Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீசா கட்டண நீக்கம் 48 நாடுகளுக்கு நீடிப்பு

Featured Replies

Wednesday, August 28, 2019 - 4:26pm

வீசா கட்டண நீக்க நடைமுறையானது, 48 நாடுகளுக்கு நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கு வீசா பெறும்போது அறவிடப்படும் கட்டாய வீசாக் கட்டணமான 35 அமெரிக்க டொலரிலிருந்து 48  நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது..

இந்த நடைமுறை ஓகஸ்ட் மாதத்திலிருந்து 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அண்மைய பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இலங்கை பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. எவ்வாறாயினும், 48 நாடுகளுக்கான வீசாக் கட்டணத்தில் விலக்கு உள்ளிட்ட மூலோபாய நடைமுறைகள் மூலம் இந்நிலைமையை விரைவாக வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.  அண்மையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் மூலம், இலங்கை வருவதில் நிலவும் அனைத்து தடைகளும் இப்போது அகற்றப்பட்டுள்ளன” என சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாம் தற்போது சிறப்பான குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளோம். அது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற உச்ச காலப்பகுதியாகும். இலவச வீசா நடைமுறை திட்டம் மற்றும் குறைக்கப்பட்ட விமானச்சீட்டு கட்டணங்கள் காரணமாக, இலங்கையானது தற்போது சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் அதிக கேள்விக்குரிய இடமாக மாறியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமான பெறுபேறுகளை கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் காணக்கூடியதாக இருந்தது. இக்காலப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை முறையே 37,000, 67,000, 117,000என பாரியளவில் அதிகரித்திருந்ததாக சபை அறிவித்துள்ளது. இதன் மூலம் மேலும் சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பு ஏற்படும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஆயினும் இதன் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வருமானம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வீசா கட்டணப்பு நீக்கம் காரணமாக வரும் சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பின் மூலம் பெறப்படும் பாரிய வருமானம் இதன் மூலம் ஈடுகட்டப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கம்போடியா, சீனா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லத்வியா, லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேஷியா, மோல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவாகியா குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, உக்ரைன்,ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா.

http://www.thinakaran.lk/2019/08/28/உள்நாடு/39420/வீசா-கட்டண-நீக்கம்-48-நாடுகளுக்கு-நீடிப்பு

  • தொடங்கியவர்

Govt. says visa still required, only fee waived off

The Government yesterday clarified that visa is still required for citizens of 48 countries to enter Sri Lanka, but the fee has been waived off to boost tourism post-Easter Sunday tragedy.

“It has been misconstrued that free visa means visa isn’t required to enter Sri Lanka. This is not correct. There is only a visa fee exemption, but all visitors have to obtain a visa,” Sri Lanka Tourism Development (SLTDA) Chairman Johanne Jayaratne told journalists.

“Only the fee has been waived off, and there is no exemption of the visa requirement to enter the country. It is still necessary for tourists to have visa prior to arrival,” added Immigration and Emigration Controller General Pasan Ratnayaka.

http://www.ft.lk/front-page/Govt-says-visa-still-required-only-fee-waived-off/44-684800

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.