் மரியாதை செய்ய விரும்புகின்றேன்” -  மிச்சேல் கோஸ்பீல்ட், கோஸ்பீல்ட் இன் தலைவர்.

http://eelamurasu.com.au/?p=19884&fbclid=IwAR29gFm_sgy92B74q5F7nlhGat6PM5rloNFen10xuMvE7XwvFMDtQ9LHvI8

  • ஏப்ரல் 5 இல் கனடா பிரஜையான றோய் சமதானம் என்பவரின் சார்பாக முதலில் தாக்கல் செய்யப்பட்ட முன்னைய வழக்கில் இந்த வழக்கு தொடுநர்களும் இணைந்து கொள்கின்றனர்.
  • இந்த வழக்கானது அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது .
  • திரு ராஜபக்சாவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி மூன்று தனிநபர்கள் திரு சமதானத்தை நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தயடுத்து 29 ஏப்பிரலில் ஒரு தொந்தரவை உடன் இடைநிறுத்துவதற்கான மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பிரசன்ன டி அல்விஸ் - கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி

இவர் சித்திரவதை செய்த உத்திரவிட்டதாகவும் சில சமயங்களில் சித்திரவதையில் பங்கெடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர் கோத்தபாயவிடமிருந்து நேரடியாக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டார் எனவும் சொல்லப்படுகின்றது.

 

26 யூனில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை அடையாளங் காட்டாமல் இருக்கும் 10 புதிய வழக்கு தொடுநர்கள் திரு ராஜபக்ச அவர்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமாக மீறல்களை விபரிக்கின்றார்கள்.

  • சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டார்கள்,
  • கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள்,
  • பெற்றோலில் நனைத்த பினாஸ்டிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு  திணறடிக்கப்பட்டார்கள். 
On 6/27/2019 at 5:49 PM, விசுகு said:

கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இராணுவ முகாமில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா்.

சர்வதேசத்துக்கு சொறிலங்காவின் அரச பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டும், காட்ட முன்வந்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இந்த நேரத்துல இதைப் போன்றதொரு மிகமிக மோசமான பாலியல் பலாத்கார படுகொலைகளை எங்கட மண்ணில அரங்கேற்றிய இந்தியக் கொலைகார மிருகங்களையும் நாம மறந்துவிட முடியா. அதுவும் அமைதிப் படை என்ட பேர்ல இப்பிடியான மிலேச்ச பயங்கரவாதத்தை மனித உருவிலுள்ள இந்திய மிருகங்களால் மட்டுமே செய்ய முடியும் என்டதையும் நாம மறந்துவிட முடியா!

மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவதே எமது பிரதான நோக்கம்;யஸ்மின் சூக்கா சிறப்பு நேர்காணல்

மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின் சூக்கா அம்மையார் அவர்கள். உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பொறுப்பை ஏற்று மனித உரிமை தளத்திலே ஒடுக்கப்படும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இன மத மொழிகளை கடந்து தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற் கொண்ட இன அழிப்பு செயற்பாடுகளையும், இறுதி யுத்தத்திலே இலங்கை அரசு மேற் கொண்ட போர்க்குற்றங்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அவர் தீவிரமாக கடமையாற்றிவருகிறார். குறிப்பாக இலங்கை அரசபடைகள் தமிழ் பெண்கள் மீது மேற் கொண்ட வன்முறைகளின் சாட்சியங்களை தொகுத்து ஐ.நா.மன்றத்திடம் கையளித்து உலகில் உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

கேள்வி: இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் இலங்கை அரச படைகளினால் இழைக்கப்பட்ட கொடூரங்களை உங்களால் வழிநடத்தப்படும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் (ஐகூஒக) ஆவணப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த அமைப்பு எப்படிப்பட்ட பங்களிப்பை இதுவரை வழங்கியிருக்கிறது என்பதைக் கூறமுடியுமா?

பதில்: 2011ஆம் ஆண்டு ஐகூஒக ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூவர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை நிறைவுசெய்திருந்தது. அந்தக் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். டெனா, பிரான்சிஸ் கரிசன் போன்றோர் இந்த நிபுணர் குழுவுக்கு உதவியளித்துக்கொண்டிருந்தார்கள். அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பலதரப்பினரிடமிருந்தும் எங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் எங்களுக்குக் கிடைத்திருந்தன. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இப்படிப்பட்ட ஒரு செயற்றிட்டத்தை நிறுவ நாங்கள் முடிவு செய்தோம்.
போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவது எமது முக்கிய நோக்கமாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் தாபனம் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு அப்போது இருந்தது. ஆரம்ப கட்டத்தில் எங்களால் தயார்செய்யப்பட்ட அறிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஐநா நிபுணர் குழுவின் பணியைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைகள் நடைபெற்று, இறுதியாக 2015ஆம் ஆண்டு இணை அறிக்கை வெளிவரக் காரணமாக அமைந்தது. 2011 இலிருந்து 2015 வரை இக்காலப்பகுதி நீண்டிருந்த போதிலும், உண்மையைச் சொல்லப்போனால், இச்செயற்பாடுகளின்றி ஐ.நாவின் விசாரணை முயற்சிகள் சாத்தியமான நிலையை அடைந்திருக்க மாட்டாது என்றே நான் கருதுகின்றேன்.

