Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

அண்மையில் பிரித்தானிய தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பிரித்தானிய உள்துறைச் செயலர் மேன்மை தங்கிய Dr. ஜோன் றெய்ட் ஐ சந்தித்திருந்தனர்.

இச் சந்திப்பில் இலங்கைத்தீவின் நெருக்கடி நிலை தொடர்பில் விவாதித்த தமிழ் பிரதிநிதிகள் சிறீலங்கா அரசின் பிரித்தானிய தமிழர் மீதான விசமப் பிரச்சாரம் தொடர்பின் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறைச் செயலர் பிரித்தானிய ஊடகங்களில் வெளியான கடனட்டை மோசடி தொடர்பான செய்திக்கும் பிரித்தானிய அரசுக்கும் தொடர்பெதுவும் இல்லை என்றும் இச் செய்தியை பிரபலப்படுத்தும் தலையீட்டு அழுத்தங்கள் எதனையும் அரசு பிரயோகிக்கவில்லை என்றும் தெட்டத்தெளிவாக தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பிரித்தானியாவிற்கான பயணம் மேற்கொள்ளுவதற்கான தடைகளை அகற்றும்படி பிரித்தானிய உள்துறைச் செயலரை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பு நட்பு ரீதியாக அமைந்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

-------------------------------------------------------------------------------------

இச் செய்தி தொடர்பாக பிரித்தானியாவின் ரைம்ஸ் நாளிதழின் இணைப்பதிப்பிற்கு கருத்து தெரிவித்த பிரித்தானியர் ஒருவர் கீழ் கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Look at the people blaming the Western countries whom they depend on for the generous aids for the terrosist state Sri Lanka. You are not satisfied with terrorising & supressing the Tamils not only in SL, but now in UKas well.

You will not suceed. The British Police are very professional, unlike the crooks of Sri Lankan Police who are involved in most of the crimes. The British Police will catch the fraudsters & will know if the LTTE was involved or not..

Lewis,

London,UK

Times (Online): 23-04-2007

இதன் தமிழ் மொழியாக்கம் வருமாறு

'' மேற்கு நாடுகளை குறைசொல்லும் இவர்களைப் பாருங்கள்! இதே மேற்கு நாடுகளின் நிதி உதவியைப் பெற்றே பயங்கரவாத நாடான சிறீலங்கா செயற்படுகிறது. இலங்கைத் தீவில்தான் தமிழர்கள் மீது பயங்கரமான அடக்கு முறைகளை (சிறீலங்கா அரசு)திணித்து திருப்தியடைகின்றனர் என்று பார்த்தால் பிரித்தானியாவிலுமா அதை தொடங்கிவிட்டீர்கள்?.

இதில் நீங்கள் வெற்றியடையப் போவதில்லை. பெரும் குற்றங்களை இழைக்கும் சிறீலங்கா காவல்துறையினர் போன்று மடையர்கள் அல்ல பிரித்தானிய காவல்துறையினர். பிரித்தானிய காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்துவார்கள். அப்போது விடுதலைபுலிகள் இதில் தொடர்பு பட்டவர்களா என அறிந்து கொள்ளுங்கள்..''

இலண்டனில் இருந்து - லூவிஸ்

------------------------------------------------------------------------------------------

பின்னணி

கடந்த 24 ம் திகதி பி.பி.சி ஊடகங்கள் பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் பலமில்லியன் பவுன்ஸ்கள் பெறுமதியான கடனட்டை மோசடிபற்றி செய்தி வெளியிட்டிருந்தனர் இச் செய்தி சாதாரண செய்தியாக இருந்திருக்கும். ஆனால் அசாதாரணமான விடயம் இம் மோசடியில் பிரித்தானிய தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் இணைக்கும் விதத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இச் செய்தியின் ஆதாரமாக சிறீலங்காவின் இலண்டன் தூதராலய பிரதிநிதியான திரு.மக்ஸ்வல் கீகிள் குறிப்பிடப்பட்டிருந்தார்.

