Jump to content

பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை


Recommended Posts

பதியப்பட்டது

பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை

'திராவிட நாடு பிரிய வேண்டு மென்று ஆந்திர, மலையாள கன்னட மக்கள் கவலைப்படவில்லை. வடமொழித் தொடர்பு அவர்கள் மொழியில் இருப்பதால் அவர்கள் வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்க மனநிலை இல்லாதவர்களாய் உள்ளனர்' (18-6-1955 தமிழ்நாடு)

என்கிறாரவர். திராவிட நாட்டுப் பிரிவுக்கு அவர் பல வருடங்கள் உழைத்தார். அவ்வழைப்புக்கு மூலமான தம் பகுத்தறிவை அவர் சரியாகப் பயன் படுத்தவில்லை. அவ்வுழைப்பு வீணாயிற்று. அவர் சலித்துவிட்டார். பிறகுதான் அவர் மூளையில் புதியதோர் பகுத்தறிவு உதித்தது. அதுவே அவ்வாக்கியம்.

'அந்த மூன்று போரட்டங்களிலும் நாம் தோல்வியைத்தான் அடைந்தோம்.' (19-8-1955 தமிழ்நாடு)

என்பது அவரது மற்றோ ரழுகை,

'மதம் அழிந்தால் அதன் மூலம் இதுவரை கட்டுப்படுத்தி வந்த பெரிய சாதனம் அழிந்தே விட்டதெனக் கூறலாம். எப்படிக் கடவுளை மதிக்காததால் மனிதன் மனத்தில் தோன்றும் குற்றமற்ற உள்ளுணர்வு மறைந்துவிட்டதோ அதேபோல் அரசன் மறைந்ததுடன் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு மக்கள் வைத்திருந்த மதிப்பு பயம் போய் விட்டதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்' (24-11-1955 தினமணி)

என்பது அவரது பிறிதோ ரழுகை. பல தமிழர் நாத்திகராகி அவர் கூறியது போலுமாயினர். அங்ஙனம் ஆக்கியவர் அந்த ராவே. அத்தீங்கை அவர் இப்போது உணர்கிறார். ஆகவே முட்டின பிறகு குனிவதுதான் அவரது பகுத்தறிவென்க. அந்த ராவைத்

'தமிழ் நாட்டிலே சிந்திக்கும் ஆற்றல். அதையும் பகுத்துக் கூறும் பண்பு அறிவுத் திறமை முதலியவை ஒரு சிலர்களுக்காவது ஏற்பட்டிருக்கிற தென்றால் அதற்குத் தமிழ்நாட்டின் ரூசோ ஈ.வே.ரா...... .......தான் காரணம்'

(21-1-1956 தமிழ்நாடு)

என்கிறார் அந்நவீனர். Milton's Paradise Lost என்பது ஓர் ஆங்கிலக் காவியம். அதில் கடவுளுக்கு விரோதியாகிய சாத்தான் வர்ணிக்கப்படுகிறான். அவனுடைய பகுத்தறிவு, பிரசாரம் அவற்றில் மயங்கி அவனது சுயமரியாதை யியக்கத்தில் உறுப்பின்ராய்ச் சேர்ந்த தேவதைகளின் பரிதாபகரமான வீழ்`ச்சி ஆகியவை அக்காவியத்தைப் படித்தார் அதிசயிக்கும்படி அபரிமிதமாய்ப் பேசப்பட்டுள்ளன. ஆயிரம் ரூசோக்களும் வால்டேர்களுமே அவனுக்கு ஈடாகார். அவனது பகுத்தறிவின் விளைவாகிய அவ்வியக்கம் அவனுக்கும் அவனுக்குத் தோழமை பூண்ட தேவதைகளுக்கும் என்ன பயனைத்தந்தது? அதை அக் காவியத்திற்காண்க. ஈ.வெ.ரா. அவ் வியக்கத்தையே தமிழகத்தில் ஆரம்பித்துப் பல வருடங்களாக நடத்தி வருகிறார். அதன் பலனென்ன? இற்றைவரைக் கிடைத்த பலனை மேலே காட்டிய அவர் வாக்கியங்களே புலப்படுத்துகின்றன. நாளைப் பலனை நாளை யுள்ளார் காண்பர்.

இப்போது அவர் பச்சாதாபப் படுபவர்போலுந் தெரிகிறது.

  • Replies 68
  • Created
  • Last Reply
Posted

உலகம் யாருடைமை

----------------------

உலகில் ஆத்திகசமயங்கள் பல. அவற்றுள் எதுவும் இவ்வுலகை இன்ப நிலயமெனச் செல்லாது. இது துன்ப நிலயம் என்பதுதான் அவற்றின் ஒருமித்த கருத்து. பெளத்தமும் சமணமும் நாத்திகங்கள். அவையும் உலகைவெறுத்தே பேசும். ஆனால் உலகாயதம் என்றொரு சமயம் உளது. அது பச்சை நாத்திகம். உலகு இன்ப நிலயம் எனக் கொள்வது அதுதான்.

அந்த வாடை இப்போது எங்கும் வீசுவதாயிற்று. ஆத்திக சமயத்தவருல்ளும் அவ் வாடையில் அகப்படாத வரைத் தேடித்தான் காண வேண்டும்.

உலகில் அரசுகள் பல உள. அவற்றுள் தன் மக்களுக்கு உலகு துன்பநிலயம் என்பதை உறுத்தி வருவது எது? எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

தனிப்பட்டவர், சமூகத்தினர், அரசினர் தம்முள் மோதிக் கொள்கின்றனர். அம்மோதல்கள் எப்போதோ நடந்தன. இப்போது ஓய்ந்தன. இனி நடக்கவே மாட்டா எனச் சொல்ல முடியாது. அவற்றில் உபயோகமாகும் போர்க் கருவிகள் பலவகையின. விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்கு நாள் புதியன புதியனவாகக் கண்டு பிடிக்கப்பட்டன. வெகு பயங்கரமானவை. சிங்கம் புலி பாம்பு முதலியன பொல்லாதவை எனப்படும். அவற்றின் நகம் பல் நஞ்சு முதலியன தானும் அவ்வளவு பயங்கரமான தல்ல. மேலே சொன்ன வாடையே அம்மோதல்களுக்குக் காரணம்.

