Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமம்..... #உலக_முஸ்லிம் வரலாற்றின்_உன்னத_அடையாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனரகல மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கொழும்பில் இருந்து 228 KM தூரத்தில் உள்ள இடமே கதிர்காமம். இது இலங்கையின் நான்கு இன மக்களாலும் புனிதமாக மதிக்கப்படும் பிரதேசம், இதில் பல்வேறு சமய நம்பிக்கைகளும், வரலாறுகளும், வழிபாடுகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தமக்கான இடமாக இதனைக் கருதுகின்றனர்...

ஆனால் குறித்த பதிவு கதிர்காமம் பற்றிய முஸ்லிம் ,பூர்வீக வரலாற்று ஆதாரங்களையும், வழக்காறுகளையுமே ஆராய்கின்றது,

#கதிர்காமம்_என்ற_பெயர்..

இவ் இடம் பாளி மொழியில் 'கஜரகம' என மகாவம்சத்தில் உள்ளது, அதே போல் சிங்களத்தில் 'கட்டரகம, தமிழில் கதிர்காமம், என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது அறபு மொழியில் "ஹிழ்ரகம் " என்று அழைக்கப்படுகின்றது இதன் அர்த்தம் ஹிழ்ர் இன் வசிப்பிடம் என்பதாகும், அந்தவகையில் ஹிழ்ர் நபி, எனவும், இறைநேசர் எனவும் அறியப்படும் ஹிழ்ர் அவர்களின் இடம் என்றே இஸ்லாமிய வரலாறு இவ் இடத்தை கூறுகின்றது,

#புராதனம்

குறித்த இடம் 125000 ஆண்டுகளுக்கு முந்திய மெசோலிதிக் கற்கால வேடுவ வழிபாட்டுக்குரிய ஆதாரங்களைக் கொண்ட இடம் என தொல்பொருள் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, பௌத்தர்களின் இங்குள்ள கிரிவெஹர கிமு, 1ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகின்றது,

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தில் ஆதம் அலை அவர்களின் வருகையுடன் தொடர்புடைய பல நபிமார்களின் வாழ்வுடன் இந்த இடம் தொடர்பு பட்டுள்ளது, முஹம்மது நபிக்கு முன்னரே பல நபிமார் இங்கு வந்ததாக நம்பப்படுகின்றது,

#யார்_இந்த_ஹிழ்ர்??

ஹிழ்ர் என்றால் பச்சை மனிதன் (Green man) என்பது அர்த்தம், இவர் ,ஒரு இறை நேசர், மூஸா எனப்படும் Moses இன் ஆசிரியர், அல்குர்ஆனின் #சூறதுல்_கஹ்ப்(The cave) எனும் அத்தியாயத்தில் இவர்பற்றிய ஆதாரங்கள் உண்டு, இவர் இயற்கையோடு வாழ்ந்த புனித மனிதர், இவரது இறை நேசத்தால் இறைவன் இவருக்கு "#மாஉல்_ஹயாத் " எனும் நிரந்தர வாழ்வை பரிசளித்தான்,

பாரசீக, துருக்கி,ஈராக் பாகிஸ்த்தானிய இலக்கியங்களில், உயிரினங்களின் நேசராக இவர் கருதப்படுகின்றார், மயில், சேவல், மீன் என்பன இவரது அடையாளங்களாகவும் கூறப்பட்டுள்ளது, இவர் இன்றும் உயிரோடு இருப்பதாகவும் இவரை #ஹயாத்து_நபி அப்பா என சாதாரண மக்கள் அழைக்கின்றனர் இன்னல்களின் போது அழைக்கின்ற வேளை ஆஜராவதாகவும் இன்றும் மக்கள் , நம்புகின்றனர்,

#ஸ்கந்தர்_எனும்_பெரியார்,

இந்து மரபிலும், பௌத்தத்திலும், ஸ்கந்தர், (ஸ்கந்த வழிபாடு) என அழைக்கப்படும் புனிதர், அறபிய வரலாற்றில் சிக்கந்தர் என அழைக்கப்படுகின்றார், இந்த சிக்கந்தரையே அல்குர்ஆன் துல்கர்னைன் நபி என அழைக்கின்றது, இவரை கிறிஸ்த்தவ வரலாறு Alexander the Great( கிமு,356-323) என அழைக்கின்றது,

இந்த சிக்கந்தர் எனப்படும் துல்கர்னைன் இந்த முழு உலகத்தையே ஆட்சி செய்தவர், அவருக்கு ஹிழ்ர் நபியின் உதவி தேவைப்பட்டிருக்கின்றது, அவரும் மரணமற்ற நிரந்தர வாழ்விற்காக முயற்சித்து,நிரந்தர உயிர்நீர் அதிசயத்தை அறிய ஹிழ்ருடன் இணைந்து பயணம் செய்து அவர்கள் இருவரும் தங்கி இருந்த இடமாகவும் இந்த கதிர்காமம் கருதப்படுகின்றது, இங்குதான் கருவாடாக இருந்த மீனை உயிர்ப்பித்தாகவும் நம்பப்படுகின்றது,

