Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்களின் காணிகளை விடுவிப்பதன் மூலம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் காணிகளை விடுவிப்பதன் மூலம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா

தமிழ்மக்களின் காணிகளை சுவீகரிப்பதன் மூலம் சமாதானத்தையே பாதுகாப்பையே ஏற்படுத்தாது காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகமாற்றும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தினரின் பிடிக்குள் இருப்பது அநீதியாகவுள்ளது. அந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். நிலங்களை அபகரிப்பதும் இராணுவக் கட்டுப்பட்டில் வைத்திருப்பதும் இந்த நாட்டில் சமாதானத்தையே பாதுகாப்பையே பெற்றுத் தராது. எமது மக்களுக்கு தமது சொந்த நிலங்களில் மீளக்குடியமர வைப்பதும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதன் மூலம்தான் சமாதானத்தை பாதுகாப்பையும் ஏற்படுத்துமுடியும்.

59682616_2359056400820686_45143166230410

இந்தியப் பிரதமர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தபோது இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை அது இந்தியாவுக்கும் விடுவிக்கப்பட்ட எச்சரிக்கையாகும். எனத் தெரிவித்துள்ளார். ஆகையால் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு அந்த மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும்.

மேலும் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றமடையச் செய்கின்றபோது மக்களின் காணிகளை சுவீகரிக்கக்கூடாது ஏற்கெனவே இந்தியாவின் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது போதிய நிலம் உள்ளதாகவே தெரிவித்துள்ளனர். எனவே நிலங்கள் தேவை எற்படின் அவை தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கமுடியும்.

மேலும் இராணுவத்தினரின் வசம் பிரதான இரண்டுவீதிகள் விடுவிக்கப்படாத நிலையிலுள்ளது குறித்த வீதிகளை விடுவிப்பதன் மூலம் மக்களின் போக்குவரத்து இலகுவாகும். எனவே இதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

https://www.virakesari.lk/article/59860

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.