உலகம் இன்ப நிலயம். அவ்வின்பம் எல்லார்க்கும் சமமாக உரியது. ஆதிக்ககாரர் சிலர் அதிகமான இன்பத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அதனால் பெரும்பாலார்க்குத் தம்பங்கு கிடைப்பதில்லை, அவர் துன்பமே யடைகின்றனர். அவ்வின்பம் எல்லார்க்கும் சமமாகக் கிடைக்க வேண்டும், அதற்கு வழி உலகை அதாவது உலக வளத்தைச் சமமாகப் பங்கிட்டுவிடுவதேயாம். இப்படி உலகம் எல்லார்க்கும் பொதுவுடைமை எனப் பேசப்படுகின்றது.

அப்பேச்சு செவிக்கு இனிப்பது. ஆனால் உலகு மனிதர்க்கு உடைமையாதல் உரிமை, தகுதி ஆகியவற்றுள் எது பற்றியது? உரிமைபற்றியது எனின், உரிமையாவது யாது? உலகில் மனிதர் பிறந்தனர். அதனால் உலகு அவருக்குப் பிறப்புரிமை யாயிற்று. அதுவா? ஆமெனின், அவர்போல் மற்றப் பிராணிகளும் உலகிற் பிறந்துள்ளன. அதனால் உலகின் பிறப்புரிமைப் பங்கு அவற்றிற்கும் உண்டு. அதை மனிதர் அபகரிக்கலாமா? அபகரிக்கவில்லையா? இல்லையெனின் ஈயொழிப்பு இயக்கம், மூட்டுப் பூச்சி மருந்து, முதலிய வேட்டைகள் ஏன்? தகுதிபற்றியது எனின், தகுதியாவது யாது? மனிதன் பகுத்தறிவுடையான், படித்தவன், பட்டதாரி, பதவி வகிக்கிறான், அற்புத எந்திரங்கள் பல காண்கிறான், மாடமாளிகை கட்டிக் குடிபுகுகிறான், நடக்கிறான், ஊர்கிறான், மிதக்கிறான், பறக்கிறான், இவை தகுதி. மனிதருடைய அத்தகுதி மற்றப் பிராணிகளின் உரிமையைக் கெடுக்கலாமா?

சாத்தன் தனவான். அவனுக்கு மகன் ஒருவன். அவன் அத்தனத்துக்குப் பிறப்பால் உரியன்; ஆயினும் முட்டாள். அடுத்த வீட்டுக்காரன் கொற்றன். அவன் சமர்த்தன். சாமர்த்தியமாகிய தகுதி பற்றி அவனுக்கு அம்முட்டாளின் உரிமையைப் பறித்துக் கொடுத்திடலாமா? அம்முட்டாளைத் திருத்துக, கூடிய வரை தகுதிப்படுத்துக. அதுவே நியாயம். உரிமையைப் பறிப்பதற்குத் தகுதியைக் காரணமாக்குவது நல்லதன்று. இந்தியனுக்கு இந்தியா பிறப்பாலுரியது, வேறெதனாலுமன்று. அவன் தகுதியற்றவனா யிருக்கலாம். அதனால் அவனுரிமையைப் பிடுங்கி முடியாது. அவனைத் தகுதிப்படுத்துவது தான் நேர்மை. அந்நாட்டின் ஓட்டுரிமை அவனுக்கேயுண்டு. பிற நாட்டவரிடம் தகுதி காணப்படலாம். ஆயினும் அவருக்கு இந்தியாவின் ஓட்டுரிமை கிடையாது. இன்னும் உரிமையுடைமை சுலபத்தில் நிச்சயமாம். தகுதியுடைமை அங்ஙனமன்று. தகுதியை நிச்சயிக்கும் தகுதியுடையான் எவன்? நான் என எவனும் முன்வரான். வெறுங் கழுத்தை விட அரைப்பண நகையே மேல் என்பது பழமொழி. அப்படித்தான் தகுதியும் இருப்பது.

மேலும் உலகில் மற்றப் பிராணிகள் ஏன் வந்தன? மனிதர் ஏன் வந்தனர்? அவ்விரண்டு வரவுகளுக்கும் இலட்சியம் உண்டா? அ·தெது? அதில் வித்தியாசம் இல்லையெனின், உலகு மனிதருள் படச் சர்வபிராணிகளுக்கும் சமமான பொதுவுடைமையே. மனிதருக்கு அதில் விசேடவுரிமை சிறிதுமில்லை.

இனி, உலகு இன்பமுந் துன்பமுங் கலந்தது. அ·தனுபவம். ஆயுள் முழுவதும் இன்பமே யனுபவிப்பவனும், துன்பமே யனுபவிப்பவனும் இலர். இன்பத் துன்பங்கள் அளவிறந்தனவு மாம். இன்பத்தை எல்லாரும் விரும்புகின்றனர், தேடிச் செல்கின்றனர். துன்பம் வெறுக்கப்படுகிறது, ஆனால் வந்தடைகிறது. தேடுகிற இன்பம் கிடையாமலும் போம். வந்தடைகிற துன்பத்தை விலக்கவு முடியாது. அதனால் இன்பத் துன்பங்களுக்கு மனிதன் அதிகாரி யல்லன் என்பது அறியப்படும்.

இன்பந் தருவதே துன்பமாயும் முடியும். மின்சாரம் விளக்கைத் தருகிறது, உயிரையும் வாங்குகிறது.

நாய் எலும்பைக் கடிக்கிறது. அதன் பற்களுக்கிடையில் ஒழுகுகிறது இரத்தம். அதனைச் சுவைக்கிறது அப்பிராணி. எலும்பில் ஒன்றுமில்லை. அவ்வெலும்பு போல்வதுதான் உலகும். அப்படிச்சொல்வர் ஆத்திக சமயிகள்.

சொரி சிரங்கள் அச்சிரங்கைச் சொரிவான். அவனுக்கது பரமானந்தமா யிருக்கும். பிறகு அதில் இரத்தம் ஒழுகும். அப்பொழுது அவன் அடைவது துன்பம். அச்சிரங்கு போல்வதே இவ்வுலகும்.

மனிதன் மாடா யுழைகிறான். சோறுந் துணியும் சிறிது கிடைக்கின்றன. அ·தின்பம். உழைப்புக்கு வழியில்லாமலும் போகிறது. அப்போது துன்பமே அவனுக்குப் பலன். அவ்வுழைப்பின் கஷ்டத்தையும், கிடைக்கும் இலாபத்தையும் ஒப்பிடுக. முன்னது அதிகம். பின்னது கொஞ்சந்தான்.

விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது பழமொழி. கூழுக்கு உப்பில்லை என்கிறான் ஒருவன். பாலுக்குச் சர்க்கரையில்லை என்கிறான் இன்னொருவன். இருவருக்கும் விசனம் ஒன்றே. வாழ்க்கை வசதியுள்ளோரையுந் துன்பந் தொடராமலிருப்பதில்லை.

இன்பமுந் துன்பமும் எதிர் மறைகள். ஆகலின் அவை உலகின் இயற்கையாகா. அவற்றிற்குக் காரணம் வேறு; உலகு சாதனமா யிருப்பதே.

நேரிய முறையில் அவசியத் தளவில் உலகைப் பயன்படுத்திக் கொள்பவன் சிஷ்டன். (நல்லவன்) அக்கிரமமாய் அநாவசியமாய் உலகில் ஆசைகொள்பவன் துஷ்டன். (கெட்டவன்) இத்துஷ்ட நிக்கிரகமும் அச்சிஷ்ட பரிபாலனமுமே அரசுகளுக்கு இலக்கணமாகும்.

மனிதனின் வாழ்க்கை லட்சியமும், மற்றப் பிராணிகளின் வாழ்க்கை லட்சியமும் ஒன்றுதானா? வேறு வேறா? அதனைப் பகுத்தறிவதே பகுத்தறிவு. அது சோறு போல்வது. மற்றைப் பகுத்தறிவுகளெல்லாம் துணைக்கறிகள் போல்வனவே. மனிதன் மற்றப் பிராணிகள் போல் உண்டு உறங்கிச் சாவதற்காக இங்கு வரவில்லை.

புறம்போக்கு நிலங்கள் கூட அரசினுடையது. அதன் அனுமதியின்றி அந்நிலங்களில் ஒரு சதுர அங்குலங் கூட யாருங் கைவைக்க முடியாது. அங்ஙனமாக உலகுக்கு மாத்திரம் உடையான் ஒருவனுமிலனா? உலகு தானே உண்டான தன்று, ஒருவனால் உருவாக்கப்பட்டது. அவ்வொருவனும் மனிதருள் எவனு மிலன். அதனை உண்டாக்கிய வொருவன் ஈசுரன். ஆகலின் அவனுடைமையே அதுஎன்க. அவ்வுடைமை அவனுக்கு அநாதியே உரியது.

ஈசுரன் தந்தை. அவனுக்கே சொந்தவுடைமை உலகு. உயிர்கள் அவனுக்குப் புத்திரர். அவற்றைப் பலபல வுடம்புகளிற் புகுத்தி உலகில் அவன் அனுப்புகிறான். அதற்குக் காரணமுண்டு. அதனை அவன் சொல்லாம லில்லை; தெரியாமலிருப்பவர் தான் பலர்.

மனிதவுடம்பைப் பெற்ற வுயிர்கள் மனிதரெனப் படுவர். தந்தை பணக்காரன். அவனுக்குப் புத்திரர் நாலைந்து பேர். தந்தை சீவித்திருக்கும்போதே அப்பணத்தைப் பங்கிட முனைகின்றனர் அப்புத்திரர். அவர் எப்படி மதிக்கப்படுவர்? அப்படி ஈசுரனிருக்கும்போதே உலகை மனிதர் பங்கிட முயல்வது அவர்க்கு மதிப்புத் தருவதாகுமா? ஈசுரன் சாகான், நித்தன், அவனைக் கருதாமல் உலகைப் பங்கிட்டாலும் மனிதன் துயரம் மாறப்போவதேயில்லை. ஆகலின் அவனைக் கருதுவதே மனித வாழ்க்கையின் இலட்சியம். அந்த இலட்சியம் மற்றப் பிராணிகளிடமில்லை. ஏன்? அவை பகுத்தறி வில்லாதன.

மனிதன் அறிகிறான், அறியாமலுமிருக்கிறான். உலகில் அறியாமை யில்லாத அறிஞன் எவனுமிலன். அவ்வறியாமை அவனுக்கு எப்படி வந்தது? அ·தொன்று. இன்பமுந் துன்பமும் உலகின் இயல்பல்ல. உலகு வெற்றெலும்பே போல்வது. ஆயினும் மனிதன் சுகிக்கிறான், துக்கிக்கிறான். அவ்விரண்டு மில்லாதவன் எவனுமிலன். அவை அவனுக்கு எப்படி வந்தன? அ·தின்னொன்று. உலகு மனிதனுக்கு வாழ்விடம். அதனை அவன் தனக்கென ஆக்கிக் கொள்ளவில்லை. அவன் அதில் தள்ளப்பட்டான். ஏன்? அது மற்றொன்று, ஆக மனிதன் தன் அறியாமை, இன்பத்துன்பம், உலகு ஆகிய மூன்றன் வரலாறும் தெரிய வேண்டும் அ·தவனுக்குக் கடன். மனிதப் பிறவி பயனுடையதாவத் அப்போது தான்.

உலகில் மொழிகள் பல. ஒவ்வொரு மொழியிலும் மனிதர் எழுதிய புத்தகங் களுள, அத்தனை மொழிகளிலு முள்ள அத்தனை புத்தகங்களும் எண்ணிறந்தன. ஆயினும் அவற்றுள் ஒன்றிலாயினும் அம்மூன்றன் வரலாறு காணப்படாது. ஏன்? எவ்வளவு அறிவுள்ள மனிதனுக்கும் அவ்வரலாற்றைக் காணும் ஆற்றல் இருக்க முடியாது. அவ்வாற்றலுடையான் ஈசுரன் ஒருவனே. அவன் ஆக்கிய புத்தகங்களிற்றான் அவ்வரலாறு பிரசித்தம். அப்புத்தகங்களே இருக்கு முதலிய 4 வேதங்களும், காமிக முதலிய 28 சிவாகமங்களுமாம்.

