Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்பின் அரசியலுக்கு சிரியா முடிவுரை எழுதுமா?

Featured Replies

டிரம்ப்படத்தின் காப்புரிமை Getty Images

 

சிரியா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள், தனக்கு தானே அவர் உருவாக்கிக் கொண்ட பேரழிவாக ஆகலாம் - 2020 தேர்தலில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் பி.ஜே. கிரவ்லே.

சிரியா தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய முடிவுகளை உள்ளடக்கிய ஷரத்து எதுவும், அவருடைய குற்றச் செயல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தில் இருக்காது. ஆனால் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் சரணாகதி அடைவதைப் போன்ற அவருடைய நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், டிரம்பின் அதிபர் பதவியின் முடிவுக்கான தொடக்கமாக இருக்கலாம்.

பதவி நீக்கத் தீர்மானத்தில் டிரம்ப் தப்பிவிடுவார் - குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ள செனட் அவரைத் தண்டிக்க வாய்ப்பில்லை - இருந்தாலும் அவருக்கு அவரே எதிரியாக இருக்கிறார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் பேசியது ``முழுமையாக'' அமைந்துவிட்டது என்று அதிபர் நம்புகிறார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குற்றச் செயல் நடந்திருப்பதற்கு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆனால் உள்நாட்டு அரசியலில் மறைந்திருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வரும் பரிசோதனையாக உக்ரைன் ஏற்கெனவே மாறிவிட்டது - பதிலுக்குப் பதில் என்ற வகையில் உள்ளது. ஆனால் அதை நல்ல விஷயமாகவே டிரம்ப்பின் ஆதரவாளர்கள் இன்னும் பார்க்கின்றனர்.

ஆனால், சிரியா மாறுபட்டது. பராக் ஒபாமா அல்லது ஜனநாயகக் கட்சியின் மீது குற்றஞ்சாட்டக் கூடிய விஷயமாக அது இருக்காது. புதிய தடைகள் மூலம் துருக்கியை தண்டிக்க வேண்டும் என்பது டிரம்ப் நிர்வாகத்தின் எண்ணமாக இருந்தாலும், இது பெருமளவு டிரம்ப் உருவாக்கிய சிக்கலாகவே உள்ளது.

சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது என்று டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலான மற்றும் அதிக செலவு ஏற்படுத்தும் மத்தியக் கிழக்கு சர்ச்சைப் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவோம் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது.

``பொருத்தமற்ற, முடிவில்லாத இந்தப் போர்களில் இருந்து நாம் வெளியேற வேண்டிய தருணம் இது'' என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும், ``நமக்கு பயன் கிடைக்கும் இடங்களில் மட்டுமே நாம் போரிடுவோம், வெற்றி பெறும் வகையில் போரிடுவோம்'' என்று ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல தவறான, சர்ச்சைக்கு இடமளிக்கும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளைப் புறக்கணித்துவிடலாம் என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், இந்த விஷயத்தில் டிரம்பை ஒரு புத்தகம் போல எர்துவான் படித்து, பிடிலைப் போல அவரை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

துருக்கி எல்லையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட குர்து பிராந்தியம் உருவாகாமல் தடுப்பதற்காக சிரியாவுக்குள் தனது படைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தொலைபேசி உரையாடலின்போது டிரம்ப்பிடம் எர்துவான் கூறியபோது, டிரம்ப் குறைந்தபட்ச எதிர்ப்பு தான் காட்டுவார் என எதிர்பார்த்தார்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த மற்றொரு தொலைபேசி உரையாடலின் போது, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது பற்றி டிரம்ப் கோடிட்டுக் காட்டியிருந்தார். ``ஓ.கே. அது உங்கள் பிரச்சினை. எங்கள் வேலை முடிந்துவிட்டது'' என்று டிரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பின் தாக்கங்களை சமாளிக்க முயற்சிக்கும் வகையில் ``முதிர்ச்சி கொண்ட'' பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்த பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ராஜிநாமா செய்தார்.

செயலில் இறங்குவது என பத்து மாதங்கள் கழித்து, எர்துவான் முடிவு செய்தபோது, திறந்திருக்கும் கதவின் மீது மோதப் போகிறோம் என்று அவர் அறிந்திருந்தார்.

டிரம்ப்பின் கொள்கைக்கு இரு கட்சிகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கோன்னெல் கூட விமர்சித்தார். படைகளை வாபஸ் பெறுவதை ஆதரித்த அமெரிக்கர்கள் பலர் மத்திய கிழக்கில் போர்கள் குறித்து அஞ்சினர்.

ஆனால், மிக மோசமான முறையில் அதை டிரம்ப் செய்தார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் உருவாகிவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்க படையின் சிறிய ஒரு பிரிவும், பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு படைப் பிரிவுகளும் அங்கிருந்தன. சிரியா எப்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, நிர்வாகம் எப்படி நடைபெறப் போகிறது என்ற தூதரக நடைமுறை நிறைவு பெறும் வரையில் இடைக்கால ஏற்பாடாக அந்தப் படைப் பிரிவுகள் அங்கு இருந்தன.

