Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்: புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்: புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல்

ஏப்ரல் 28, 2007

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி ஐந்து மீனவர்களை சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போயுள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களும், விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தமிழக டிஜிபி முகர்ஜி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களையும் இலங்கை கடற்படைதான் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. மேலும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களையும் காணவில்லை. அவர்களையும் இலங்கை கடற்படையே கடத்திச் சென்றிருக்க வேண்டும் என கருதப்பட்டது.

கடந்த மாதம் 4ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளக்கரையிலிருந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், தூத்துக்குடி மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 12 பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில்தான் கடந்த மாதம் 29ம் தேதி சின்னத்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

இந்த நிலையில், மீனவர்களை சுட்டுக் கொன்றது, கடத்திச் சென்றது விடுதலைப் புலிகள் அமைப்பின் கடல் புலிகள் பிரிவு என தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக டிஜிபி முகர்ஜி விளக்கிக் கூறியதாவது

கடலோரக் காவல் படையிடம் கடந்த 11ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் 6 இலங்கைத் தமிழர்கள் பிடிபட்டனர். மரியா என்ற பெயர் கொண்ட பழுதடைந்த படகுடன் அவர்கள் பிடிபட்னர்.

அவர்களுக்கு உதவி செய்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரும் பிடிபட்டனர். அவர்கள் பயன்படுத்தி 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மரியா என்ற பெயர் கொண்ட படகுதான் சம்பந்தப்பட்டிருந்தது என்பதால் பிடிபட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இதில் சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்களை அழைத்து படகை காட்டியும், அந்த இலங்கைத் தமிழர்களைக் காட்டியும் அடையாளம் கூறுமாறு கேட்கப்பட்டது.

ஆனால் அந்தப் படகு அல்ல என்றும், பிடிபட்ட இலங்கைத் தமிழர்களை தாங்கள் பார்த்ததில்லை என்றும் குமரி மீனவர்கள் கூறி விட்டனர். இதையடுத்து இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றத்திற்காக 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் மீதான சந்தேகம் போகவில்லை. இதையடுத்து வழக்கு கியூ பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போதுதான் பிடிபட்ட 6 இலங்கைத் தமிழர்களும் கடல் புலிகள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் நடுக் கடலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கப்பலில் இருந்து ஆயுதங்களை படகுகள் மூலம் புலிகளின் முகாமுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் போல பல குழுக்கள் இதுபோல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த 10ம் தேதி மரியா என்று எழுதப்பட்ட படகில் ஆயுதங்களை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு பழுதாகி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டது.

பின்னர் ஆயுதங்களை கடலில் போட்டு விட்டு, அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களும் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் 4ம் தேதி கேரளாவிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களும் புலிகளின் பிடியில் இருப்பதாகவும் பிடிபட்ட 6 பேரும் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் அவர்களுக்கு அவசரமாக படகு தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 பேரையும் பிடித்து புலிகளின் முகாமுக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களது படகை பயன்படுத்தியுள்ளனர்.

இதேபோல கடந்த மாதம் 29ம் தேதி சின்னத்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவர்ளை சுட்டுக் கொன்றதும் கடல் புலிகள் பிரிவினர்தான். புலிகளின் ஒரு பிரிவினர் ஆயுதங்களுடன் படகில் சென்று கொண்டிருந்தபோது குமரி மீனவர்கள் அங்கு வந்துள்ளனர். படகில் என்ன இருக்கிறது என்று பார்க்க முயன்றுள்ளனர்.

தங்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சந்தேகித்த கடல் புலிகள் பிரிவினர் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே மரியா படகில்தான் தூத்துக்குடி அருகே பிடிபட்ட ஆறு இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர் என்று முகர்ஜி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த வகையான வன்முறைச் செயலிலும் புலிகள் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேரைக் கொன்றதும், 12 பேரைக் கடத்திச் சென்றதும் விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவு எனத் தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/28/fishermen.html

விட்டலாச்சார்யாவின் படம் பார்த்தது போல் இருக்கிறது திரு.முகர்ஜியின் புனை கதை.

அண்ட புளுகனுக்கு மேலாம் ஆகாச புளுகன்! அவனையும் வென்ற புளுகனுக்கு பேராம் முகர்ஜி.