மனிதன் அறியாமை முதலிய அம்மூன்றிலிருந்தும் விடுபட வேண்டும். அதற்கான மார்க்கங்களையும் அவ்வீசுரனே அந்நூற்களில் வகுத்துள்ளான். மனிதன் அவற்றைக் கசடறக் கற்க. கற்றபின் அதற்குத் தக நிற்க. நின்றால் அவன் தன்முன்பிறப்புக்கள் வீணானமை கண்டு கவல்வான், உலகை உவர்ப்பான், இனிப் பிறக்க விரும்பான், என்றும் பிறவாமையையே வேண்டுவான். அத்தனையிலும் அவனுள்ளிருந்து துணைபுரிவான் அவ்வீசுரன். அவனே அப்பிறவாமையைத் தரவல்லான், தருவான். அது ஈடு செய்ய முடியாத நன்றி. அதனை மனிதன் ஓர்க. அவ்வீசுரனைக் கணமும் மறவாது ஏத்துக. அது தான் செய்ந்நன்றி யறிதல் எனப்படுவது. அந்நன்றியைக் கொன்றல் பாதகம். ஈசுரன் மனிதனை அம்மூன்றிலிருந்தும் விடுவித்துப் பிறவிநீக்கி அறிவை விரிவாக்கித் தன்பாலுள்ள நிரந்தர வின்பத்தில் வைத்து ஆள்வான். அவ்வின்பச் செல்வமே தன் புத்திரர்க்கென அவன் வைத்துள்ளது.

அதனைப் பெறுதர்கான சூழ்நிலை உலகிற் பெருகி யமையவேண்டும். அச்சூழ்நிலையைப் பெருக்கி அதனில் மனிதன் வாழ்வதே வாழ்வு. அதனையே 'வாழ்வாங்கு வாழ்'வது என்றார் வள்ளுவர். அவன் உலகின்பத்தை நாடிச் செல்லான். உலகத் துன்பம் அவனை நாடி வராது. 'Live and let live' என்பதை விட்டு 'Let live and live' என்பதைக் கடைப்பிடிப்பா னவன். அதனாற் பொதுவுடைமைப் பிரசாரம் மனித சமூகத்தை விட்டு ஒழியும். உலகம் போக்கள மாதலுங் குறையும். இன்றேல் பச்சை நாத்திகம் உலகைப் படுகள மாக்கவே செய்யும்.

Posted

முன்னேற்றம்

"உலகம் தன்னுடைய மகத்தான முன்னேற்றத்தை வைதிகவழியைப் பின்பற்றாதவர்களிடமிருந்து தான் அடைந்துள்ளது" (4-10-1963 தினமணி) என்றார் ராஷ்டிரப்தி, டாக்டர் ராதாகிருஷ்ணன். வைதிக வழியைப் பின்பற்றாத அவர் எந்த வழியைப் பின்பற்றினார்? அதை டாக்டர் சொல்லவில்லை. வைதிகம், இலெளகிகம் என வழிகள் இரண்டே. வைதிக வழியைப் பின்பற்றாத அவர் இலெளகிக வழியைப் பின்பற்றியவராகத்தானிருக்க முடியும். உலகம் மகத்தான முன்னேற்ற மடைந்தது அவராற்றான் என்பது அவ்வசனத்தால் தெரிகிறது.

அவருக்கு உலகத்தை விட்டால் வேறு கதி கிடையாது. உலகம் இன்பமயம் என்னுங் கொள்கையுடையா ரவர். அக்கொள்கை Optimism என ஆங்கிலத்திற் சொல்லப்படும்.

அவர் தம் அறிவுத் திறமையால் உலகைச் சுவர்க்கமாக்கி வருவதாகச் சொல்கிறார். அவர் கண்டு பிடித்த அற்புதங்கள் பல. அவற்றால் வரும் இன்பத்தை அனுபவிக்கிற மாந்தரும் கோடிகோடியர். இனி இவ்வுலகை வெறுத்துத் துறவு கொள்ள யாருக்கும் மனம் வராதென்றுகூட்ச் சொல்லலாம். அந்த இலெளகிகரி னறிவில் யாரேனுங் குறைகாணின் அக்காண்பவர் பரிகசிக்கப்படுவர்.

ஆனாலும் ஒன்று சொல்லித்தா னாகவேண்டும். ஒருவர் விண்ணிற் பறந்து சென்று துருவினார்; அங்குக் கடவுளைக் கண்டிலர். அறுவை சிகிச்சையில் தேர்ந்த மருத்துவரொருவர் மனிதவுடலை எப்படியெல்லாமோ அறுத்துச் சோதித்தார்; அதில் உயிரைக் கண்டிலர். கடவுள் என்ற பொருளு மில்லை, உயிர் என்ற பொருளுமில்லை என்ற கொள்கைக்கு அவ்விருவரும் இக்காலைச் சான்றாயினர். அம்மருத்துவரைக் கேட்டால் அவர் தமக்கும் உயிரில்லை யென்பார்.

வைதிகவழியிற் செல்லாத அந்த இலெளகிக வழியினருக்குக் கடவுளுண்டென்ற நம்பிக்கையும் உயிருண்டென்ற நம்பிக்கையு மில்லை. அவருக்கு இவ்வுலகமே எல்லாப் பொருளு மாம். இவ்வுலகம் என்பது இச்சடவுலகம். உலகம் என்பதில் உடலும் அடங்கும். உலகு உடல் அனைத்தும் பூதகாரியம் என்பா ரவர்.

பற்பல அற்புதங்களைக் கண்டுபிடித்து உலகை முன்னேறச் செய்ய அவருக்கு உதவியது அவரறிவு. அவ்வறிவின் வரலா றென்னை? அதனிலக்கணம் யாது? அது உடலின் குணமா? பூத காரியமா? இச்சடவுலகின் வேறான பொருளா? அழிவதா? அழியாததா? அறிவைப்பற்றி அப்படியெல்லாம் ஆராயவேண்டும். தன்னைப்பற்றி ஆராயாத அறிவு அறிவாசாது. அந்த இலெளகிகரும் அவ்வாராய்ச்சி செய்திருப்பர். உலகமே பொருளென அவர் கொண்டவ ராகலின் அவ்வறிவும் உடலின் குணம் அல்லது பூதகாரியம், அழியக்கூடியது என்பதுதான் அவ்வாராய்ச்சியின் முடிவா யிருக்கும். பல அற்புதங்களைக் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி செத்தால் அவரறிவும் செத்துச் சூனியமாய்விடும் என்றுதான் அந்த இலெளகிகர் சொல்லக்கூடியவர்.

சாடியில் தேன் இருக்கிறது. எறும்புகள் அணியணியாக வந்து அதைப் பருகுகின்றன. ஆனால் அவை மீளா; அதில் வீழ்ந்து மடிகின்றன. விஞ்ஞானிகள் உலகை இப்போது தேன்போ லாக்கிவைத்திருக்கின்றனர். உலக முன்னேற்றமாவது அது தான். மாந்தர் அதில் வீழ்ந்து மீளமாட்டாமற் கிடக்கின்றனர். அம்முன்னேற்றம் மதிப்புக் குரியது தானா?

