Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவுப் பிரச்சாரம் பற்றி

Featured Replies

பொதுவாகவே, பெரியாரிஸ்ருக்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் மீதான ஈடுபாடு நிறையவே உள்ளது. இப்பழக்கவழக்கங்களைத் தத்தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இதயசுத்தியான ஆசையும் இவர்களிடத்தில் உள்ளது. பொதுப்பட இந்தச் சாராரிடம் என்னைக் கவர்ந்த விடயங்கள் என சிலவற்றைக் கூறுவதானால், ஒரு விவாத்தில் இறங்குன் விவாதப்பொருள் தொடர்பில் சற்றேனும் தம்மைத் தயார் படுத்திக் கொள்ளல், தரவுகளைக் கடினமாக முயன்று திரட்டிக் கொள்ளல், தங்களது கொள்கையில் ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் குறைந்தபட்சம் பொது இடங்களிலேனும் நடந்து கொள்ளல், தமது பார்வையில் மக்களிற்குத் தீங்கு என்று தாம் நினைப்பனவற்றை, பொது நலத்திற்கு மேலால்--இன்னமும் சொல்வதானால் சில அர்ப்பணிப்புக்ளையும் செய்து--முன்னெடுத்தல்., தமிழர் கலாச்சாரம் வாழ்வியல் பண்பாடு என்பன தொடர்பான பல அரிய புராதன தகவல்களைச் சேர்த்தல் பாதுகாத்தல் என்பனவற்றைக் கூறலாம். இவ்வாறு இந்த கறுப்புச் சட்டைக் காரர்களிடம் நிறையவே மதிக்கப்படக் கூடிய குணங்கள் உள்ளன.

பல சமயங்களில், இவர்களுடன் கதைப்பது சுவாரசியமாகவும் பயன்படுவதாயும் இருப்பதாகவே நான் உணர்ந்துள்ளேன். உண்மையில் இவர்களுடன் முரண்படாது இவர்களுடன் சம்பாசிக்க வழிகள் இல்லையா என்ற ஆதங்கம் கூட எனக்குள் ஏற்படுவதுண்டு. எனினும், இவர்களுடன் கருத்துப்பகிர்ந்த எந்தவொரு கருத்தாடலும் முரண்பாடு முத்தாது முடிந்ததில்லை. இந்த நிலையில், என்னைப் பற்றி அதிகமாக சுயபரிசீலனையும் இவர்களைப் பற்றி எனது மட்டுப்படுத்தப்பட்ட அறிவிற்கேற்ப சில அவதானிப்புக்களையும் மேற்கொண்ட போது, இவர்கள் பற்றி எனக்குப் புலப்பட்ட சில எண்ணங்களை (என்னைப் பற்றி நான் அறிந்து கொண்டவற்றை எனக்கு நான் அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொள்கிறேன் .இங்கு அது தேவை இல்லை என நினைக்கின்றேன்) இங்கே கூறி எனது இந்தப் பதிவு எந்தெந்தக் காரணங்களால் வேடிக்கைக்குரிய வெறுங் குதர்க்கம் மட்டுமே என்று பெரியாரிஸ்டுகளிடம் இருந்து அறியும் நோக்கில் :lol: இந்தப் பதிவை இங்கே இடுகின்றேன்.

கிரிக்கெட் போதை

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, சடுகுடு, உரிமரம் ஏறுதல் என்பவற்றை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்கிறோமே, இது அன்னிய ஆக்கிரமிப்பு தந்த போதை அல்லவா எனத் தேனீர் குடித்தபடி குமுறுகின்றார்கள் பெரியாரிஸ்ட்டுக்கள் (கவனிக்க: இங்கு நான் சிறீலங்கா அணிக்கான தமிழரின் ஆதரவு பற்றிப் பேசவில்லை. கிரிக்கெட் என்ற விளையாட்டு பற்றி மட்டுமே பேசுகின்றேன்). சரி, இது குமுறப்பட வேண்டியது தான். எமது பெருமைகளையே மறந்து பதர்களாய்த்திரிகின்றோமே என்ற ஆதங்கம் நியாயமானது தான். ஆனால், இந்த ஆதங்கத்தின் அடிப்படையில் எழுந்த இவர்களது செயற்பாடு எவ்வாறு அமைகின்றது என்று பார்த்தால், தமிழா நீ மானங்கெட்டவனா? உன் சிறப்பை மறந்து நீ அந்நியனின் விழுமியம் போற்றலாமா? நீ ஒரு துளி மானமேனும் உள்ளவனானால் நீ கிரிக்கெட் ஆடலாமா? தொலைக்காட்சியினைத் தூக்கித் தூர எறிந்து விட்டு வெளிக்கிடு தோழா! வெண்மணலில் சடுகுடு ஆடிவிட்டு உரிமரம் ஏறுவோம் பின் நம்குலப் பெண்கள் தரும் பதநீர் பருகுவோம் என்று மேடைப்பேச்சும் எழுத்தும் மட்டுமே இவர்களது மேற்படி ஆதங்கத்தின் செயற்பாடாக அமைகிறது.

