Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அராஜகங்கள் சர்வதேச மட்டத்தில் அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அராஜகங்கள்

சர்வதேச மட்டத்தில் அம்பலம்

தென்னிலங்கையிலும், அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் வகைதொகையின்றி இடம்பெறும் மனிதப் படுகொலைகள், கேட்டுக் கேள்வியின்றி நடைபெறும் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல மட்டங்களிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

அரசுத் தரப்பில் ஒட்டிக்கொண்டிருந்தபோதிலும் மனச்சாட்சி காரணமாக, இந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியோர் மேலிட அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதனால் அமுக்கி வாசிக்க வேண்டியவர்களுமானார்கள்.

இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய வேறு சிலரோ மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். ரவிராஜ் எம். பி. போன்றோர் அதே மனித உரிமை மீறல் முறையின் கீழ் நிரந்தரமாகவே குரல் அடைக்கப்பட்டனர். சில ஊடகவியலாளர் மிரட்டப்பட்டனர்.

ஆரம்பத்தில் இந்தக் கொடூரங்களுக்காக கொதித்தெழுந்த வேறுசில தலைவர்களோ, தாமாகவே திடீரென அடங்கிப்போய், நாட்டில் அப்படி ஒன்றுமே தவறாக நடக்கவில்லை என்பது போல மௌனம் காக்கின்றனர். அதன் பின்னால் உள்ள மர்மங்கள் பல ஊகங்களுக்கு வழி செய்து நிற்கின்றன.

அதேவேளை, இந்த அட்டூழியங்களுக்கு எதிராகச் சளைக்காமல் குரல் கொடுத்த வேறு சில தலைவர்களுக்கு எதிராக, இல்லாததும் பொல்லாததுமான குற்றச்சாட்டுகள் அவிழ்த்து விடப்பட்டு புதுக்கதைகள் புனையப்பட்டன. அவர்களது குரல் வளையை அடக்கப் பல்வேறு எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன; மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த தேர்தலில் தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்து உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி பெரிதுபடுத்தி அரசியல் நடத்துகின்றார்கள் இவர்கள் என்றும் இவர்கள் மீது குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது.

மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அரசுத் தலைமையின் ஆசியோடும் அங்கீகாரத்துடனும் ( ஏன் ஆணையோடும் கூட என்று சொல்லலாம்) இடம்பெறும் இந்த மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து எந்தத் தலைவர்கள் என்ன நோக்கத்துக்காக குரல் எழுப்பினாலும் வேறு தலைவர்கள் வேறு நோக்கங்களுக்காக அமைதியும் நிசப்தமும் பேணி மௌனம் காத்தாலும் அந்த அத்துமீறல் அராஜகங்கள் எந்த மட்டத்துக்கு எட்டவேண்டுமோ, அந்த மட்டத்துக்கு எட்டிவிட்டன என்பது மட்டும் ஆறுதலான விடயம்.

சட்ட ரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொண்டு, சட்டத்துக்கும் நீதிக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் புறம்பாக இடம்பெறும் அராஜகங்களை அரசுத் தலைமை பார்த்துக் கொண்டிருந்து அவற்றை அனுமதிப்பதையோ அல்லது மறைமுக ஆதரவும், ஆசியும், ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் வழங்குவதையோ உலகம் இனிமேலும் சகித்துக்கொண்டிராது என்ற உண்மை அரசுத் தலைமைக்கு மெல்ல மெல்ல உறைப்பாக புரியவைக்கப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகியுள்ளது.

இலங்கையின் மோசமான நிலைமை கருதி ஏற்கனவே இலங்கைக்கான கணிசமான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமை நாடான ஜேர்மனி நிறுத்தி விட்டது.

இப்போது பிரிட்டனும் இலங்கைக்கான தனது உதவிகளை முடக்கியிருக்கின்றது என்ற தகவல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின

எல்லாம் எங்கட மகிந்த மாமாவின்ர மந்திக்குட்டங்களின்ர திருவிளையாடல்கள் தானுங்கோ தப்பித்தவறி ரணில எண்ட பொன்னையன் வந்திருந்தா நிலமை தலைகிழாய் போயிருக்கும் இப்ப தான் மகிந்தவுக்கு தலைகால் தெரியாமல் வரப்போகுது தன்ர தம்பி தோத்பாயவின்ர விளையாட்டுகள் புரியப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.