உலகுக்கு வேறாக உயிரென வொன்றுண்டு. அது பொருள், அநேகம், அவை அழியா, அநாதி நித்த மாவன, அறிவைக் குணமாக வுடையன. ஆகலின் உயிர்போல் அதனறிவும் நித்தம். அவ்வுயிர் உடலைப் பெற்று உலகில் மனிதன் என வந்திருக்கிறது.

அவ்வுயிரி னறிவுக்கு இவ்வுலகம் விஷயமன்று. அவ்வறிவு தன் தரத்தைச் சிறிதே கருதுமாயின் உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் அதனை இம்மியுந் தீண்டாது. ஏன்? உலகம் சடம்.

அறிவு தன் இனத்தை நாடுவதே அதற்கு அழகு, கெளரவம், அவசியம்.

அவ்வறிவில் ஒரூன முண்டு. அ·து ஆணவம் எனப்படும். அதனைப் போக்கி யாகவேண்டும். அதற்குச் சில முயற்சிகள் அவசியம். அவை சரியை கிரியை யோகம் ஞானம் என்ற சாதனங்கள். உயிர் அவற்றை ஆசரிக்க வைத்ததே இவ்வுலகம். அவ்வாசாரத்துக்கு வாய்ப்பாக உலகை அமைக்கவேண்டும். அப்படி அமைந்த வுலகமே உண்மையாக முன்னேற்ற மடைந்த உலகமாகும்.

வைதிகவழி வராதவரால் உலகை அப்படி முன்னேற்ற முடியாது. அவர் செய்த முன்னேற்றத்தால் உலகம் சாடித்தே னாகிவருவதே கண்டபலன்.

உலகம் துன்பமயம் என்பது மறுக்க முடியாத வுண்மை. அக்கொள்கைக்கு Pessimism என்பது ஆங்கிலம். அக்கொள்கை யுடையார் வைதிக வழிச் செல்பவராய்த்தா னிருப்பர். இப்போதுள்ள உலக முன்னேற்றத்தை ஒரு முன்னேற்றமாக அவர் கொள்ளார். உலகம் துன்பமயம் என்ற காரணத்தால் உலகை விடு ஓடவுமில்லை அவர். அறிவின் இனமாய், உயிரறிவினும் மேம்பட்டதாய், உயிரரிவை விளக்குவதாய், சுதந்திர முள்ளதாய், உயிருக்கு அருளவேண்டு மெனத் தன்பால் நிரந்தரமான இன்பத்தைக் கொண்டதாய் உள்ளதொரு பேரறிவை நாடி நிற்பாரவர். அந்நாட்டம் சித்திப்பதற் கேற்ற வகையில் உலகை அமைக்க வேண்டும். அதுவே உலகத்தின் நேரிய முன்னேற்ற மாம். வைதிகவழிச் சென்றவர் அப்படித்தான் செய்தனர் என்பதை புராணங்களிலுள்ள நாட்டுப்படல. நகரப்படலங்களிற் பிரசித்தம். ஸ்ரீ பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் திருநகரங் கண்ட படலங் காண்க.

அறிவு அறிகிறது, ஆகலின் வினைமுதல். உலகம் அறியப்படுகிறது. ஆகலின் செயப்படு பொருள். அறிவு உலகை அற்புதங்களால் அழகுபடுத்திப் பார்ப்பதால் நாளிதுவரை எய்திய பயன் யாதோ? அவ்வறிவின் கதியைச் சிந்திப்பார் யாருமிலர். அறிவை இலட்சியமாக வைத்து அதற் கனு கூலமான வகையில் உலகை அமைத்து வைக்குஞ் சாமர்த்தியம் வைதிகவழிச் செல்வார்க்கே உண்டு.

Posted

வாழவா பிறந்தான்?

--------------------------

மனிதன் மல மூத்திரங்களிற் புரள்கிறான், அவற்றை வாயிலும் வைத்துக் கொள்கிறான். பாடத்தேர்வில் தோற்கிறான், வெட்கத்தால் நஞ்சை உண்டு விடுகிறான், வறுமை, நோய் முதலியவற்றில் உழல்கிறான். கடு வெயிலில் நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சோற்றுக்கு உழைக்கிறான். அடிமை வேலையில் அழுங்குகிறான், வைத்தியஞ் செய்து கொள்வதற்கு அவகாச மில்லாமலே துள்ளித் துடித்துப் போய்விடுகிறான். குத்துப்படுகிறான், கொலையுண்கிறான், கொள்ளை கொடுக்கிறான். இரயில் மோட்டார் வண்டி, வானவூர்தி முதலியவற்றால் விபத்துக்குள்ளாகிறான், நீரில் அமிழ்கிறான், தீயில் வேகிறான், உறவினரை யிழந்து தவிக்கிறான், வேலை கிடையாமல் அலமருகிறான், மற்றைப் பிராணிகளாற் கடிபடுகிறான், குற்றஞ் செய்து சிறை புகுகிறான், கண்கெட்டுக் காது போய் உடல் நாறி முதுமையால் வதங்குகிறான். பிறந்தது முதல் அவன அடையும் அல்லல்கள் அவை. தன்னை வதைக்கும் பிற அல்லல்களையும் அவன் கணக்கெடுத்துக் கொள்க. மனிதன் தோன்றிய நாள்தொட்டு இன்று வரை அவனுக்கு அவ்வல்லல்கள்மறையவில்லை, குறைந்தபாடுமில்லை, புதுப்புது அல்லல்களும் வந்து சேர்கின்றன. எதிர் காலத்திலும் அவன்கதி அதுதான். அடுத்த நிமிடத்தில் தான் இப்படி யாவான் என்பதை அவனால் தெரியவு முடியாது.

அவ்வல்லல்களை அவன் விரும்பவில்லை. வெறுக்கிறான். ஆயினும் அவை அவனை வந்து மோதுகின்றன. அவற்றைப் போக்க முயல்கிறானவன். அது முடியவில்லை.