தொலைக்காட்சி வந்ததால் தான் கிரிக்கெட் பிரபலமானது எனப் புலம்பும் போது, தொலைக்காட்சியின் மீதான இவர்களின் ஆத்திரம் மட்டும் தான் வெளிப்படுகின்றதே அன்றி, இந்த புதிய தொழில்நுட்பத்தை எவ்வாறு நமது புராதன பழக்கவழக்கங்களைத் தக்கவைக்கப் பயன்படுத்தலாம் என இவர்கள் ஒரு போதும் நினைப்பதுமில்லை செயற்படுவதுமில்லை. அண்மையில் பெரியாரிஸ்ட் அங்கீகார முத்திரை பெற்று வெளிவந்த "இலக்கணம்" என்ற திரைப்படம் கூட வீடுகளில் தொலைகாட்சி இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் கருத்து முன்வைத்திருப்பது இவர்களின் மேற்படி சிந்தனைக்கு ஒரு எடுத்துக் காட்டு. சர்வாதிகாரத்தை எதிர்க்கின்றோம் அடக்கு முறையினை எதிர்க்கின்றோம் என்று கூறும் அதே நேரத்தில் சுதந்திர உலகில் நமது தரப்பு விருப்பு வெறுப்புக்களை நாம் சனரஞ்சகம் ஆக்காது போனால் எமது கருத்துக்கள் எடுபடாது என்ற அடிப்படையினைக் கூட இவர்கள் புரிவதாய் இல்லை. இவர்கள் நினைப்பது போன்று "சடுகுடு எமது புராதன விளையாட்டு எனவே அதைத் தான் நீ விளையாட வேண்டும்" என்ற உணர்ச்சியை மட்டும் அடித்தளமாகக் கொண்ட அறைகூவல் இவர்களது இலக்கு இளைஞனில் இவர்கள் ஏற்படுத்த நினைக்கும் மாற்றத்தை ஏற்படுத்தப் போதுமானதில்லை. சுதந்திர உலகில், திறந்த சந்தைப் பொருளாதாரத்தில் போட்டிகள் இருக்கும் என்பதனைப் புரிந்து கொண்டு, கள நிலையைப் புரிந்து செயற்பட்டாலே அன்றி இவர்களது கூச்சல்கள் வெறும் இம்சையாக மட்டும் தான் எப்போதும் பார்க்கப்டும் அபாயம் உள்ளது என்பதனை இவர்கள் உணர்வதாய் இல்லை.

அண்மையில் ஒரு கருப்புச்சட்டைப் பேராசிரியர் கிரிக்கட்டிற்கு எதிரான தனது வாதத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக, கிரிக்கெட் போட்டி பார்ப்பதனால் எவ்வளவு மின்சாரம் விரயமாகிறது இதைச் சேமித்து வைத்தால் எத்தனை நாட்களிற்கு இந்தியாவிற்கு மின்சாரம் வழங்கலாம் என்று கேட்டுள்ளார். பேராசிரியரின் நல்லெண்ணம் புரிகிறது என்றபோதிலும், வாதத்தின் வினைத்திறன் படு மோசமாக உள்ளது. நான் மேலே குறிப்பிட்டிருப்பது போன்று தொலைக்காட்சி புறக்கணிப்பு என்ற அபத்தமான இலக்கிற்குக் தான் பேராசரியரின் இந்த வாதமும் நாசூக்க்hக வக்காலத்து வாங்குகின்றது. இத்தகைய ஒரு வாதத்தின் அடிப்படையில் உரிமரம் ஏற இளைஞனை அழைத்தால் எவர் போவார்?

வடமொழியும் பார்ப்பனியம்

வடமொழியைத் திணிக்கிறார்கள், பார்ப்பனியர் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற கருத்துப் பற்றி இக்களத்தில் இனிமேல் விவாதிக்கப்படமுடியாது என்ற அளவிற்கு விவாதித்தாகி விட்டது என்ற காரணத்தால் இவ்விடயம் தொடர்பில் பெரியாரிஸ்ட் செயற்பாட்டாளர்களின் செயற்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதை மட்டும் கூறி விட்டு அப்பால் நகர்கின்றேன்.

பார்ப்பனியர்கள் என்பவர்கள் வடமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் தமிழையும் தமிழனையும் இழிவு படுத்துகின்றார்கள் என்றால், இது கருப்புச்சட்டைக்காரர்களிற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கணம் என்ற படம் பற்றிய கருத்துக்களை எழுத விளைகின்றேன்.

தமிழ்நாட்டுத் திரை இலக்கணத்தை அது மீறி விட்டத்து உண்மைதான்.

spiderman characters உடன் வரும் நாயகர்களின் படங்கள் தான் மக்கள் மனங்களை வெல்லத்தக்ககுது தமிழ்நட்டில் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

சமூகக் கண்ணோட்டத்தில் இது நல்லது என்றுசொல்லப் படவேண்டுமானால் அதன் தகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டியது வணீகரீதியில் அது தோற்கடிக்கப் பட்டிருப்பதும்.