ஓஐஎஸ்எல் என்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விசேட அமைப்பு தனது பணிகளைச் செய்ய நாங்கள் உதவினோம். ஒரு புறத்தில் எம்மிடமிருந்த வாக்குமூலங்களை நாங்கள் அவர்களிடம் கையளித்ததுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களுடனும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடனும் அந்த அமைப்பு நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்ள நாங்கள் வழிவகை செய்தோம். ஐக்கிய நாடுகள் தாபனம் இலங்கை தொடர்பான தனது பணிகளைக் காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதே அப்போது எமது முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இணை அறிக்கை வெளிவந்ததன் பின்னரான காலப்பகுதியில், அதாவது 2016, 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒரு புதிய அரசு பதவியேற்றிருந்ததுடன் சர்வதேச சமூகமும் காணாமல் போனோர் பணிமனை (ஓஎம்பி) போன்ற செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கக் கூடியவிதத்தில் இலங்கைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்தது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு நீதிமன்றை நிறுவுவதும் அவ்வேளையில் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டளவில் நீதியை நிலைநாட்டுவதற்கான உண்மையான ஆர்வத்தை இலங்கை அரசு கொண்டிருக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் தெளிவாகவே புரிந்துகொண்டோம்.

அந்த நேரத்தில் இலங்கை அரசு மக்களின் கருத்தை அறிந்துகொள்ள ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை நியமித்தது. நீதிப்பொறிமுறைகள் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள், செய்யப்படவேண்டிய பரிகாரங்கள் என்பன தொடர்பாக எம்மிடம் வாக்குமூலத்தை அளித்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அந்த மக்கள் மத்தியில் நாங்களும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டோம்.

எமது ஆய்வின் முடிவுகளை நாம் பகிரங்கப்படுத்தினோம். அதுமட்டுமன்றி இலங்கையில் அரசினால் இந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கும் எமது அறிக்கையை நாம் அனுப்பி வைத்தோம். எம்மை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விடயம் என்னவென்றால் இலங்கை அரசோ, தாம் நியமித்த குழுவின் அறிக்கையைக்கூட பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்பதாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை உறுதிப்படுத்துவதோடு அதற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதையும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

குற்றவியல் தொடர்பான நீதிப்பொறிமுறையையே பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் நீதியை நிலைநாட்டும் ஆர்வம் இல்லாத ஒரு பின்புலத்தில் பொறுப்புக்கூறலை எப்படி முன்னெடுக்கலாம் என்று நாங்கள் சிந்தித்தோம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் நாங்கள் எப்படிச் செயலாற்றலாம் என எண்ணிப்பார்த்தோம். இவ்விடயங்கள் தொடர்பாக பல மூலோபாயங்களை நாங்கள் வகுத்தோம். உண்மையை மீட்டெடுக்கும் செயற்பாடு அவற்றிலே முக்கியமானதொன்றாக இருந்தது. போரிலே குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட முடிவு செய்தோம்.

இவ்வாறாகத்தான் போர்க்குற்றங்களைப் புரிந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான ஆவணக்கோப்புகளை மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் வெளியிடத் தொடங்கினோம். போர்க்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்பை வகித்த ஜகத் ஜயசுரிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தூதுவராகப் பணியாற்றத் தொடங்கினார். இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிச் சட்டங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தொடங்கினோம். யாரோ சிலர், ஒருவேளை பிரேசில் நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினராகக்கூட இருக்கலாம் அவருக்கு முன்கூட்டியே தகவலைக் கொடுத்துவிட்டார்கள்.

இதனால் அவர் திடீரென லத்தீன் அமெரிக்க நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் திடீரெனத் தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை உற்றுநோக்கும் போது அங்கு நீதி நிலைநாட்டப்பட்டதையே நாம் உணருகின்றோம். உண்மையிலே ஜகத் ஜயசுரிய தானாக விரும்பி நாட்டுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து அங்கு தங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அங்கு இருந்தது. அவர் திடீரென நாடுதிரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் மிகவும் குழப்பமடைந்திருந்தார். அப்போது அவர் சொன்ன முதல் விடயம் தன்னால் இனிமேல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாதென்பதும் அமெரிக்காவுக்கு இனி ஒருபோதும் தன்னால் பயணம் மேற்கொள்ள முடியாதென்பதையும் குறிப்பிட்டார்.

