Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கு இந்தியா உதவுமென இன்னும் நாம் உறுதியாக நம்புகிறோம்

Featured Replies

"போராட்டத்தில் தோல்வியடைந்தாலும் இலங்கைத் தமிழர்கள் இன்னுமே நம்பிக்ைக இழக்கவில்லை"

சிக்காகோ மாநகரில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் 'அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் உரை

குழப்ப நிலையில் இலங்கை அரசியல் தமிழர் பிரச்சினை புறந்தள்ளப்படுகிறது. தலைவர்கள் பலருக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது புரியவில்லை

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிக்காகோ மாநகரில் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ் ஆய்வாளராக இலங்கையில் இருந்து கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பல்வேறு உரைகளை நிகழ்த்தியதுடன் ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

இம்மாநாட்டின் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32ஆம் ஆண்டு விழாவாகவும், சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் 50வது ஆண்டுப் பொன்விழாகவும் அமைந்திருந்தன.

முதல் நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக 'உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம்' என்ற ஒரு மணித்தியால நிகழ்வு பொது அமர்வாக இடம்பெற்றது. இதில் இலங்கைத் தமிழர் சார்பாகக் கலந்து கொண்ட தமிழ்நேசன் அடிகளார், இன்றைய இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாகவும்,தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் உரையாற்றினார்.

இந்த அமர்வில் உலகெங்கும் இருந்து வருகை தந்திருந்த நான்காயிரத்திற்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் கூடியிருந்தனர். இந்த அமர்வில் ஐ.நா.வின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த திருமதி நவநீதம்பிள்ளை, நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் உருத்திரகுமார் மற்றும் தமிழ்நாட்டு பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்நேசன் அடிகளார் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இலங்கை நாட்டின் வன்னி மண்ணின் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு கத்தோலிக்க குருவாக நான் இங்கு வந்திருக்கிறேன். முப்பது ஆண்டு காலப் போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் எனது மக்களின் பிரதிநிதியாக நான் உங்கள்முன் நிற்கின்றேன். இன்றைய இலங்கை நாட்டின் நிைலவரம் குறித்து, அங்குள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முப்பது ஆண்டு காலப் போரின் வடுக்களில் இருந்தும் அதன் உச்சமாகிய முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்தும் இன்னும் ஈழத்தமிழர்கள் மீண்டு வரவில்லை. எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நிகழ்த்தப்பட்ட 30 வருட கால அகிம்சைப் போராட்டம், அதைத் தொடர்ந்த 30 வருட கால ஆயுதப் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை, மனம் உடைந்து போகவில்லை! முள்ளிவாய்க்கால் என்பது எமது உரிமைப் போராட்டத்தின் முடிவு அல்ல. அது இன்னுமொரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றே நாம் கருதுகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்தேறி 10 வருடங்கள் கடந்த நிலையில் ஈழத்தமிர்களின் வாழ்வியலில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் கண்ணீர்க் கதைகள், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு வீதிகளில் கதறி அழும் தாய்மார்கள், அரசியல் கைதிகளாக பல்லாண்டுகள் வழக்கு விசாரணைகள் இன்றி இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்கள், அவர்கள் எப்போது வருவார்கள்? என ஏங்கி நிற்கும் குடும்ப உறவுகள், தமது சொந்த வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தமது சொந்த மண்ணில் குடியேறக் காத்திருக்கும் தமிழ்க் குடும்பங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள், போரின் போது உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள், வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்கும் வறுமையுற்ற குடும்பங்கள், விதவைகள், கல்விக்காக ஏங்கி நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள் என தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்கதையாகத் தொடர்கின்றன.

போர்க்குற்றங்கள் மற்றும் மனுக்குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதில் தமிழர்கள் இன்னும் உறுதியோடு இருக்கின்றார்கள்.மிகப் பெரும் எதிர்பார்ப்போடு இலங்கையில் 'நல்லாட்சி அரசை' நாம் அரியணை ஏற்றினோம்.ஆனால் இன்று எமது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகிப் போய் விட்டன. ஒரு நாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சுமுகமான உறவுநிலை இல்லை என்றால் அது எத்தகைய பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இலங்கை நாடு ஒரு சிறந்த உதாரணம்.

