Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின் எரிச்சலை அறுவடை செய்யும் இலங்கை

Featured Replies

சர்வதேச சமூகத்தின் எரிச்சலை அறுவடை செய்யும் இலங்கை

மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கை அரசுத்தலைமை தொடர்ந்து காட்டிவரும் உதா சீனப் போக்கும், விசேட சட்ட விலக்களிப்பு சிறப்புரிமைகளை வசமாகப் பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்புத்தரப்பு புரிந்துவரும் கொடூரங்களும் சர்வதேச மட்டத்தில் விபரீத மான விளைவுகளை ஏற் படுத்தப்போகின்றன என்பதை முற்கூட்டியே இப்பத்தியில் மீண்டும் மீண்டும் வலி யுறுத்தி வந்தோம். அதுவே இப்போது யதார்த்தமாகி வருகின்றது.

சர்வதேச நிலைப்பாடு இலங்கை அரசுத் தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு, உருக்கொண்டு, விஸ்வ ரூபம் எடுத்திருப்பதையும் அதன் விளைவுகளையும் இலங்கை எதிர்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்றே தோன்று கின்றது.

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிகளைப் புறமொதுக்கிக்கொண்டு, தென் னிலங்கைப் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் போரியல் போக்கில் மும்முரமாகச் செயற்படுவதும்

அதற்கிசைவாக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் என இரண்டு முனைகளில் இலங்கை அர சுத் தலைமை முன்னெடுக்கும் தந்திரோபாய அரசியல், இராணுவ நகர்வு சர்வதேசத்தைக் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கின்றது.

ஏற்கனவே இந்தப் போக்கால் சினமடைந்துள்ள முக் கிய ஐரோப்பிய நாடுகள் சில இலங்கைக்கு எதிராக சர்வ தேச மட்டத்தில் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் விசேட கவன ஈர்ப்புப் பிரேரணையைக் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தீவிர முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றன.

இதேவேளை, இலங்கைக்கான நிதி உதவிகளை ஜேர் மனைத் தொடர்ந்து பிரிட்டனும் முடக்கத் தீர்மானித்து விட்டது. இலங்கை அரசுக்கு எதிராக பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் எதிரொலித்த கருத்துகள் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பன வாகக் கொள்ளத்தக்கவை.

இதேசமயம், இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையிலும் செனட் டிலும் இருந்து அமெரிக்க அரசுக்கு கடும் அழுத்தம் எழுந் துள்ள பின்னணியில், அமெரிக்க அரசின் விசேட பிரதி நிதியாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக் கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் நாளை கொழும்பு வருகின்றார்.

பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தாமதியாமல் விரைந்து மேற்கொள்ளு மாறு தெரிவிக்கும் கடுந் தொனியிலான செய்தி ஒன்றை அவர் மூலம் அமெரிக்க அரசுத் தலைமை இலங்கை அரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்க அரசின் செய்தியை ரிச்சர்ட் பௌச்சர் நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கையளிப்பார் என்று தெரிகின்றது.

அமெரிக்க விசேட பிரதிநிதி ரிச்சர்ட் பௌச்சர் தமது இரண்டுநாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பமுன்னர் கொழும்பில் தாம் மேற்கொள்ளும் ஊடக வியலாளர் சந்திப்பில் சில முக்கிய விடயங்களை வெளிப்படுத்தக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இனப்பிரச்சினை விவகாரத்தை இலங்கை அரசு கையாளும் போக்குக் குறித்து அதிருப்தி யும் விசனமுமுற்றிருக்கும் இந்திய அரசும், இது தொடர் பான தனது நிலைப்பாட்டை கொழும்புக்குத் தெளிவா கவும், திட்டவட்டமாகவும் தெரியப்படுத்தத் தயாராகி விட்டது என்ற தகவலும் கசிந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க தற்போது புதுடில்லி சென்றுள்ளார். அங்கு வைத்து புதுடில்லி அரசின் உத்தியோகபூர்வ நிலைப் பாடு ஜனாதிபதியின் செயலாளருக்கு விளக்கப்படவிருப் பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதாயின், அதற்கான ஆக்கபூர்வமான பயனுள்ள தீர்வு யோசனையை இலங்கை அரசுத் தரப்பு விரைந்து முன்வைக்கவேண்டும் எனப் புதுடில்லி அண்மைக் காலத்தில் தீவிரமாகவும், முனைப்பாகவும் வலியுறுத்தி வந்தது. அத்தகைய யோசனைத் திட்டத்தைத் தாம் விரைந்து முன்வைப்பார் என இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் புதுடில்லிக்குத் தொடர்ந்து வாக்கு றுதி வழங்கி வந்தார்.

ஆனால் இப்போது அவரது தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனைத் திட்டம் தமிழர் தரப்பின் பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கான அளவுக்கு நியாயமான அடிப்படைத் தன்மைகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்பது புதுடில்லிக்கு கடும் எரிச் சலையும் வருத்தத்தையும் அதிருப்தியையும் கொடுத்தி ருக்கின்றன என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், புதுடில்லியில் இலங்கை ஜனாதிபதி யின் செயலாளருக்கு கடும் "அர்ச்சனைகள்'விழலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிடுகின்றன.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சர்வதேசத் தின் நிலைப்பாட்டைக் கருத்தில் எடுக்காது, கடந்த சுமார் ஒன்றரை வருடங்களாக கொழும்பு அரசுத் தலைமை எதேச்சாதிகாரமாக செயற்பட்டதன் விளைவுகளை இலங்கை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது என் பது தெளிவாகத் தோன்றுகின்றது.