எனவே இதுவே அதன் தரத்தை பறைசாற்றப் போதுமானது.

எமது சினிமாக்களை ஆங்கலப்படத்தின் தரத்துக்கு தணிக்கைக்கு கொடுத்தால் அனைத்துப் பகுதிகளும் குப்பையாகவே கொள்ளத்தக்கது.

எனவே இது முன்னேற்றகரமான சிந்தனையின் விளைவு என்று சொல்லவரவேண்டாம்.

காட்டூண் படம் பார்க்கும் உணர்வோடே தமிழ் ரசிகர்கள் சினிமாவைப் பார்க்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. எனவே இந்த தராதரங்களுடன் இலக்கணம் ஒப்பிடப் பட்டால் அதன் நிலை பரிதாபத்துக்குரியதுதானே.

  • தொடங்கியவர்

இலக்கணம் என்ற படம் பற்றிய கருத்துக்களை எழுத விளைகின்றேன்.

தமிழ்நாட்டுத் திரை இலக்கணத்தை அது மீறி விட்டத்து உண்மைதான்.

spiderman characters உடன் வரும் நாயகர்களின் படங்கள் தான் மக்கள் மனங்களை வெல்லத்தக்ககுது தமிழ்நட்டில் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

சமூகக் கண்ணோட்டத்தில் இது நல்லது என்றுசொல்லப் படவேண்டுமானால் அதன் தகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டியது வணீகரீதியில் அது தோற்கடிக்கப் பட்டிருப்பதும்.

எனவே இதுவே அதன் தரத்தை பறைசாற்றப் போதுமானது.

எமது சினிமாக்களை ஆங்கலப்படத்தின் தரத்துக்கு தணிக்கைக்கு கொடுத்தால் அனைத்துப் பகுதிகளும் குப்பையாகவே கொள்ளத்தக்கது.

எனவே இது முன்னேற்றகரமான சிந்தனையின் விளைவு என்று சொல்லவரவேண்டாம்.

காட்டூண் படம் பார்க்கும் உணர்வோடே தமிழ் ரசிகர்கள் சினிமாவைப் பார்க்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. எனவே இந்த தராதரங்களுடன் இலக்கணம் ஒப்பிடப் பட்டால் அதன் நிலை பரிதாபத்துக்குரியதுதானே.

வழமையான படங்களின் தன்மையில் இருந்து மாறுபட்டதும், வியாபாரரீதியில் தோற்றதும் ஒரு படம் முற்போகாகச் சிந்திக்கத் தொடங்கியிருப்பமைக்கு ஆதாரம் என்ற கருத்தினை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தமிழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்களின் உயர்மட்டங்கள் எல்லாம் ஒன்றிணைந்து உருவாக்கிய படம். அது மட்டுமல்ல இந்தப் படத்தைப் பாhக்க விழையும் ஓருவா படத்தைத் தானாகப் பார்ப்பதற்கு முன்னரே, இப்படமானது ஒரு திரைப்படம் என்றால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் ஆகும் என்று, ஒரு தமிழகத் தலைவர் முன்னுரை கொடுக்கின்றார். இந்நிலையில்,மேற்படி தமிழ் உணர்வாளர்களில் அதீத மரியாதை வைத்திருக்கும் ஒருவரிற்கு இப்படத்தின் பால் பாரிய எதிர்பார்ப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அத்தகைய எதிர்பார்ப்புடன் படம் பார்த்தபோது அங்கு வெளிப்படையாகத் தெரிந்த திரைக்தைத் தொய்வு, தொழில் நுட்பத் தொய்வு, பிற்போக்குத் தனமான செய்திகள் என்பன நிட்சயமாக பலத்த எதிர்பாhப்புடன் படம் பார்க்கத் தொடங்கியவரிற்கு அப்படத்தைப் பாராட்ட முடியாதவாறான ஒரு உணர்வைக் கொடுப்பது தவிர்க்க முடியாதது.

கச்சான் சுத்திய கடதாசயிலும்கூட சுவாரசியமான விடயங்கள் இருந்தால் படித்துப் பார்கும் பக்குவம் நம்மில் பல பேரிற்கு உள்ளது. எனவே தொழில் நுட்பம் முதலியவற்றை முற்றாக விட்டுவிடுவோம். நடிகர்கள் கூட முன்னணி நடிகர்கள் அல்ல என்பதனால் அவர்களது நடிப்புப் பற்றிய விமர்சனத்தையும் விட்டுவிடுவோம். மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற காரணத்தால் பட உருவாக்கத்தின் இதர பகுதிகளையும் கூட விட்டுவிடுவோம். வெறுமனே படம்சொல்லுகின்ற கருத்துக்களையும் செய்திகளையும் மட்டும் பார்த்தால் (மாபெரும்சிந்தனையாளர்களிற்க

Edited by Innumoruvan

எல்லாம் சரி நண்பர்களே! கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை பற்றிய கட்டுரைக்கு கொஞ்சம் வாருங்கள்... :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23001

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.