இது எங்கள் தமிழக மீனவ சகோதரர்களை விடுதலை புலிகளுக்கு எதிராக திருப்பி விட இந்திய புலனாய்வு துறையினர் செய்யும் திட்டமிட்ட சதி.

இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி தமிழக மீனவர்களின் உயிரை இந்திய புலனாய்வுத்துறை பலி எடுத்து விட்டு, அந்த பழியை விடுதலை புலிகள் மேல் போடப் போகிறது.

வேலியே பயிரை மேய்கிறது என்பது இதை தான்!

மேலும் பல அப்பாவி தமிழக மீனவர்களின் உயிர்களை தங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்கு இந்திய புலனாய்வுத்துறையும் ரோவும் பலியிடும் சதியை தடுக்க தமிழக மக்களும் தமிழ் உணர்வாளர்களும் விரைந்து செயற்பட வேண்டிய தருணம் இது.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும் பயங்கரவாதம் இன்று நேற்றல்ல, விடுதலை புலிகள் இயக்கம் தோன்ற முன்பே, 70 களில் கச்சதீவை சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்த காலங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது. இது இந்த புலனாய்வுத்துறை மேதைகளுக்கு தெரியாததல்ல. இது தமிழக மீனவர்களுக்கும் தெரியாததல்ல.

தன் சொந்த மக்களையே முட்டாள்களாக நினைத்து இப்படியான புனைகதைகளை அவிழ்த்து விடுவது, இந்திய ஒருமைப்பாட்டை கேலிக்கூத்தாக்கவும், இந்திய புலனாய்வுத்துறையின் நம்பகத்தன்மையை நாசப்படுத்தவும் தான் உதவும்.

kiya ji Mukerjee aap ithna jute bol rah hai. Dharma will win Mr.Mukerjee, not your white lies.

"Dharma samsthaaban-aarthaaya sambavaami yuke yuke"

Dont forget those lines from Geetha Mr.Mukerjee.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்று முகர்சி நினைக்கின்றார் போல. 1.மரியா படத்தில் பிடிபட்டவர்கள் முதலில் சிங்களவர்களாக இருந்து, பிறகு எவ்வாறு தமிழராக மாறினார்கள்??

2. காயமடைந்த மீனவர்கள், தங்களைச் சுட்டவர்கள் சிங்களவர்கள் என்று சொன்ன பின்பு எப்படி இவர் இவ்வாறு பொய் திரிக்க முடியும்?

3. மரியா படகில் பிடிபட்டவர்கள் மொத்தம் 12 பேர். அதில் 6 பேர் தமிழர்கள் என்றால் மிகுதி 6 பேரும் எங்கே?

இவ்வாறு பல கேள்விகளை பல தமிழகப் பத்திரிகைகளே கேட்டிருக்கின்றன.( அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்) ஆனால் இதை எல்லாம் மீறி முகர்சி பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் எனச் சிந்திக்கின்றார். இவர் சதி வலைக்குள் அகதியாகச் சென்ற எந்த அப்பாவி மாட்டுப்பட்டார்களோ தெரியவில்லை.

சிங்கள அரசு இது வரைக்கும் 200க்கு மேற்பட்ட மீனவர்கள் உயிர்களைக் கொன்றபோதும், அவற்றைக் கண்டிக்க துப்பில்லாத மத்திய அரசு, எம்மைப் பலிக்கடா ஆக்க முயல்கின்றது.

இவர்களால் தமிழக மீனவர்களை சிங்கள இராணுவத்திடம், சிங்களக் கடையார்களிடம் இருந்து பாதுகாக்க முடியவில்லை. அதை விட்டுப் போட்டு, எதற்கெடுத்தாலும் ஈழத்தவனின் தலையை உருட்டலாம் என்றோ, எம்மைக் கிள்ளுக்கிரை என்றோ நினைக்காதீர்கள்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கானது. அது இந்தியத் தமிழர் மக்களைக் கொன்று என்றைக்குமே பலனடையாது. அவர்களும் எம் இரத்த சொந்தங்களே. இந்திய அரசால் சிங்களக் கடையர்களிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்றத் துப்பில்லை என்பதை ஒத்துக் கொண்டால் எமது அதிகபட்ச பலத்தினைப் பாவித்து, தமிழகமீனவர்களைக் காப்பாற்ற தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால் தமிழக மீனவர்கள் நம்மவர்கள்.அப்பாவிகள். அவர்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

Edited by மோகன்

குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்: புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல்

ஏப்ரல் 28, 2007

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி ஐந்து மீனவர்களை சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போயுள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களும், விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தமிழக டிஜிபி முகர்ஜி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களையும் இலங்கை கடற்படைதான் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. மேலும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களையும் காணவில்லை. அவர்களையும் இலங்கை கடற்படையே கடத்திச் சென்றிருக்க வேண்டும் என கருதப்பட்டது.