அவர் தப்பிச் சென்ற காரணத்தினால் அவர் மீது வழக்கைத் தொடர்வதில் நாம் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது பெயர் பட்டியலில் இருக்கிறது. அவரால் இலங்கைக்கு வெளியே பயணங்களை மேற்கொள்ள முடியாது. அப்படி அவர் பயணஞ் செய்தால் அவர் கைதுசெய்யப்பட்டு பிரேசிலுக்கோ அல்லது ஏதாவதொரு இலத்தீன் அமெரிக்க நாடொன்றுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்து அவருக்கு இருக்கிறது. இரண்டாவதாக சவேந்திர சில்வா தொடர்பாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். இவரை இலங்கை அரசு ஒரு முக்கிய பதவிக்கு நியமித்திருந்தது. சவேந்திர சில்வா தொடர்பாக நாங்கள் ஒரு விரிவான ஆவணக் கோப்பைத் தயாரித்தோம். ஏனென்றால் சவேந்திர சில்வா யார் என்பதையும் போர்க்காலத்தில் அவர் எப்படிப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதையும் பொதுவாக எல்லோரும் மறந்திருந்த நிலையே காணப்பட்டது.

அவர் பற்றிய ஆவணக் கோப்பை நாங்கள் பகிரங்கப்படுத்திய போது பல நாடுகளின் அரசுகளிடமிருந்தும் எங்களுக்குப் பல அழைப்புகள் வந்தன. சவேந்திர சில்வா பற்றிய ஆவணக் கோப்பின் ஒரு பிரதியை தமக்கும் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டிருந்தார்கள். அவர் தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்யும் தறுவாயில் தாம் அவருக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்ற முடிவை மேற்கொள்ளும் கடப்பாடு அந்த அரசுகளுக்கு இருக்கிறது. இந்த ஆவணக் கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களின் காரணமாக பல அரசுகள் அவருக்கு விசா வழங்க மறுக்கும் என்றே நான் கருதுகின்றேன். ஒரு போர்க்குற்றவாளியாக சவேந்திர சில்வா குற்றம் சாட்டப்படக்கூடிய நிலை இருப்பதை இந்த ஆவணக்கோப்பு சுட்டிக்காட்டுகின்றது. மே பதினெட்டாம் திகதி எமது இணையத்தளத்தில் இந்த அறிக்கையை பதிவேற்றம் செய்த பின்னர் வோஷிங்டனுக்கு நான் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன். அங்குள்ளவர்கள் அந்த அறிக்கையைப் பார்த்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் போரின் போது நடைபெற்ற விடயங்களைப் பலர் இப்போது மறந்துவிட்டார்கள்.

இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் விளைவாக போரிலே இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒரு முக்கியமான விடயம் என்பதை நாம் இனங்கண்டு கொண்டோம். இதன் விளைவாக இணையத்தளத்தில் ஒரு செயற்பாட்டை நாம் முன்னெடுத்திருக்கிறோம். இவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற பற்றிக் போல் என்பவரது உதவியை நாம் நாடியிருக்கிறோம்.

மே 17, 18, 19 ஆகிய திகதிகளில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டு அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கையை நாம் கணக்கிடும் போது அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒரு உறுதியான முடிவுக்கு நாம் வரக்கூடியதாக இருக்கும். இன்றும் கூட யார் உண்மையில் உயிரோடு இருக்கிறார்கள்? யார் இறந்துவிட்டார்கள்? என்பதை எம்மால் கூறமுடியாதிருக்கிறது. எமக்குக் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் ஒளிநாடாக்களின் உதவியுடன் ஒரு சிலரது உடலங்களை நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மைதான்.

இது பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது. இதன் விளைவாகத் தான் இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு பட்டியலை உருவாக்க நாம் முடிவுசெய்தோம். இத்தருணத்தில் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளின் புகைப்படங்கள் உங்களிடம் இருக்குமாயின் அல்லது இராணுவத்திடம் யாரையாவது நீங்கள் கையளித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் அல்லது அக்காலப்பகுதியில் யாராவது இராணுவப் பகுதிக்கு செல்வதை நீங்கள் அவதானித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை தயவு செய்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

எமக்குக் கிடைக்கும் இத்தரவுகளைப் பயன்படுத்தி போரின் இறுதி நாட்களில் உண்மையில் எவ்வளவு பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வரக்கூடியதாக இருக்கும். எமது இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 350 தனிநபர்களின் விபரங்களை நாம் பதிவேற்றம் செய்திருக்கிறோம். இவர்களில் 29 பேர் சிறுவர்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எமக்குக் கிடைத்த தரவுகளை நோக்கும் போது கிட்டத்தட்ட 500 பேர், போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்று இவ்விடயத்தில் நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் பற்றிக் போல் எமக்கு அறியத்தருகிறார்.

http://thinakkural.lk/article/31018

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.