#கொடியேற்றமும், #மக்கள்_வருகையும்,

இங்குள்ள ஹிழ்ர் மகாம் எனும் இடத்திலும், பக்கீர்மடத்திலும் புனித நாட்களில் கொடி ஏற்றப்படுவதுடன், பல்லின மக்களும் ஒன்றிணைகின்றனர், அத்தோடு இந்த இடத்தில் முஸ்லிம்களின் நீண்டகால பல சியாறங்களும் பண்பாடும் உண்டு,

இது பற்றி 1870 ல் ஹம்பாந்தோட்டைக்கு அரசாங்க அதிபராக இருந்த Hudson அவர்களது பல எழுத்து ஆவணங்கள் உண்டு, அவர் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கால்நடையாகவும், பல வழிகளிலும் வந்து இந்த இடத்தில் உள்ள கங்கையில், குளித்து, அருந்தி மகிழ்வதாக குறிப்பிடுகின்றார் அதேபோல் இன்றுள்ள மாணிக்க கங்கையின் புனிதம் "மாஉல் ஹயாத் என்பதில் இருந்து தொடர்பு படுகின்றது என்ற நம்பிக்கையும் உண்டு,

#பால்குடிபாவா_சியாறம்

கதிர்காமத்தில் புனிதராக கருதப்படும் பால்குடிபாவா தொடர்பான பல அதிசயங்களை பல்லின மக்களும் நம்புகின்றனர், அதனால் காலா காலம் அவர் தத் தமது சமய மரபுகளுக்கு உரியவர் என உரிமை கோரப்படுவதுமுண்டு, அந்த வகையில் இதுபற்றி1991 ல்September 26 அன்று முஸ்லிம் தலைவர் Dr, MC Kaleel அவர்கள் டெய்லி நியூஸ் பத்திரிகையில் தட்டர்கிரி சுவாமி அவர்களுக்கு எழுதிய மறுப்பறிக்கை மிகவும் ஆதார பூர்வமானது, அதில் பால்குடி பாவா முஸ்லிம் சூபித்துவ மரபிற்குரியவர் என்பதற்கான பல ஆதாரங்களை அவர் முன்வைக்கின்றார்

#இருப்பியல்_ஆதாரம்

கதிர்காமம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உரிய புனித இடமாக இருக்கின்ற அதே வேளை முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஆதம் நபி தொடக்கம் பல நபிமார்களினதும், பல அற்புதங்களினதும், இறை நேசர்களினதும் உறைவிடமாகவும் அது உள்ளது.

அந்த வகையில் இந்த நாட்டில் எமது இருப்பிற்கும், ,உலக வரலாற்றில் இஸ்லாத்தின் தோற்றத்திலும் மிக முக்கிய இடமாக இருந்திருக்கின்
றது அதனைப் பாதுகாப்பதும், அதன் வரலாற்றை உயிர்ப்பிப்பதும், எமது கட்டாய கடமை மட்டுமல்ல, எமது சமயத்தின் தோற்றத்தின் பல சம்பவ இடங்களைக் பாதுகாத்த நன்மையையும் நமக்குத் தரும்

#எதிர்கால_நடவடிக்கை,

இதுபோன்ற பல இடங்களை சமய தூய்மைவாதிகளின் பிழையான வழிகாட்டல்களினால் முஸ்லிம்கள் இலங்கையில் கைவிட்டு வந்துள்ளனர், ஆனால் இனியும் இவ்வாறான இடங்களைக் கவனிக்காமல் விடுவது எமது எதிர்கால இருப்பிற்கான பாரிய அச்சுறுத்தலாக அமையும், எனவே தான் இவ்வாறான இடங்களுக்கு விஜயம் செய்வதுடன், இவை தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு, எமது எதிர்கால சந்த்தியினரும் இவ்வரலாறுகளை அறிந்து தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அனைவரும் ஒன்று பட்டு உதவ வேண்டியது எமது கட்டாய கடமையாகும்,

அத்துடன் இவ்வாறான இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வது இலங்கையர் என்ற அடிப்படையில் சிங்கள, தமிழ், வேடுவ மக்களுடன் எமது உறவைப் பலப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக அமைவதுடன் , எமது சமயத்தின் புராதன இடத்தையும் பார்வை இட்ட, பாதுகாத்த பெருமையையும்,சந்தோசத்தையும் எமக்குத் தரும் அத்தோடு எமது எதிர்கால சந்த்தியினருக்கான உதவியாகவும் அது அமையும் .

#எமது_புராதனங்களைப்_பாதுகாப்போம், #இலங்கையில்_எம்_இருப்பை #உறுதிப்படுத்துவோம்.

நன்றி முகனூல்

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
14:07:2019

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கடவுளான முருகனுக்கு என்னமா விளக்கம்.

இலங்கைக்கும் இஸ்லாத்துக்கும் என்ன சம்பந்தம்?! இங்க வந்து மதம்மாற்றி குடிபெருகிற்று என்னமா புலுடா விடுறாங்க!
அதுவும் சிரேஷ்ட விரிவுரையாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/15/2019 at 1:52 PM, colomban said:

roflphotos-dot-com-photo-comments-201710

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.