Jump to content

சீன பொருட்களுக்கான வரி விதிப்பு ஒத்திவைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.jpg

சீன பொருட்களுக்கான வரி விதிப்பு ஒத்திவைப்பு!

சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை நல்லெண்ண நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில், ‘சீனாவில் 70-வது தேசிய தினம் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டொலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு ஒக்டோபர் 1ஆம் திகதி பதில் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமலுக்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக சீனா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சீன-பொருட்களுக்கான-வரி-வ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.