கடந்த மாதம் 4ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளக்கரையிலிருந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், தூத்துக்குடி மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 12 பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில்தான் கடந்த மாதம் 29ம் தேதி சின்னத்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

இந்த நிலையில், மீனவர்களை சுட்டுக் கொன்றது, கடத்திச் சென்றது விடுதலைப் புலிகள் அமைப்பின் கடல் புலிகள் பிரிவு என தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக டிஜிபி முகர்ஜி விளக்கிக் கூறியதாவது

கடலோரக் காவல் படையிடம் கடந்த 11ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் 6 இலங்கைத் தமிழர்கள் பிடிபட்டனர். மரியா என்ற பெயர் கொண்ட பழுதடைந்த படகுடன் அவர்கள் பிடிபட்னர்.

அவர்களுக்கு உதவி செய்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரும் பிடிபட்டனர். அவர்கள் பயன்படுத்தி 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மரியா என்ற பெயர் கொண்ட படகுதான் சம்பந்தப்பட்டிருந்தது என்பதால் பிடிபட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இதில் சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்களை அழைத்து படகை காட்டியும், அந்த இலங்கைத் தமிழர்களைக் காட்டியும் அடையாளம் கூறுமாறு கேட்கப்பட்டது.

ஆனால் அந்தப் படகு அல்ல என்றும், பிடிபட்ட இலங்கைத் தமிழர்களை தாங்கள் பார்த்ததில்லை என்றும் குமரி மீனவர்கள் கூறி விட்டனர் :lol::lol::lol: . இதையடுத்து இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றத்திற்காக 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் மீதான சந்தேகம் போகவில்லை. இதையடுத்து வழக்கு கியூ பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போதுதான் பிடிபட்ட 6 இலங்கைத் தமிழர்களும் கடல் புலிகள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் நடுக் கடலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கப்பலில் இருந்து ஆயுதங்களை படகுகள் மூலம் புலிகளின் முகாமுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் போல பல குழுக்கள் இதுபோல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த 10ம் தேதி மரியா என்று எழுதப்பட்ட படகில் ஆயுதங்களை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு பழுதாகி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டது.

பின்னர் ஆயுதங்களை கடலில் போட்டு விட்டு, அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களும் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் 4ம் தேதி கேரளாவிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களும் புலிகளின் பிடியில் இருப்பதாகவும் பிடிபட்ட 6 பேரும் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் அவர்களுக்கு அவசரமாக படகு தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 பேரையும் பிடித்து புலிகளின் முகாமுக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களது படகை பயன்படுத்தியுள்ளனர்.

இதேபோல கடந்த மாதம் 29ம் தேதி சின்னத்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவர்ளை சுட்டுக் கொன்றதும் கடல் புலிகள் பிரிவினர்தான். புலிகளின் ஒரு பிரிவினர் ஆயுதங்களுடன் படகில் சென்று கொண்டிருந்தபோது குமரி மீனவர்கள் அங்கு வந்துள்ளனர். படகில் என்ன இருக்கிறது என்று பார்க்க முயன்றுள்ளனர். தங்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சந்தேகித்த கடல் புலிகள் பிரிவினர் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். :D: :Drolleyes: அதே மரியா படகில்தான் தூத்துக்குடி அருகே பிடிபட்ட ஆறு இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர் என்று முகர்ஜி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த வகையான வன்முறைச் செயலிலும் புலிகள் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேரைக் கொன்றதும், 12 பேரைக் கடத்திச் சென்றதும் விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவு எனத் தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/28/fishermen.html

இதெல்லாம் றோ நடத்தும் நாடகங்களின் பாகங்கள்--இன்னும் தொடரும்

தமிழ்நாட்டு மக்களுக்கும் அது நல்லாத்தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று சட்டசபையில் பேசிய கலைஞர் '' தமிழக மீனவர்கள் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செயல் அதிர்ச்சி அளிப்பதாக குறிபிட்டார்.