பி.பிசியின் கெய்த் டொயிலின் தயாரிப்பில் வெளியான இச்செய்தி ஒருதலைப்பட்சமானதாகவும் ஆதாரங்கள் எதுவுமற்றதாகவும் அமைந்திருந்ததை அனைத்துலக தமிழ் சமூகத்திடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

நாடளாவிய ரீதியில் பிரித்தானிய காவல்துறையினர் இம்மோசடி பற்றி தீவீர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுபற்றி தெரிவித்த ஹம்பசைட் காவல்துறை அதிகாரி இம்மோசடி அனைத்துலக ரீதியாக திட்டமிட்டு நடைபெறுவதாகவும் ஆனால் இதில் விடுதலைப்புலிகளின் தொடர்பு பற்றி தம்மிடம் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார்.

தமிழர் மீதான இப்பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்ட சிறீலங்கா தூதராலயம் பிரித்தானியாவில் வளர்ந்து வரும் தமிழ் சமூகத்தின் வணிகத்தையே இலக்கு வைத்தனர் என்பதே வெளிப்படை.

பிரித்தானியாவில் பலமான தமிழ் அமைப்புக்கள் உள்ள அதேசமயம் அவை பிரித்தானிய அரசுடனும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் நிறுவனங்களுடனும் இணைந்து நீண்டகாலமாக செயற்பட்டுவருகின்றனர்.

பிரித்தானிய தமிழர் சிலரின் சமூகவிரோத செயல்கள் உடனடியாக தமிழ் சமூகத்தினரால் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு அவை களையப்படுவது வழமை. இதுவே தமிழர் ஒரு சிலரின் வன்முறைக் குழுக்கள் அடக்கப்பட்டமைக்கு காரணமாக அமைந்தது.

இலண்டனில் உள்ள சிறீலங்கா தூதராலயம் பிரித்தானியத் தமிழர்களையும் அவர்களது வணிகங்களையும் வேவு பார்ப்பது, மற்றும் நாடு திரும்பும் தமிழர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் கொழும்புக்கு அனுப்பி அங்கு செல்லும் தமிழர்கள் கைது, காணாமல்போதல், சித்திரவதைக்கு உள்ளாக்கல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று பலர் கருதுகின்றனர்.

இலண்டனில் உள்ள சூடானிய தூதராலயம் சூடான் திரும்பும் சூடான் அரசின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள டாபூர் பிராந்திய மக்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் சூடான் தலைநகருக்கு காட்டும்க்கு அனுப்புவதால் அங்கு டாபூர் மக்கள் இறங்கும் போதே கொலை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதை ஒத்த வேலையையே சிறீலங்கா தூதராலயம் செய்து வருகிது.

சிறீலங்காவின் இறைமையுள்ள ‘அரசு’ என்று கருதும் சிலர் இலண்டன் தூதராலயம் பி.பி.சி ஊடாக வெளியிட்ட செய்தியை நம்பியிருக்கக்கூடும். ஆனால் சிறீலங்கா அரசை அரச பயங்கரவாத அமைப்பொன்றாகவே தமிழர்கள் கருதுகின்றனர்.

இலங்கைத் தீவில் சிங்கள தேசத்திற்கு சவாலாக சிறுபான்மை இனமான தமிழினம் நடைமுறை அரசொன்றை கட்டமைத்து திறமையாக வழிநடத்திவரும் யதார்த்தம் சிறீலங்காவை பொறுத்த வரை சகிக்கமுடியாத விடயம்.

நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக கடும் உழைப்புடன் திரைகடல் தாண்டி திரவியம் தேடும் இனம் என்ற அடிப்படையில் தமிழர் வியர்வை, கண்ணீர் ஏன் உதிரம் சிந்தி தூக்கமின்றி சுகங்களை இழந்து விடுதலைப்புலிகளை வளர்த்து போராளிகளின் இரத்தத்தாலும் சதைகளாலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ தேசத்தை சிறீலங்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உயர் ஒழுக்க நெறிகளைப் பேணும் தலைமைத்துவத்துடனும் போராட்ட அமைப்பொன்றுடன் அரசியில் வாழ்வு வாழும் தமிழர்கள் மோசடிகளால் இன்னொருவன் காசால் சுதந்திரம் அடையும் ஈனர்கள் அல்லர்.

கத்திக் கத்தி சாகும் தவளை போன்றே எங்கள் சிறீலங்கா தேச அயலவர் கத்தத் தொடங்கிவிட்டனர்.

ஏனெனில் நாம் முழுமையான விடுதலை வாசலில் நிற்கின்றோம்.

-பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.