இன்பம் என்பதும் ஒன்று. "எழுதவோ அல்லது படிக்கவோ தெரியாதவர்கள் கூட மந்திரியாகி விட்டார்கள். காங்கிரஸ் சட்டசபை கட்சியினரில் சிலருடைய பக்கபலம் இருப்பதால்தான் இந்த மாதிரி எழுதப்படிக்கத் தெரியாதவர்க ளெல்லாம் மந்திரியாக முடிகிறது' என்றார் காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஸ்ரீ ஜகன்னாத ராவ் சந்திரிகி" (29-9-1963 தினமணி) அ·தோ ரின்பம். அதனை அவன் வெறுக்கவில்லை, விரும்புகிறான். அ·தவனுக்குக் கிடைக்கிறது. ஆயினும் அதனை அவன் விரும்பு மளவிற் பெற மாட்டான். தனக்குக் கிடைக்கும் இன்பத்தை அவன் விலக்கவாவது முயன்று பார்க்கட்டும். அதுவு முடியாது.

அப்படியெல்லாந் திறங்கெட்டுக் கிடக்கிற அவன் தன்னை உலகில் வாழப் பிறந்ததாகச் சொல்லிக் கொள்கிறான்.

` தன்பால் வருந் துன்பத்தொகுதிக்கும், இன்பத் தொகுதிக்கும் அவன் அதிகாரி யல்லன், அடியானே யாவான். அவனுக்கு அவை ஊட்டப் படுகின்றன. அவற்றை அவன் அனுபவித்தே யாக வேண்டும். ஊட்டுபவன் ஈசுரன்.

இ·தொரு நல்ல வுடம்பெனத் தெரிந்து அவன் தன்னுடம்பை யெடுத்துக் கொள்ளவில்லை. இ·தொரு வசதியான இடமெனத் தெரிந்து அங்குப் போய்ப் பிறக்கவில்லை அவன். அச்சுதந்தரம் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு உடம்பைக் கொடுத்தவனும், அவனை எங்காவது போய்ப் பிறக்குமாறு தள்ளியவனும் ஈசுரனே.

உலகம் துன்பமயமே, அதனை ஆய்ந்து காண், கண்டு அதன்பால் உனக்குள்ள பற்றிலிருந்து நீங்கு, உனக்கு நோதல் என்பதில்லை என்பது திருவள்ளுவர் தந்த எச்சரிக்கை. 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் - அதனின் அதனின் இலன்' என்றா ரவர். அவ்வழிச் சென்ற ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் 'மதியின் யாதனின் வழுவினோன் அதனின் - அதனின் நோதலை யடைதரான் அருஞ்சுக முறுவான் - மதியின் யாதனின் யாதனின் மருவினான் அதனின் - அதனின் நோதலை மருவுவான் அடைகுவன் துன்பம்' என்றனர். உலகை இன்பமயமெனக் கண்டு மயங்காதே, மயங்கின் விளக்கிற் படுகிற விட்டிலே யாவாய் என அம்முனிவரர் எச்சரிக்கிறார். அவ்வெச்சரிக்கைகளை அவன் கற்க. கற்பானாயின், இவ்வுலகில் வாழப் பிறந்தவனாக அவன் தன்னைச் சொல்லிக் கொள்ள மாட்டான்.

வாழப் பிறந்தவன் சாகலாமா? அவன் சாகிறான். சாவை அவன் விரும்பவு மில்லை. அதனாலும் அவன் உலகில் வாழப் பிறக்கவில்லை யென்பது அறியப்படும்.

பின்னை அவன் எதற்காகப் பிறந்தான்? பிறந்த அவன் மீளவும் இங்கு வந்து வாழாம லிருக்கச் சாகுமுன் வழிதேடிக் கொள்ளவே பிறந்தான். அ·தாவது பிறவாமையைப் பெறவே அவன் பிறந்தான் என்பது.

Posted

தமிழைக் காட்டுமிராண்டி மொழி

என்று சொன்ன ஈ.வே.ரா (பெரியாருக்கு) வுக்கு யாழ் மன்றத்தில் வரவேற்பா?

வரலாறு தெரியாது போலே இங்கே உள்ளவர்களுக்கு

விடுதலை இதழில் ஈ.வே.ரா. பெண்களுக்கு கற்பு தேவையில்லை என்று எழுதியவர்.

சிந்தியுங்கள் தமிழர்களே! உங்களையும் உங்களது கலாசாரத்தையும் கொச்சைப்படுத்திய ஒருவரா உங்கள் தலைவர்

Posted

ஈ.வே.ரா.

"என்னுடைய கட்சியில் முட்டாள்தான் இருக்கவேண்டும்" என்று கூறியுள்ளார். (தமிழ்நாடு)

:(

அது கட்சியில் சேர முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்று அர்த்தமா?

இல்லை புத்திசாலிகளும் கட்சியில் சேர்ந்தால் முட்டாள்களாக் ஆகி விடுவர் என்ற அர்த்தமா என்று தெரியவில்லை.

Posted

தந்தை பெரியார் பற்றி நீங்கள்தான் எதுவும் தெரியாமால் பேசுகிறீர்கள்!

அவர் ஒரு தந்தை போன்று தமிழ் மக்களிடம் உள்ள குறைகளை கடுமையாக சாடியும் திட்டியும் திருத்துகின்ற பணியை மேற்கொண்டதால்தான் அவரை தந்தை பெரியார் என்கின்றோம்.

தந்தை பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் சொன்னார் என்பதை அவர் வாயாலேயே விளக்கி உள்ளார்.

இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாக இருக்கக்கூடிய தகுதி படைத்தது தமிழ் என்று தந்தை பெரியார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?

தமிழுக்கு எழுத்து சீர்திருத்தம் கொடுத்து, இன்றைக்கு இணையத்தில் நானும் நீங்களும் தமிழில் எழுதுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது தந்தை பெரியார் என்பது உங்களுக்கு தெரியாதா?

உங்களுக்கு கொஞ்சமாவாது பகுத்தறிவு இருந்தால், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தந்தை பெரியாரின் தொண்டர்கள் எப்படி தமிழுணர்வோடு இன்றும் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி பதில் தேட முனைந்திருப்பீர்கள்

அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். உங்களால் இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். இது போன்ற தமிழைப் பார்த்துத்தான் தந்தை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். தமிழை முன்னேற்ற விடாது, தமிழ் புலவர்கள் மதத்தில் மூழ்கிப் போய் தமிழை வைத்து குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழுக்குள் வடமொழித் திணிப்பை செய்தார்கள். தமிழை மெதுமெதுவாக அழிக்க முயன்றர்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் ஒரே ஒரு வசனம் சொன்னார்: "தமிழ் காட்டு மிராண்டி மொழி"

தமிழ் இன்றைக்கு முன்னோக்கி செல்வதற்கு இந்த வார்த்தை மிக முக்கிய காரணம்.