மேலும் தமிழக பொலிசார் மரியா வள்ளத்தில் வந்த 6 இலங்கை தமிழர்களை விசாரித்த போது அவர்கள் மேற்படி சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்களின் உதவியுடன் வன்னியில் உள்ள புலிகளின் புலனாய்வு துறையுடன் தொடர்புகொண்டு சில மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக கருதப்படும் 12 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை தாம் விடுவிப்பதாக புலிகள் தமிழக பொலிசாருக்கு உறுதியளித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நல்ல நாடகம் நடக்குது.

-திரையில் வரும் பாத்திரங்களுக்குரிய முறைசார் நடிகர்கள் பொதுவாழ்வில் நடிப்பதில்லை. இவர்கள் நடித்ததாக திரையில் வரும் காட்சிக்காக மீண்டும் மீண்டும் பல தடவை எடுக்கப்பட்டு வடித்தெடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பையே பொதுப் பார்வையாளர் பார்த்து கிறக்கமுறுவர்.

ஆனால் பதவிச் சிம்மாசனமேறியவர்களும் அதிகாரக் கதிரைகளில் இருப்பவர்களும் பொதுவாழ்வில் நடிக்காமல் இருப்பதில்லை. இவர்களது ஆற்றல் நேரடிக் காட்சியாக வெளிவருவது. இவர்கள்தான் முழுநிலை நடிகர்கள். இவர்களுக்கென்று பொது நிகழ்ச்சி நிரல் எப்போதுமே இருக்கும். ஒரு செம்மையான திட்டம் எப்போதும் இருக்கும்.

இவற்றைப் பார்க்காது வெறுமனே நோக்கினால் உணர்ச்சிவசப்பட்டு பொதுமகன் தடுமாறிவிடுவான்.

நிதானமாக சீர்தூக்கிப் பார்க்க எல்லாமே தெளிவடையும். இதற்காக அலட்சியம் கொள்ளக் கூடாது.

சொந்த நாட்டு மக்களின் (காவிரி நதிப்பிரச்சனையில் எலிக்கறி சாப்பிட்ட மக்கள் - மீன் பிடித்து வாழ்தலை நீண்ட காலமாக தொழிலாகக் கொண்ட தென் தமிழக மக்கள்) நலனில் அக்கறைகொள்ளாத அதிகாரவர்க்கமும் அரசியலாளர்களும் அண்டைநாட்டு மக்களது நலனில் எவ்வாறு கரிசனம் கொள்ள முடியும்? சிங்களத்திற்கும் தமிழுக்கும் வேறுபாட்டையே அறியமுடியாத அதிகாரிகள் பலரை இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் காணவில்லையா?

எல்லாவற்றுக்கும் காலம் கனத்த பதிலைத் தெரிவிக்கும். இதற்கானவற்றை செய்வோம்.

குமரி கடலில் சுட்டது புலிகள்: இப்போது சொல்கிறது போலீஸ்

Created On 28-Apr-07 11:24:42 AM

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரை கடந்த மாதம் 29-ம் தேதி சுட்டுக்கொன்றது விடுதலைப்புலிகள் என்று தமிழக போலீஸ் தலைமை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரியா என்ற படகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்களைத் தாக்கியதாக கொல்லப்பட்டவர்களுடன் தாக்குதலுக்கு உள்ளான சக மீனவர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி அருகே இம்மாதம் 11-ம் தேதி பிடிபட்ட மரியா என்ற படகு, அந்த படகு இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால், தமிழகத்தின் சில பத்திரிக்கைகளும் , வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞான சேகரன் போன்றோரும் இது குறித்து சந்தேகம் எழுப்பியபடி இருந்தனர்.

இந்த நிலையில் , தூத்துக்குடியில் பிடிபட்ட ஈழத் தமிழர் மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் , புலிகள்தான் சுட்டனர் என்றும் காணாமல் போன 12 மீனவர்களை அவர்கள் தான் வைத்துள்ளனர் என்றும் தமிழக போலீஸ் கூறுகிறது.

an-thimazai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.