வணிகப் பின்னணி கொண்டவராக இருந்தாலும், புதிய மற்றும் மேம்பட்ட சிரியாவை உருவாக்குவதற்கு அமெரிக்காவுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் ரஷ்யா, ஈரான், ஆசாத் தலைமையிலான சிரியா நிர்வாகம் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடிக்கு தவறவிட்டு விட்டார்.

அமெரிக்கா வாபஸ் ஆனதால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு சிரியா மற்றும் ரஷ்யப் படைகள் சென்றுவிட்டன. துருக்கி ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குர்து காவலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் தப்பிவிட்டனர். ஈரானுக்கு எதிராக நெருக்கடி தரும் வகையில் எடுத்த டிரம்ப்பின் முயற்சிகள் என்ன பலனைத் தந்தன என்பதை அனைவரும் ஊகித்துக் கொள்ள முடியும்.

 

 

டிரம்ப் ஆதரவாளர்கள் படைகளை வாபஸ் பெறுவதை ஆதரிக்கின்றனர்

பிபிசி செய்தியாளர் லாரென் டனரின் கருத்து

``நாம் எதற்காக உலகின் போலீஸ்காரராக இருக்க வேண்டும்?''

மத்திய மின்னியாபோலிசில் பேரணியில் கலந்து கொண்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலருக்கு, - அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதற்குப் பிறகு - சிரியா மீது துருக்கி நடத்திய தாக்குதல் பற்றிய கருத்து ஒரே மாதிரியாக இருந்தது.

``துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையிலான பிரச்சினைகளில் நமது படைகளின் தலையீட்டை நிறுத்திக் கொண்டது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்'' என்று 24 வயதான அலெக்ஸ் லெடெஜ்மா கூறினார். ``அவர்களைக் காத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

``அங்கே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நூறாண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நமது பிரச்சினை அல்லாத ஒரு விஷயத்துக்காக, நம் மக்கள் எத்தனை பேர் அங்கு உயிரிழக்க வேண்டும்? நாம் அங்கே இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்'' என்று 52 வயதான மெலிஸ்ஸா எர்ரா கூறினார்.

ஆனால் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற எரிக் ரட்ஜியெஜ் கருத்து வேறு மாதிரியாக உள்ளது.

``இவ்வளவு சீக்கிரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெற்றது தவறானது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அது மோசமாக இருந்தால், நாம் திரும்பிச் செல்ல மாட்டோம் என ஒருபோதும் கூறியது இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிச் செல்வதற்கு நாம் நீண்ட காலம் காத்திருந்தோம்.''

``அங்கே செல்லக் கூடிய மற்ற பங்காளர்கள் உள்ளனர். உலகின் பாரத்தை எப்போதும் நாம் சுமந்து கொண்டிருக்க முடியாது'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால், அமெரிக்காவை ஒரு தோழமை நாடாகக் கருதும் நம்பகத்தன்மை, மத்திய கிழக்கு மற்றும் அதையும் தாண்டிய விஷயங்களில் கேள்விக்குறி ஆகிவிட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளின் போது அமெரிக்கப் படைகளுக்கும் குர்துகளுக்கும் இடையில் உருவான உறவின் முக்கியத்துவத்தை டிரம்ப் நிராகரித்துள்ளார். ரக்கா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பகுதிகளை மீட்ட படைகளுக்கு முன்னணி படைகளாக குர்துகள் இருந்துள்ளனர்.

குர்துகள் ``நார்மாண்டியில் எங்களுக்கு உதவி செய்யவில்லை' என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அங்கே விவரிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது சில குர்துகள் நேசப் படையினரின் பக்கம் இருந்து பங்கேற்றனர். ஆனால் அப்போது அங்கீகரிக்கப்பட்ட குர்து அரசாங்கம் எதுவும் இல்லை, அல்லது சொல்லப் போனால் இப்போதும் கூட இல்லை.

இப்போது அமெரிக்காவின் தீவிர ஆதரவாக உள்ள ஜெர்மனியும் ஜப்பானும், அப்போது எதிரெதிராக இருந்தன. மற்ற நாடுகள் - தென்கொரியா மற்றும் இஸ்ரேல் - ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன அல்லது சுதந்திர அரசுகளாக இல்லை.

தங்களுடைய பாதுகாப்பு மற்றும் மனித உரிமை தொடர்பான சட்ட பூர்வ விஷயங்களை நிறைவேற்றத் தவறிய நிலையில், வடகொரியாவைக் கையாள்வதில் டிரம்ப்பின் போக்கு குறித்து ஜப்பானும் தென்கொரியாவும் ஏற்கெனவே அதிருப்தியில் உள்ளன. குர்துகள் தொடர்பாக டிரம்ப்பின் நடவடிக்கைகள், அந்தக் கவலைகளை அதிகரிப்பதாக மட்டுமே இருக்கும்.

