Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத்தியவங்கி ஊழல் – அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Arjun-Mahendran.jpg

மத்தியவங்கி ஊழல் – அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய விடேச மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு விசேட மேல்நீதிமன்றில் கடந்த மாதம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் இரண்டாவது முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மத்தியவங்கி-ஊழல்-அர்ஜுன/

சிங்கள அரைசியல் மற்றும் பொருளாதார சிங்களர்களும் சேர்ந்து தான் கொள்ளையடித்தனர். இவரின் குடும்ப பெயர் தமிழ்ஸ் என்பதாலும் வரும் தேர்தல் காரணத்தாலும் இந்த பிடியாணை. இது அப்படியே செத்துப்போகும். 

 

  • 4 weeks later...

குமரன் பத்மநாதனை கொண்டுவந்த மாதிரி அர்ஜுன் மகேந்திரனையும் நாட்டிற்கு கொண்டு வருவோம் - உதய கம்பன்பில 

A government of theirs would bring Arjuna Mahendran to Sri Lanka in the same manner Kumaran Pathmanathan (KP) was brought in, Pivithuru Hela Urumaya (PHU) Leader MP Udaya Gammanpila said today.

http://www.dailymirror.lk/breaking_news/Will-bring-Mahendran-the-same-way-KP-was-brought-Gammanpila/108-173903

 

வரும் நாட்களில் ஒரு முக்கியமானவர் சாட்சி கூண்டில் நின்று அர்ஜான் மகேந்திரனுக்கு எதிராக ஆதாரங்களை வழங்குவார் - சனாதிபதி  


One larger than Mahendran will stand in witness box: President

President Maithripala Sirisena said a person larger than Arjuna Mahendran will stand in the bond scam witness box in the coming days with the legal documents to bring back the prime suspect of the Central Bank bomb scam had been completed.

http://www.dailymirror.lk/top_story/One-larger-than-Mahendran-will-stand-in-witness-box-President/155-173897

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kp-mahendran.jpg

குமரன் பத்மநாதனின் நிலைமையே மகேந்திரனுக்கும் ஏற்படும் – உதய கம்மன்பில

குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அதே வழியில் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தங்கள் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனவே முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எங்கு மறைந்திருந்தாலும் நாங்கள் அவரை நாட்டுக்குள் கொண்டுவந்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “கே.பி.க்கு ஏற்பட்ட அதே விதிமுறையை அவர் எதிர்கொள்வார். எனவே அவர் தூங்கும்போது இலங்கை அடையாள அட்டையை தன்வசம் வைத்திருக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்க விரும்புகிறோம், ஏனெனில் அவர் எழுந்ததும் இலங்கையில் இருக்கக்கூடும்.” என்றார்.

அத்தோடு அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசைக் கோருவதற்கு சட்டமா அதிபர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “சட்டமா அதிபரின் செயல்திறன் மற்றும் சுதந்திரமான நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவான அவரின் செயற்பாடுகள் ஊழலை மூடி மறைக்கும் செயற்பாடாக காணப்படுகின்றது” என கூறினார்.

இலங்கையில் இருந்தபோது மகேந்திரனை கைது செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என குற்றம் சாட்டிய உதய கம்மன்பில, அவர் நாட்டில் இருந்தபோது மத்திய வாங்கி ஊழலுக்கு பின்னல் இருந்த அரசியல்வாதிகளை வெளிப்படுத்துவேன் என கூறியதால் அரசாங்கத் தலைவர்கள் அவரை கவனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்” என குற்றம் சாட்டினார்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய வங்கி பிணைமுறியின் முக்கிய சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் தயாராகிவிட்டது என்றும் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகளை சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/will-bring-mahendran-the-same-way-kp-was-brought-gammanpila/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.