பகுத்தறிவோடு உண்மையை ஆராய்ந்து பாருங்கள்.

பெண்கள் கற்புப் பற்றி தந்தை பெரியார் சொன்னதை முழுவதுமாக படித்துப் பாருங்கள்.

"ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவையில்லை" இதைத்தான் அவர் சொன்னார். இதில் என்ன தவறு?

நானும் சொல்கிறேன்: "ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவை இல்லை.

Posted

திருச்சியில் ஈ.வே.ராவுக்கு பல சொந்த வீடுகள் உண்டு.

ஈ.வே.ரா அந்த வீடுகளை யாருக்கு வாடகைக்கு விட்டார் தெரியுமா?

பிராமணர்களைத் தான் குடி வைத்தார்.

அவர்களுடைய நண்பர்கள் அவரிடம் சென்று வெளியில் எல்லா இடத்திலும் பிராமணர்களை எதிர்க்கும் நீங்கள் உங்களது வீடுகளை ஏன் அவர்களுக்கு வாடகைக்கு கொடுத்தீர்கள் என்று கேட்க.

அவர்கள் தான் பயந்து ஒழுங்காக வாடகை கொடுப்பார்கள் என்றாராம்.

எப்படி இருக்கிறது இவரது புத்தி.

பணத்துக்காக எதையும் செய்யும் இந்த கூட்டம்

Posted

ஐயா பெரியோர்களே பகுத்தறிவென்றால் என்ன.........? அதை எங்கணம் மனிதனுக்கு உதவுகிறது? அதை கொஞ்சம் விளக்க முடியுமா?

Posted

நண்பர்களே! அப்படியே பெரியாரின் மறுபக்கம் (The boy who gives a truer Picture of Periyar)

போய் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry295294

மேலும் பல உண்மைகள் வெளி வரும்.

Posted

சுயமரியாதையியக்க சூறாவளி

சுயமரியாதையியக்கைத் தகர்த்து அழிக்க வந்த சூறாவளி

ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளை - சிவசேவகன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22797

Posted

"பெரியாரின் மறுபக்கம்" என்ற நூலை எழுதிய ஆர்எஸ்எஸ் மதவெறி இயக்கத்தின் வெங்கடேஸ்வரின் அந்த நூலில் பெரும் மோசடி செய்திருக்கிறார்.

அவர் செய்வதைத்தான் பெரியாருக்கு எதிரான பலரும் செய்கிறார்கள். ஒரு செய்தியை எப்படித் திரிக்க வேண்டும் என்று அவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெரியார் 94 ஆண்டுகள் வாழ்ந்தவர். அவருடைய சிந்தனைகள் காலத்திற்கு காலம் வளர்ந்து வந்தன. இது இயல்பான ஒன்று.

எந்த ஒரு தலைவரின் சிந்தனையும் ஆரம்பத்தில் இருந்தது போன்று அப்படியே தொடர்வதில்லை. அனுபவத்தில் பல உண்மைகளை உள்வாங்கி வளர்ச்சி அடையும்.

இதிலே ஒரு தலைவர் ஒரு காலகட்டத்தில் சொன்ன கருத்துக்களின் சில பகுதிகளை மட்டும் எடுத்து புத்தகம் வெளியிடுவது பெரும் மோசடி.

உதாரணமாக பெண்களின் கற்புப் பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை முழுமையாக சொல்லாமல் அரைகுறையாக வெளியிடுவது.

பெண்களுக்கு கற்பு தேவையில்லை என்று தந்தை பெரியார் சொன்னார் என்று புரளி கிளப்புவது எல்லாம் இந்த வகைக்குள் அடக்கம்.

பெரியாரின் கருத்துக்களை முழுமையாக படியுங்கள். படிப்பது கடினம் என்றால் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்.

முடிந்தவரை பதில் சொல்கிறேன்.

Posted

ஈ.வே.ரா கூறியது

" பாம்பையும், பார்ப்பனரையும் ஒருங்கே கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பனரை அடியுங்கள்"

இவ்வாறு வன்முறையை தூண்டி சாதிகள் இடையே சண்டை உண்டு பண்ணியவர்

. அதெல்லாம் போகட்டும்

ஈ.வே.ராவின் வக்கில் யார் தெரியுமா?

அவர் ஒரு பிராமணர்.

எப்படி ஒரு முரண்பாடு பாருங்கள்!!!

தமிழர்களே சிந்தியுங்கள்!!!

Posted

தமிழைக் காட்டுமிராண்டி மொழி

என்று சொன்ன ஈ.வே.ரா (பெரியாருக்கு) வுக்கு யாழ் மன்றத்தில் வரவேற்பா?

வரலாறு தெரியாது போலே இங்கே உள்ளவர்களுக்கு

விடுதலை இதழில் ஈ.வே.ரா. பெண்களுக்கு கற்பு தேவையில்லை என்று எழுதியவர்.

சிந்தியுங்கள் தமிழர்களே! உங்களையும் உங்களது கலாசாரத்தையும் கொச்சைப்படுத்திய ஒருவரா உங்கள் தலைவர்

அப்ப தாழ்ந்தசாதியுருடன் சமபந்திபோசனம் செய்யாதே என்ற ஆறுமுக நாவலரா எங்கள் தலைவர்,

சாதியை ஆதரரித்த ஒருவரா எமது தலைவர், கேனத்தனமா இருக்கு :(:(:lol:

Posted

ஈ.வே.ரா. சிலை வழிபாடு பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல என்றார். அது வெறும் கல் என்றார். சரி.

:(பின்னர் ஏன் தி.க.வினர் ஊருக்கு ஊர் தெருவிக்கு தெரு ஈ.வே.ரா சிலை செய்து மாலை அணிவித்து வருகின்றனர். அது வெறும் கலி மண் தானே.

:(மேலும் ஈ.வே.ரா படத்திற்கு மாலை அணிவிக்கின்றனர். அது வெறும் தாள் தானே.

:lol:இவர்களுடைய தலைவரின் சமாதிக்கு மாலை அணிவிக்கின்றனர். தலைவர் அங்கா இருக்கிறார். அங்கு இருப்பது வெறும் எலும்பு தானே!!!

