Jump to content

கிளைகளில்லாத வங்கி : challenger bank


ampanai

Recommended Posts

உலகத்தில் எல்லோருக்கும் பணம் என்றால் என்ன என்று தெரியும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிறார்கள் எமது முன்னோர்கள். 

அதிகமான மக்கள் அதிக பணம் இருந்தால் சுகமாக, ஆரோக்கியமாக மற்றும் மனத்திற்கு விரும்பியதை செய்து  வாழலாம் என நம்புகிறாரக்ள். பெற்றோர்கள் பிள்ளைகள் கை நிறை பணம் சம்பாதித்து வாழவேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக தாம் கடுமையாக உழைக்கின்றார்கள். 

இந்த பணம் என்பதுடன் வங்கிகள் பின்னிப் பிணைந்துள்ளன. அரசு ஒன்று மத்திய வங்கியை கொண்டிருக்கும். அதை சார்ந்து தனியார் வங்கிகள் இருக்கும். இவை மக்களுக்கு பலவேறு கடன்களை கொடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும். அப்பொழுது அதில் நட்டம் வந்தால் அரசுகள் மக்கள் வரிப்பணத்தில் அந்த வங்கிகளை காப்பாற்றுவதும் உண்டு. வங்கிகளை கைவிட்டதும் மக்களை ஏமாற்றிய வங்கிகளும் உண்டு. 

ஆனால், இன்றை தலைமுறை ஏன் நாம் வங்கிகள் சம்பாதிக்க உதவ வேண்டும்? என சிந்திக்க தொடங்கினர். 

விளைவு - உருவானது கிளைகள் இல்லா வங்கிகள். 

இவ்வாறான புதிய வங்கிகள் பல மேலை நாடுகளிலும் உள்ளன. ஆனால், இவை அநேகமாக இலாபம் சம்பாதிக்கும் திறன் அற்றவையாக   உள்ளன. காரணம், அடைமான கடன், மற்றும் கடன் மட்டை கடன்களை மக்களுக்கு தருவதில்லை.    

நீங்கள் வாழும் நாடுகளில் இவ்வாறான வங்கிகள் இருக்கலாம். சில இவ்வாறான வங்கிகள் பெரிய வர்த்த வங்கிகளுடன் இணைந்து வேறு கடன்களையும் வழங்கலாம்.  அதன் மூலம் நீங்கள் பணத்தை சேகரிக்கலாம். 

ஆக்கம் : சுயம் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.