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, இனப்பிரச்சினை விவகாரத்தை இலங்கை அரசு கையாளும் போக்குக் குறித்து அதிருப்தி யும் விசனமுமுற்றிருக்கும் இந்திய அரசும், இது தொடர் பான தனது நிலைப்பாட்டை கொழும்புக்குத் தெளிவா கவும், திட்டவட்டமாகவும் தெரியப்படுத்தத் தயாராகி விட்டது என்ற தகவலும் கசிந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க தற்போது புதுடில்லி சென்றுள்ளார். அங்கு வைத்து புதுடில்லி அரசின் உத்தியோகபூர்வ நிலைப் பாடு ஜனாதிபதியின் செயலாளருக்கு விளக்கப்படவிருப் பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதாயின், அதற்கான ஆக்கபூர்வமான பயனுள்ள தீர்வு யோசனையை இலங்கை அரசுத் தரப்பு விரைந்து முன்வைக்கவேண்டும் எனப் புதுடில்லி அண்மைக் காலத்தில் தீவிரமாகவும், முனைப்பாகவும் வலியுறுத்தி வந்தது. அத்தகைய யோசனைத் திட்டத்தைத் தாம் விரைந்து முன்வைப்பார் என இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் புதுடில்லிக்குத் தொடர்ந்து வாக்கு றுதி வழங்கி வந்தார்.

ஆனால் இப்போது அவரது தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனைத் திட்டம் தமிழர் தரப்பின் பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கான அளவுக்கு நியாயமான அடிப்படைத் தன்மைகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்பது புதுடில்லிக்கு கடும் எரிச் சலையும் வருத்தத்தையும் அதிருப்தியையும் கொடுத்தி ருக்கின்றன என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், புதுடில்லியில் இலங்கை ஜனாதிபதி யின் செயலாளருக்கு கடும் "அர்ச்சனைகள்'விழலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிடுகின்றன.

இலங்கை அரசுக்கு இந்தியாவிடம் இருந்து அர்ச்சனை விழும் என்று இன்னும் தமிழர்களில் சிலர் நம்புகிறார்கள். உண்மையில் இந்தியா, தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு ஆயூதங்கள் குடுத்தும், பிரித்தானியாவின் இலங்கைப் பிரச்சனையில் தற்பொழுது கொண்டுள்ள அக்கரை பற்றி கவலைப்பட்டும், விடுதலைப்புலிகளை அழிக்கவும், தமிழகத்தில் புலிகளின் ஆதரவைக்குறைக்கவும் சதி வேலைகள் செய்யும்.

நெடுமாறன் அய்யாவின் உதவியினால் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களையே ஈழத்தமிழ் அகதிகளுக்கு செல்வதைத் தடுக்கும் இந்தியா அரசு, இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்து வெளியிடும் என்று நினைப்பது நம்பமுடியாத விடயம்.

தமிழக மக்கள் திரட்டிய பொருட்களை யாழுக்கு அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுப்பு: பழ.நெடுமாறன்

- புதினம்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக மக்கள் திரட்டித்தந்த பொருட்களை அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லும் சாலையை மூடி யாழ். மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்லவிடாமல் சிங்கள அரசு தடுத்து வருவதன் விளைவாக சுமார் 5 லட்சம் மக்கள் பட்டினியுடன் வாடுகிறார்கள் என்ற செய்தியை அறிந்து தமிழக மக்களிடம் உணவுப்பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றைத்திரட்டி அனுப்பிவைப்பது என முடிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி இதற்கான முயற்சிகளை தொடங்கினோம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் மனிதநேய உணர்வுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டு உணவு, மருந்துப்பொருட்களை திரட்டினர். அவற்றை கையளிக்கும் விழாக்களும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி மற்றும் மருந்து பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக நிர்வாகிகளைச் சந்தித்து இப்பொருட்களைக் கையளிப்பது குறித்துப்பேசினோம். அவர்களும் இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்க தலைமைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள்.

கடந்த 14.2.2007 அன்று இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமரை சந்தித்து இந்த பொருட்களை உடனடியாக அனுப்பிவைக்க உதவும்படி வேண்டிக்கொண்டார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 13.4.2007 அன்று சமதா கட்சித் தலைவரான ஜார்ஜ் பெர்ணான்டஸ் இது குறித்த கடிதம் ஒன்றினை இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பினார். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் இதுவரை இந்த பொருட்கள் அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

சேகரிக்கப்பட்ட அரிசி, பருப்பு போன்றவை பூச்சி, வண்டுகள், எலிகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயமும், சேகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் காலாவதியாகிவிடக்கூடிய அபாயமும் உள்ளன. உரிய வேளையில் இவை யாழ் மக்களுக்கு கிடைக்கும்படி செய்தால்தான் பயன் உண்டு. பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், மருந்துகள் பற்றாக் குறையினால் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நோயாளிகளுக்கும் உதவவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் திரட்டித்தந்த இந்த பொருட்களை அனுப்பவிடாமல் இந்திய அரசு தாமதம் செய்வது சரியல்ல. உடனடியாக உரிய அனுமதியைத் தந்து இப்பொருட்களை அனுப்ப உதவும்படி வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உலக ரீதியில் இயங்கக்கூடிய பொதுவான அமைப்பு அதன் மூலம் இப்பொருட்களை அனுப்ப நாங்கள் முயற்சிக்கிறோமே தவிர வேறு சட்டவிரோதமான வழியில் அல்ல.

பல்வேறு கட்சித்தலைவர்களின் வேண்டுகோளையும் புறக்கணித்து இந்திய அரசு தொடர்ந்து இவ்வாறு செயல்படுமானால் இப்போக்கிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் நெடுமாறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.