மத்திய கிழக்கில் தங்கள் பாதுகாப்புக்காக அமெரிக்காவை நம்பியிருக்கும் எந்த நாட்டுக்கும் அல்லது இன்றைக்கு நேட்டோ படைகளில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கும் மறு உத்தரவாதம் தருவதாக எந்த நடவடிக்கையும் அமைந்திருக்கவில்லை. அவை டிரம்ப்பின் தீர்ப்புக்கான நாளின் பரிசோதனையில் தேறும் வகையிலும் இல்லை.

அமெரிக்காவின் டிரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு பின்னர் அதை வாபஸ் பெற்ற - முரண்பட்ட நடவடிக்கைகளால் ஏற்கெனவே சவூதி அரேபியா போதிய அளவுக்கு அதிருப்தி அடைந்துள்ளது - தெஹ்ரானுடன் பின்வாசல் வழியாக பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா முயல்வதாக சவூதி கருதுகிறது. ஈரானை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அந்தப் பிராந்தியத்தின் பிரச்சினையை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆனால் அது ஜெருசலேமில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

இஸ்ரேலின் நுழைவாயிலுக்கு சிரியாவை ஈரான் கொண்டு வந்துவிடும். ஈரானை தனியே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் அதிகமாகக் கருதினால், நேரடி ராணுவ மோதல் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து, தவிர்க்க முடியாமல் அமெரிக்கா தலையிட வேண்டியிருக்கும். இந்த அழிவு சூழ்நிலையைத் தான் ஒபாமாவும் அவருடைய ஐரோப்பிய சகாக்களும் சிந்தித்து செயல்பட்டனர். அணுசக்தி ஒப்பந்தத்துக்கு டிரம்ப் முட்டுக்கட்டை போட்டதால் அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

உலக அளவில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளின் தொடர்பு அதனுடைய தேசப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையாக உள்ளது. அவற்றின் முக்கியத்துவத்தை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டு வருகிறார். அதற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன, தெளிவாக வெளியில் தெரிகின்றன.

அமெரிக்காவின் தலைமைத்துவம் குறித்த சந்தேகங்களை வெளிப்படையாக அறியச் செய்துள்ளார் டிரம்ப். அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தி, அதன் முக்கிய தோழமை நாடுகளின் நலன்களை முன்னிறுத்துவதில், தன்னுடைய முதன்மையான பணியை டிரம்ப் எவ்வளவு மோசமாக செய்து வருகிறார் என்பதை சிரியா கோடிட்டுக் காட்டியுள்ளது.

உலக நாடுகள் தாங்களே தங்களை கவனித்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு, தனது எல்லைக்குள் அமெரிக்கா படைகளை வைத்துக் கொள்ளும் வகையில், படைகளை திரும்பப் பெறுவதில் உண்மையான தாக்கங்கள் உள்ளன.

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆதரிக்கும் நிர்வாக விவகாரமாக இது இல்லை என்பது நல்ல செய்தி. சமீபத்தில் உலக விவகாரங்கள் குறித்து சிக்காகோ கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில், உலக அளவில் அமெரிக்கா அதிக தீவிர பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான கருத்தாளர்கள் உறுதியான முடிவை தெரிவித்திருந்தனர். பிராந்திய அளவில் கூட்டணிகள் உருவாக்கி, சர்வதேச வர்த்தகத்தில் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்

டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூண்களாக உள்ள விஷயங்களை அவர்கள் நிராகரித்திருப்பதை இது காட்டுகிறது. ரஷ்யா பற்றி கண்டு கொள்ளாத செயல்பாட்டுடன், சிரியா பிரச்சினையும் சேர்ந்து, சர்வதேச உறவுகளை அவர் தவறாகக் கையாள்கிறார் என்பதை நிரூபித்துள்ளன. தனது சொந்த அரசியல் நலன்களுக்காக, நாட்டின் நலன்கள் பற்றிய விஷயங்களில் அவர் கவனம் செலுத்தத் தவறிவிட்டார்.

எல்லாவற்றையும் பார்த்தால், டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்படுவது பாதிக்கப்படலாம். வேறு அதிபரை, வேறு வெளியுறவுக் கொள்கையைத் தேர்வு செய்ய அமெரிக்க வாக்காளர்கள் அடுத்த நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு கெட்ட செய்தியாக உள்ளது.

பி.ஜே. கிரவ்லே. அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் மற்றும் Red Line: American Foreign Policy in a Time of Fractured Politics and Failing States-ன் ஆசிரியர்.

https://www.bbc.com/tamil/global-50075452

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.