இன்று இலங்கை அரசியலில் ஒரு குழப்பமான நிலையே காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்றே புரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு முன்நகல் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படை வாதம், இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற இன்றைய இலங்கைச் சூழ்நிலையில் தமிழர் பிரச்சினை புறந்தள்ளப்படுகின்ற அல்லது மறக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.

பெரும்பாலபன தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகளில் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தமிழர்கள் ஒரு புதிய சுயநலமற்ற, தீர்க்கதரிசனம்மிக்க தலைமைைய எதிர்பார்க்கின்றனர். சலுகைகளுக்கு விலைபோகாத, தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக் கொடுக்காத, தமிழ்த் தேசிய உணர்வுமிக்க புதிய இளம் தமிழ்த் தலைவர்கள் மேலெழ வேண்டும் என இலங்கைத் தமிழர் எதிர்பார்க்கின்றனர்.

இன்று உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள தமிழ் இளந்தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மொழிகளைக் கற்று அந்த மொழிகளிலேயே கல்வியையும் கற்கின்றனர். இந்த இளம் தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைமைகளுக்கு அவர்களின் மொழியிலேயே ஈழத்தமிழர் பிரச்சினையின் உண்மையான யதார்த்தத்தை எடுத்துக் கூற வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு ஈழத்தமிழ்ப் பிரச்சினையின் அடிப்படையை, இன்றைய யதார்த்தத்தை எடுத்துக் கூற வேண்டும்.

ஈழம் எமது தாய்நாடு என்றால் இந்தியா எமது தந்தையர் நாடு. தென்னாசியாவில் வல்லாதிக்க சக்தியாக விளங்கும் இந்தியப் பெருநாடு ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில காத்திரமான வகிபாகத்தை ஆற்ற முடியும் என நாம் இன்னும் உறுதியாக நம்புகின்றோம். தனது இந்தத் தார்மீகக் கடமையில் இருந்து இந்தியா விலகி நிற்கக் கூடாது.

எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ் நாட்டுத் தமிழர்கள் குறிப்பாக தமிழின உணர்வாளர்கள் கடந்த காலத்தில் எமக்காகக் குரல் கொடுத்ததை நாம் நன்றியோடு நினைக்கின்றோம்.

தொடர்ந்தும் உங்கள் குரலை எமக்காக நீங்கள் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அன்புரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான அரசியல் உரிமைகளை இலங்கையின் எந்த அரசாங்கமும் தந்ததுமில்லை, இனித் தரப்போவதும் இல்லை.

இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் நலன் சார்ந்து சுயநலத்தோடுதான் சிந்தித்து செயலாற்றுகின்றன. அன்றும் இன்றும் இதுதான் யதார்த்தம். இந்நிலையில் எமது உரிமைகளை நாம்தான் போராடிப் பெற வேண்டும்.

https://www.thinakaran.lk/2019/07/09/கட்டுரைகள்/36916/ஈழத்தமிழருக்கு-இந்தியா-உதவுமென-இன்னும்-நாம்-உறுதியாக-நம்புகிறோம்

8 minutes ago, ampanai said:

ஈழம் எமது தாய்நாடு என்றால் இந்தியா எமது தந்தையர் நாடு. தென்னாசியாவில் வல்லாதிக்க சக்தியாக விளங்கும் இந்தியப் பெருநாடு ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில காத்திரமான வகிபாகத்தை ஆற்ற முடியும் என நாம் இன்னும் உறுதியாக நம்புகின்றோம். தனது இந்தத் தார்மீகக் கடமையில் இருந்து இந்தியா விலகி நிற்கக் கூடாது.

நல்லதொரு உரையில் இப்படியான போலிக் கருத்துக்களையும் போலியான நம்பிக்கைகளையும் ஈழத்தமிழர் தவிர்க்கும்வரை தமிழரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கத்தான் செய்வார்கள்.

அகிம்சை எனும் போலி முகமூடியை அணிந்தபடி எல்லை தாண்டிய பயங்கரவாதங்களிலும் தமிழின அழிப்பிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இந்தியாவின் சுயரூபத்தை வெளிப்படுத்த தவறியாமையே தமிழினத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி தடைப்படுவதற்கான சில காரணங்களில் ஒன்றாகும். இந்த போலி முகத்திரை கிழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.