Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்படுகின்றன’

Featured Replies

2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00

 

இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடுவித்தமையானது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாகவிருக்கும் நீர் ஒப்பந்தத்தை மீறும் இந்தியாவின் முயற்சியொன்றின் அங்கமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இராஜதந்திர ரீதியாக இந்தியா பாகிஸ்தான தனிமைப்படுத்த முயல்வதாகவும், பொருளாதாரத்தை சிதைக்க முயல்வதாகவும், நீர் வளங்களை சிதைக்க முயல்வதாகவும் தெரிவித்த பாகிஸ்தானின் நீர் மற்றும் சக்தி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் முஸம்மில் ஹுஸைன், பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனத்தில் நீர் தாக்கம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு, பாகிஸ்தானும் உரிமை கோரும் காஷ்மிர் பிராந்தியத்தின் தமது பகுதியிலுள்ள பிராந்தியத்தின் சிறப்புரிமையை நீக்கும் இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து ஏற்கெனவே கொதிகளமாகவுள்ள அயல் நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்தியாவின் முடிவுக்கு கோபமாகப் பதிலளித்த பாகிஸ்தான், போக்குவரத்து, வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்ததுடன், இந்தியாவின் தூதுவரையும் வெளியேற்றிருந்தது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இந்தியாவும்-பாகிஸ்தானும்-முரண்படுகின்றன/50-237075

 

விமானி அபிநந்தனை சித்ரவதை செய்த பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில், பிப்ரவரி 14-ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

Abhinandan

அப்போது நடந்த சண்டையில், இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழே விழுந்துள்ளது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்தது.

அப்போது, விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான் விசாரணை நடத்தினார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு வகையில் அவரை சித்ரவதை செய்தனர். இதையடுத்து, உலக நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விமானி அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இந்த நிலையில், அபிநந்தனை சித்ரவதைசெய்த பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான், இந்திய ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லபட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டிய நாக்யால் என்ற பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். பாகிஸ்தான் வசம் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிக்கொண்டபோது, புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், அபிநந்தனுக்குப் பின்புறமாக அவர் நின்றுகொண்டிருந்தார்.

https://www.vikatan.com/news/india/pakistani-commando-who-captured-and-tortured-abhinandan-killed-by-indian-army-along-loc

 

காஷ்மீர் விஷயத்தில் அடங்காத பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் இறங்கியது

 

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்யும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.

இந்தியா | Edited by Musthak (with inputs from Reuters) | Updated: August 20, 2019 21:57 IST
 

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அப்செட்டில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு நாசம் செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. அத்துடன் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி தொந்தரவும் கொடுத்தது.

இந்த நிலையில் கடந்த 5-ம்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், அதனை காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக அமைக்கவும் அறிவிப்பு செய்தது.

இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐ.நா. சபையில் இந்த விவகாரத்தை கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்தியா காப்பாற்றி வருகிறது. இதைப் போன்று சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ndtv.com/tamil/kashmir-issue-pakistan-to-approach-world-court-against-indias-move-on-kashmir-reports-2087978?pfrom=home-topscroll

 

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தானுக்கு அங்கு மூக்குடைப்பே மிஞ்சியது. இந்நிலையில், இந்த விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்தில், முறையிட போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2348941

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐந்தாவது தலைமுறை, போர்முறை.....  என்றால், 
மகாத்மா காந்தியின், தாத்தா காலத்து போர் முறை என நினைக்கின்றேன். :grin:

  • தொடங்கியவர்

"அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் இந்தியாவால் கொல்லப்படவில்லை"

இந்தியாவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளில் உண்மை இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளதாக பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தெரிவிக்கிறார்.

ஆகஸ்டு 17ஆம் தேதியன்று பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள கெல் செக்டரில் நடைபெற்ற எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் நாயிப் சுபேதார் அகமது கான் என்ற பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பிடித்த சிப்பாய்தான் இவர் என்பது உறுதி செய்யப்படவில்லை

அவர்தான் அபிநந்தனை பிடித்தார் என்ற இந்திய ஊடகங்களின் கூற்றை பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

இருவரும் வேறுவேறு நபர்கள் என்றும், எனினும் பாகிஸ்தானின் சிப்பாய்கள் அபிநந்தனை உள்ளூர் மக்கள் தாக்காமல் தங்களின் பிடியில் எடுத்து அவர் உயிரை காப்பாற்றியதற்கு இந்தியா நன்றி கூற வேண்டும் என்றும், படைகள் அவரை காப்பாற்றவில்லை என்றால், அவர் கோபம் நிறைந்த அந்த கூட்டத்தால் கொல்லப்பட்டிருப்பார் என செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார்.

மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவித்தது.

வீர தீர செயல்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதுதான் "வீர் சக்ரா".

https://www.bbc.com/tamil/global-49421309

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.