Posted

ஈ.வே.ரா கூறியது

" பாம்பையும், பார்ப்பனரையும் ஒருங்கே கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பனரை அடியுங்கள்"

இவ்வாறு வன்முறையை தூண்டி சாதிகள் இடையே சண்டை உண்டு பண்ணியவர்

எதுக்கு அதிக விஷம் இருக்கிறதோ அதைதான் முதலில் அடிக்கவேண்டும், ஆபத்து எதனால் அதிகமோ அதைதான் முதலிம் அழிக்கவேண்டும். :(:(:lol:

Posted

அப்போது ஏன் உங்கள் ஈ.வே.ரா பிராமண வக்கில் வைத்துக் கொண்டார். பிராமணர்களைத் தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வைத்துக்கொண்டார்.. :(:(

Posted

அப்போது ஏன் உங்கள் ஈ.வே.ரா பிராமண வக்கில் வைத்துக் கொண்டார். பிராமணர்களைத் தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வைத்துக்கொண்டார்.. :(:lol:

பயந்தாங்கொள்ளியை யாரும் பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ளமாட்டார்கள், பலசாலியைதான் புத்திசாலி பாதுகாப்புக்கு தேர்தெடுப்பான். பிராமனர்கள் பணத்துக்காகா எப்படியும் வாதாடுவார்கள் :(

Posted

நண்பரே! பிராமணரை பலசாலி புத்திசாலி என்கிறீர்.

பணத்திற்காக எதையும் செய்வார் என்று சொன்னது ஈ.வே.ரா வையா. :(:(

Posted

நண்பரே! பிராமணரை பலசாலி புத்திசாலி என்கிறீர்.

பணத்திற்காக எதையும் செய்வார் என்று சொன்னது ஈ.வே.ரா வையா. :(:(

பிராமனர்கள் புத்திசாலிகள் என்று ஒத்துகொள்ளமுடியும் அல்லாவிடில் ஆடுமேய்க கணவாய்வழிவந்த கூட்டம் திராவிட இனத்தை ஆண்டிருக்க முடியுமா?

பலாசாலி என்று கூறியது உதாரனத்துடன் உங்களுக்கு விளக்க , அடிக்க கை ஓங்கினாலே ஒண்ணுக்குபோற பயல்கள் :lol: ஆனால் அவர்கள் அதை மனதில் வைத்து வேறுவிதமாக பழிவாங்குவார்கள்.

பணத்துக்காக எதுவும் செய்வார்கள் என்பது அனுபவத்தில் இருந்து நான் கண்டு கொண்டது. :o

Posted

நண்பரே! எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ஆரியர், திராவிடர் என்று இரு பிரிவு உண்டா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏனென்றால் பிரிவினை வேண்டாம். சாதி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் ஆரியர், திராவிடர் என்று பிரிப்பது ஏன்?

எல்லோரும் மனிதர்கள் என்று ஏன் நீங்கள் நினைக்க வில்லை?

எங்கோ தங்கள் கொள்கையில் முரண்பாடு இருப்பது தெரியவில்லையா!!!

Posted

தந்தை பெரியார் எந்த வழக்கில் எந்தப் பார்ப்பனனை தன்னுடைய வழக்குரைஞராக வைத்துக் கொண்டார் என்று தகவலை தர முடியுமா?

அப்படியே தந்தை பெரியார் எந்தப் பார்ப்பனர்களுக்கு, எப்பொழுது, எங்கே வீடு வாடகைக்கு கொடுத்தார் என்ற தகவலையும் தாருங்கள்!

சமணர்களையும், பௌத்தர்களையும் நீங்கள் முதலில் மனிதர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்!

Posted

நண்பரே! எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ஆரியர், திராவிடர் என்று இரு பிரிவு உண்டா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏனென்றால் பிரிவினை வேண்டாம். சாதி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் ஆரியர், திராவிடர் என்று பிரிப்பது ஏன்?

எல்லோரும் மனிதர்கள் என்று ஏன் நீங்கள் நினைக்க வில்லை?

எங்கோ தங்கள் கொள்கையில் முரண்பாடு இருப்பது தெரியவில்லையா!!!

ஆரியம், திராவிடம் என்பது இனக்ககுழுமங்கள். சிங்களவன், தமிழன் மொழிக்குழுமங்கள், இது தனித்துவத்தை பேணுகிறது கலாசாரத்தை பேணுகிறது, இந்த இனம் இப்படித்தான் இருந்தது என்ற செய்தியை எமது பாரம்பரியத்தை சொல்லுகிறது, சாதி என்பது ஒருசாரார் உழைக்க ஒருசாரார் உக்கார்ந்து உண்டு தொந்திவளர்க்க திட்டமிட்டு உருவாகாப்பட்டது இதனால் நன்மை ஏது தீமைகள்தான் அதிகம். :(

Posted

சமணர்கள், பெளத்தர்கள் இருவருக்கும் அனுக்கிரகம் செய்வது சிவபெருமான் தான்.

கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் கேள்விக்கு கேள்வி கேட்பது புதிர்!!!

கண்ணதாசன் எழுதிய வனவாசம் படியுங்கள் நண்பரே!!!

ஈ.வே.ரா. கட்சியில் இருந்து வந்த அண்ணா, கண்ணதாசன், கருணாநிதி போன்றோர் என்ன செய்தார்கள் என்று கண்ணாதாசனே எழுதியுள்ளார்.!!!

கட்டுப்பாடு தி.க.வில் எப்படி இருந்து என்பதற்கு அது ஒரு சான்று.

Posted

சமணர்கள், பெளத்தர்கள் இருவருக்கும் அனுக்கிரகம் செய்வது சிவபெருமான் தான்.

கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் கேள்விக்கு கேள்வி கேட்பது புதிர்!!!

கண்ணதாசன் எழுதிய வனவாசம் படியுங்கள் நண்பரே!!!

ஈ.வே.ரா. கட்சியில் இருந்து வந்த அண்ணா, கண்ணதாசன், கருணாநிதி போன்றோர் என்ன செய்தார்கள் என்று கண்ணாதாசனே எழுதியுள்ளார்.!!!

கட்டுப்பாடு தி.க.வில் எப்படி இருந்து என்பதற்கு அது ஒரு சான்று.

கண்ணதாசன் என்ன செய்தார் எப்படி வாழ்ந்தார் என்று ஊருக்கே தெரிந்த விடயம், இப்படி இரு என்று சொல்பவன் அப்படி இருந்து காட்டவேண்டும், சாதிபாரதே என்றால் ஆருமுக நாவலர் சாதிபாராதவராக இருக்கவேண்டும். ஆறுமுக நாவலர் சாதிபார்தவரா? பராதவரா? உங்கள் நிலைப்பாடு என்ன? :(

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.